Tuesday, 17 June 2014

வாதம்-பித்தம் -கபம்


”எதைத் தின்னால் இந்த ’பித்தம்’ தெளியும்? ஒருவேளை ’வாதக்’க் குடைச்சலாய் இருக்குமோ? நெஞ்சில் ’கபம்’ கட்டியிருக்கு...”,என்கிற வசனங்கள் இன்று கொஞ்சம் கொஞ்சமாய் வழக்கொழிந்து வருகிறது. ஆனால், நம் மூத்த தலைமுறையில் இவ்வரிகள் ரொம்ப முக்கியமானவை. இன்னும்கூட நம் பாட்டி தாத்தா இப்படிப் பேசிக் கொள்வதை, கிராமங்களில் மருத்துவரிடம் தம் நோயை அவர்கள் இப்படிச் சொல்வதை பார்க்க முடியும். நாகரீக அனாதைகளாகி வரும் இளையதலைமுறையான, இன்றைய ’கூகிள்’ தலைமுறைக்கு, இது புதுசு. லூலூபி பாடுவதில் இருந்து, வெண்பொங்கலுக்கு மிளகை எப்போ போடணும்?, மயிலாப்பூர்ல ஏழு சுத்து கை முறுக்கு எங்கே கிடைக்கும் –ங்கிற வரை எல்லாத்தையுமே கம்ப்யூட்டரில் தேடும் அவர்கட்கு இந்த ”வாதம் பித்தம் கபம்” எனும் வார்த்தைகள்- வரிவிலக்கு பெற்று வந்திருக்கும் தமிழ்ப் பட டைட்டிலோ என்று மட்டுமே யோசிக்க வைக்கும்.

”வாதம், பித்தம், கபம்” -அல்லது ”வளி, அழல், ஐயம்” என்னும் மூன்று விஷயங்களும் நம்ம பாரம்பரிய மருத்துவத்தின் அடித்தளங்கள். உடலின் ஒவ்வொரு அசைவையும் நகர்த்தும் உயிர்த் தாதுக்கள் அவை. அப்ப அதல்லாம் சித்தா ஆயுர்வேத டாக்டர்கள் சமாச்சாரமாச்சே.. நமக்கெதுக்கு? என நகர வேண்டாம். இந்த வாத பித்தம் கபம் குறித்த அடிப்படை அறிவு நம் ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டும். முன்பு இருந்திருந்தது. ”ஐய்யோ..ஐஸ்கிரீமா? த்ரோட் இன்ஃபெக்‌ஷனாயிடும்! ரோட்டோர பரோட்டாவா..அமீபியாஸிஸ் வந்துடப் போகுது,” என்ற அறிவை வளர்க்கும் நாம், “உருளைக்கிழங்கு போண்டா நமக்கு வேண்டா. அது வாயு கொடுக்கும். வாதக் குடைச்சல் வந்துடும். மழை நேரத்தில தர்பூசணி எதுக்கு கபம் கட்டிக்க போகுது”-என்கிற மாதிரியான நம் தினசரி உணவும் அது அதிகரிக்க அல்லது குறைக்க வைக்கும் உடலின் இந்த மூன்று முக்கிய விஷயங்கள் குறித்த அறிவும் தெரிந்திருக்க வேண்டும். அந்த அறிவை இந்த வாரம் கொஞ்சம் இப்படி தீட்டுவோமா?.
”முத்தாது” என்று தமிழ் சித்தத்திலும் ”த்ரீதோஷா” என்றூ ஆயுர்வேதத்திலும் பேசப்படும் இந்த மூன்று விஷயத்தை தான் ”மிகினும் குறையினும் நோய் செய்யும் நூலோர் தொகுத்த வளி முதலாய மூன்று”- என்று நம் திருவள்ளுவர் நோயின் அடிப்படையாகச் சொல்லியிருக்கிறார்.

இந்த வாதம், நம் உடலின் இயக்கத்தை தசை, மூட்டுக்கள், எலும்பு இவற்றின் பணியை, சீரான சுவாசத்தை சரியான மலம் கழிப்பதை எல்லாம் பார்த்துக் கொள்ளும். பித்தம், தன் வெப்பத்தால் உடலை காப்பது. இரத்த ஓட்டம், மன ஓட்டம், சீரண சுரப்புகள், நாளமில்லா சுரப்புகள் - போன்ற அனைத்தையும் செய்வது. கபம் உடலெங்கும் தேவையான இடத்தில் நீர்த்துவத்தையும் நெய்ப்புத்தன்மையையும் கொடுத்து எல்லா பணியையும் தடையின்றி செய்ய உதவியாய் இருப்பது. இந்த மூன்று வாத பித்த கபமும் சரியான கூட்டணியாய் பணிபுரிந்தால் உடம்பு எனும் பார்லிமெண்ட் ஒழுங்காய் நடக்கும். ஒண்ணு ”காமன் வெல்த்”திலும்-இன்னொன்று அலைக்கற்றை ஒதுக்கீட்டிலும் சேட்டை செய்தால்- ஒரே நோய்களின் கூச்சலும் குழப்பமும் தான் உடம்பு பார்லிமெண்ட்டில் ஓடும்.

இந்தக் கூட்டணி ஒழுங்காய் வேலை செய்ய உணவு, ரொம்ப முக்கியம். மனமும் பணியும் கூட கூட்டணிப் பணிக்கு அவசியமானது. ஒருவருக்கு மூட்டு வலி உள்ளது. கழுத்துவலி எனும் ஸ்பாண்டிலைஸிஸ் உள்ளதென்றால், வாதம் சீர் கெட்டு உள்ளது என்று பொருள். இந்த வியாதிக்காரர்கள் வாதத்தை குறைக்கும் உணவை சாப்பிட வேண்டும். வாதத்தைக் கூட்டும் உணவை காசியில் விட்டு விடலாம். புளி, உருளைக்கிழங்கு, கொண்டைக்கடலை, துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, வாழைக்காய், கொத்தவரை, காராமணி, குளிர்பானங்கள், செரிமனத்திற்கு சிரமம் தரும் மாவுப்பண்டங்கள் வாயுவைத் தரும். வாதத்தைக் கூட்டும். மூட்டுவலிக்காரர், மலக்கட்டு உள்ளோர், ஆஸ்துமாவில் அதிகம் அவதிப்படுவோர் இந்த உணவைக் கூடியவரை தவிர்க்க வேண்டும். வாயுவை வெளியேற்றும் இலவங்கப்பட்டை, மிளகு, புதினா, பூண்டு சீரகம், மடக்கறுத்தான் கீரை, வாய்விடங்கம், இதனை உனவ்பில் சேர்ப்பது வாத்தை குறைத்திட உதவும்.

பித்தம் அதிகரித்தால் அசீரணம் முதல் டிப்ரஷன் வரை பல பிரச்னை வரக் கூடும். அல்சர், இரத்தக்கொதிப்பு, ஆரம்பநிலை மதுமேகம் என பித்த நோய் பட்டியல் பெரிசு. இன்றைய நவீன வேகமான வாழ்வியலில் பெருகும் பல நோய்க்கு இந்த பித்தம் ஒரு முக்கிய காரணம். நாம் தான் இப்போது மனசை கல்லில் அடித்து துவைச்சு காயப் போடும் வேகத்தை தானே விரும்புகிறோம்! பித்தம் அதிலும் அதிகம் வளர்கிறது. பித்தம் குறைக்க உணவில் காரத்தை எண்ணெயை குறைக்க வேண்டும் கோழிக்கறி கூடவே கூடாது. கோதுமைகூட, அதிகம் சேர்த்தால் பித்தம் கூட்டம். அரிசி அந்த விஷயத்தில் சமத்து.(என்ன கொஞ்சம் அளவோடு அரிசியின் சட்டையை அதிகம் கழட்டாமல்(கைக்குத்தல்) சாப்பிடணும்). கரிசலாங்கண்ணி கீரை, கறிவேப்பிலை, சீரகம், தனியா, எலுமிச்சை, மஞ்சள், இஞ்சி- என் இவையெல்லாம் பித்தம் தணிக்கும். பித்தம் குறைக்க கிச்சன் கவனம் மட்டும் போதாது. மனம் குதூகலமாய் இருப்பது அவசியம். இன்றைக்கு சர்க்கரை வியாதி பெருக பலரும் அதிக அரிசி உணவைக் காரனமாய்ச் சொல்கிறோம். அளவுக்கதிகமான மனப்பழு, மனஅழுத்தம் தான் அதைவிட முக்கியக் காரணமாகப் படுகிறது.

ஆதலால் சந்தோஷம் கால்படி, சிரிப்பு அரைப்படி போட்டு, அதில் கண்டிப்பாய்“ நான்”-கிள்ளி நீக்கிப் போட்டு, விட்டுக்கொடுத்தலில் வேகவைத்து புன்னகையில் தாளித்தெடுத்து காதலோடு பரிமாறுங்கள். பித்தமென்ன மொத்தமும் அடங்கும்.

அடுத்து கபம். சளி, இருமல், ஆஸ்துமா, மூக்கடைப்பில் இருந்து கபத்தால் வரும் நோய்கள் நிறைய. பால், இனிப்புகள், நீர்க்காய்கறிகளான தர்பூசணி, மஞ்சள்பூசணி, சுரைக்காய், பீர்க்கு, வெள்ளரி, குளிர்பானம், மில்க் ஸ்வீட், சாக்லெட் என இவையெல்லாம் கபம் வளர்க்கும் காரணிகள்.மழைக்காலத்திலும், கோடைக் காலத்தில் கபநேரமான அதிகாலை மற்றும் இரவுநேரங்களில் தவிர்க்கலாம். மிளகு, சுக்கு, திப்பிலி, ஆடாதொடை, துளசி, கற்பூரவல்லி, தூதுவளை- என இவையெல்லாம் கபம் போக்க உதவும். தும்மிக்கொண்டே வரும் வீட்டுக்காரருக்கு கற்பூரவல்லி பஜ்ஜியும் சுக்கு காபியும் கொடுத்துப் பாருங்கள். தும்மல் அன்றிரவின் தூக்கத்தைக் கெடுக்காது.

வாத பித்த கபம்-இந்த மூன்று வார்த்தை மந்திரக் கூட்டணியை அச்சுபிச்சு இல்லாமல் காப்பதில், சமையல்கூடத்திற்கு சந்தேகமில்லாமல் பங்கு உண்டு.அதற்கு பாரம்பரிய அனுபவம் அவசியம். பாரம்பரிய அனுபவங்கள் பாரம்பரிய சொத்தைக் காட்டிலும் பலம் பொருந்தியவை. அதனை மடமை என்றோ பழசு என்றோ ஒதுக்குவது முட்டாள்தனம். அங்கே இங்கே தவறுகள் சேர்ந்திருக்கும். ஆனால் இன்று சந்தையைக் குறிவைத்து ”2020-இல் இந்த நோயை உருவாக்க வேண்டும். அப்பொது இந்த மருந்தை இங்கு விற்கலாம்,’ என திட்டமிடும் கேவலமான எண்ணங்கள் கண்டிப்பாய் அப்போது கிடையாது. இதை புரிந்து பாரம்பரிய அறிவை கவனமாய் பாதுகாப்போம். அது நம்மையும் நம் தலைமுறையையும் பாதுகாக்கும்!

ஆறாம் திணை 22- ஆனந்த விகடன்

மதர் டே, ஃபாதர் டே’ தெரியும்அதுஎன்ன புதிதாக 'சாப்பாடு டே?’ இதுபுதுசுதான்இந்தியா எங்கும் மாற்றுஅறிவியலாளர்கள் பிப்ரவரி 9-ம்தேதியை 'தேசியப் பாதுகாப் பானஉணவு தினம்’ என இந்தவருடத்தில் இருந்து கொண்டாடஅழைப்பு விடுத்துள்ளனர்கடந்த2010- முன்னாள் மத்தியசுற்றுச்சூழல் அமைச்சர் ஜெயராம்ரமேஷ்பி.டிகத்தரிக்குத் தடைவிதித்த நாள் அதுஅறிவியல் வளர்ச்சியின் பெயரால் கொண்டுவரப் பட்ட ஒருவிஷயத்தைப் பல கட்ட ஆய்வுகள் செய்து

'இன்னும் சிந்தித்து அனுமதிக்க வேண்டியவிஷயம் இதுஅவசரப்படக் கூடாது’ என மரபணு மாற்றப்பட்ட உணவுப் பயிருக்குத் தடைவிதித்த நாளைத்தான், 'பாது காப்பான உணவு தினம்’ என இந்தியா முழுமையும் மாற்றுச்சிந்தனையாளர்கள் கொண்டாடுகின்றனர். 

 'இந்திய வேளாண்மையின் வளர்ச்சிக்கே வேட்டுவைத்துவிட்டதாக’ குய்யோ முறையோஎன்று கதறிய சில தொழில்நுட்பக் காதலர்கள்சமீபத்தில் 'மரபணு மாற்றிய பயிர்கள் மீதுநடந்த ஆய்வு முடிவுகள் அவ்வ ளவு நம்பிக்கை தருபவையாக இல்லைநிறையத் தகிடுதத்தங்கள் நடந்திருக்கின்றனகம்பெனிக்காரர்களின் நலன் முன்னிறுத்தப்பட்டு,விவசாயிகளின் நலன் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது’ என நாடாளுமன்ற விவசாயக் குழுதெரிவித்ததில் ஆடிப்போயிருக்கிறார்கள்.
நீங்களும் நானும் மரபணுமாறியவர்கள்தான்உங்கள் வீட்டுக்குருமாவில் போடும் பெங்களூருதக்காளியும்புளிக் குழம்புக்குப்பக்கத்தில் வைத்துச் சாப்பிடும்வெண்டைக்காயும் மரபணுமாறியதுதான்ஆனால்இந்தமாற்றங்களை நிகழ்த்தியதுஇயற்கைஅம்மாவின் 'முணுக்கோபமும் அப்பாவின் சாம்பார்பிரியமும் பையனுக்கு வருவதுஅப்படித்தான்அதிகம் காய்க்கும்சுமாரான மாம்பழமும் கொஞ்சமாகக் காய்க்கும் சூப்பர் மாம்பழமும்அருகில் இருக்கிறதுஎனக்கொள்ளுங்கள்அப்போது பற்றிக்கொண்ட காதலின் விளைவாக மகரந்தச் சேர்க்கைநடக்கும்அதன் பிறகு 'சூப்பர் மாம்பழம்’ கன்னாபின்னாஎனக் காய்த்துத் தள்ளக்கூடும்.இதில் அருகருகே இரண்டையும் வளர்ப்பதுடன் அறிவியலின் வேலை முடிந்து விடுகிறது. 'சூப்பரா... சுமாரா?’ என்பதை இயற்கைதான் முடிவுசெய்யும்ஆனால்மரபணுப் பயிர்கள்இப்படி இல்லைநாட்டுக் கத்தரிக்காயின் மரபணுவை, 'பேஸிலஸ் துருஞ்சியேனம்’ எனும்பாக்டீரியாவின் மரபணுவோடு வெட்டி ஒட்டி புதிய மரபணுவை உண்டாக்குகின்றனர்அதைவிதையாக்கிகாயாக்கும் வித்தையைச் செய்கிறார்கள். 'இப்படிப் பிறக்கும் கத்தரிக்காயைப்புழு தாக்காதுஅந்தப் புழுவைத் தாக்கும் நஞ்சுக்கு எதிரான நச்சுப்புரதம் கத்தரிக்காய்க்குள்உள்ளதுதனியாக பூச்சிமருந்து தெளிக்க வேண்டாம்’ என்பது அவர்களின் கண்டுபிடிப்பு.பூச்சி சீண்டாது... சரிஆனால்காய்க்குள் உள்ள நமக்குப் பழக்கம் இல்லாத புரதம் நம்மைச்சீண்டாதாஇதைக் கேட்க அதிகம் பேர் இல்லை என்பதுதான் வருத்த மான விஷயம். 'அதுசரி சார்... வேற புழுபூச்சி எல்லாம் தாக்காதா?'' என்றால், ''அதெல்லாம் தெரியாதுஎங்ககம்பெனி யைப் பத்தி மட்டும் கேளுங்க'' என்று 'மன்னாரன் கம்பெனி’ தங்கவேலு பாணி யில்சொல்கிறார்கள் அந்த பிரைவேட் லிமிடெட்காரர்கள்.  

கத்தரியில் துவங்கும் இந்தப்படைத்தல் தொழில்அரிசிராகி,சோளம்தக்காளிபப்பாளி... எனவகை வகையான உணவுப்பயிர்களிலும் தொடர்கிறது.கத்தரிக்காய் .கேஆகிவிட்டால்,இன்னும் பத்துப் பதினைந்துவருடங்களில் மொத்த நாட்டுப்பயிர்களையும் கூகுளில் மட்டுமேதேட முடியும்இதே உத்தியில்வணிகப் பயிரான பருத்தியில்நடத்திய பலாத்காரத் தில் பிறந்த பி.டிபருத்திநாடு முழுக்கப் பரவிநம் நாட்டு மரபுப்பருத்தியைக் காணாமல் அடித்துவிட்டதுஇன்று பயனில் உள்ள பருத்தியில் 90 சதவிகிதக்கும் மேலானவை பி.டிபருத்திதான்பூச்சி தாக்காது என்றார்கள்ஆனால்அது அதிகபட்சம்மூன்றுநான்கு வருடங்கள்தான் தாங்கியதுபிறகுபூச்சி இவர்களுக்குப் பெப்பே காட்டிபருத்திக்குள் பாய் போட்டுப் படுத்துக்கொண்டதுஇப்போது 'பி.டிகாட்டன் வெர்ஷன்-2’கொண்டுவந்துள்ளார்கள்இது எத்தனை வருடங் கள் தாக்குப்பிடிக்கும் எனத் தெரியவில்லை.
Genetic Engineering என்ற வார்த்தையைஇந்தியாவில் அறிமுகம் செய்த முன்னாள் மத்தியமாலிக்குலர் பயோடெக்னாலஜி நிறுவனத்தின் இயக்குநர் முனைவர் புஷ்ப பார்கவா, 'தயவுசெய்து மரபணு மாற்றப் பயிர்களை அனுமதிக்காதீர்கள்என்று உச்ச நீதிமன்றம்வரை சென்று வாதிட்டுவருகிறார். 'இந்தப் பயிர்கள் ரொம்ப சாதுஎந்தச் சேட்டை யும்பண்ணாது’ எனச் சான்றளித்த அவர்களே இப்போது, 'சோதித்துப் பிறகு முடிவெடுக்கலாம்என்கிறார்கள்உலக சுகாதார நிறுவனமோ, 'அதை அனுமதிப்பதும்அனுமதிக்காததும்அந்தந்த நாட்டின் பொறுப்புஅலர்ஜி வரலாம்மரபணுஉடலுக்குள் உள்ள பாக்டீரியாவின்மரபணுவோடு கலக்கலாம்பக்கத்துப் பயிரில் கலக்கலாம்; (allergenicity, gene transfer, out crossing)'' என எச்சரிக்கிறதுபோதாக்குறைக்கு, 'இதைச் சாப்பிட்ட எலிக்குக் குழந்தைபிறக்கவில்லைஇன்னொரு எலி ரொம்பவே மெலிந்துவருகிறதுஎன வரிசையாகமருத்துவ அறிக்கைகள் வேறுஆனால்மரபணு மாற்ற உணவுப் பொருட்களைஉருவாக்கும் கம்பெனிகளோ, 'நீங்கள் சாப்பிடும் ஒவ்வொரு கவள உணவும்நான் படைத்தவிதையில் இருந்து பிறந்ததாக இருக்க வேண்டும்என்ற அறைகூவலுடன் தொடர்ந்துஎப்படியாவது இந்திய உணவுச் சந்தையைக் கைப்பற்றத் துடிக்கிறது.
'புழுவில் இருந்து பயிரைக் காக்கத்தானே மரபணு மாற்றம்அதை ஏன் எதிர்க்கிறீர்கள்புழுபூச்சியில் இருந்து பயிரையும் உணவையும் காப்பதில் என்ன தவறு?’ என்பது வேறு சிலரின்கேள்விகாலங்காலமாக நம் நாட்டில் பயிரும் இருக்கிறதுபுழுவும் இருக்கிறது.பனங்காடைகரிச்சான்தேன்சிட்டுகொக்குநாரைமரங்கொத்திஉழவாரன்கீச்சான் எனஎண்ணற்ற பறவைகள் புழுவையும் பூச்சியையும் தின்று பயிரைக் காத்தனகழுகும்பருந்தும் எலியைத் தின்று வாழ்ந்தன. 'காக்கை குருவி எங்கள் சாதிநீள்கடலும் மலையும்எங்கள் கூட்டம்நோக்கும் திசையெலாம் நாமன்றி வேறில்லைநோக்க நோக்கக்களியாட்டம்'' என்று பாரதி பாடியதுபல்லுயிர் மேலாண்மை புரிந்துதான்ஆனால்,பூச்சிக்கொல்லிகள் மூலம் புழுவோடு சேர்த்துப் பறவைகளையும் கொன்றுபோட்டோம்.விளைவுபல்லுயிர்ச்சூழல் கெடுத்து குட்டிச்சுவராக்கப்பட்டுள்ளது.
இந்த உலகில் உணவுத் தட்டுப்பாடு கிடையாதுஉணவுப் பகிர்வுதான் இல்லைகடந்த வாரம்ஒரு திருமண விருந்துக்குச் சென்றிருந்தேன்ஏழு வகை இனிப்புடன் கூடிய அந்தவிருந்தில்அத்தனையும் ஒருவன் சாப்பிட்டான் என்றால்அன்றிரவே அவனுக்கு 78 முறைஒண்ணுக்குப் போகும்காலையில் ஏதாவது டயாபடிக் டாக்டர் கிளினிக்கில்தான் நிற்கவேண்டும்ஒருபக்கம் இப்படி என்றால்இன்னொரு பக்கம் மூன்று வேளை சமச்சீர் உணவுகிடைக்காத குழந்தைகள் இந்தியாவில் 46 சதவிகிதம் என்கின்றன 
புள்ளிவிவரங்கள். ''தேவைக்கு இங்கே எல்லா வளமும் உண்டுஆனால்களிப்பாட்டத்துக்குக் கிடையாது'என்று காந்தி சொன்னது இதைத்தான்எல்லோருக்கும் எல்லாமும் எனப் பகிர்ந்து வாழும்நிலையை நோக்கி நகராமல்வளர்ச்சி என்ற பெயரில் பல்லுயிர் பன்முகத்தைச் சிதைப்பது,கவிஞர் அறிவுமதி சொன்னதுபோல், 'காடு நம் தாய்தாயிடம் பால் அருந்தலாம்ரத்தம்உறிஞ்சக் கூடாது.'