Sunday, 5 January 2014


தமிழில் உள்ள மொத்த எழுத்துக்கள் 247, இந்த 247 எழுத்துக்களில் 42 எழுத்துக்கள் ஓரெழுத்து சொல்லாக விளங்குகின்றன அதாவது இந்த 42 எழுத்துக்களுக்கும் தனியாக பொருள் உண்டு.

உயிரெழுத்து: ஆ , ஈ , ஊ , ஏ, ஐ ,ஓ எழுத்து பொருள்

ஆ - பசு

ஈ - கொடு ,பறக்கும் பூச்சி

ஊ - இறைச்சி

ஏ - அம்பு

ஐ - அழகு, தலைவன் , வியப்பு

ஓ - வினா , மதகு



ம வரிசை: மா . மீ , மு , மே, மை , மோ

மா - பெரிய , விலங்கு

மீ - மேலே , உயரம்

மு - மூப்பு

மே - மேன்மை , மேல் , மாதம்

மை - கண்மை , இருள்

மோ - முகர்தல் , மோதல்



த வரிசை: தா, தீ, து, தூ , தே, தை

தா - கொடு , கேட்பது

தீ - நெருப்பு

து - கெடு, உண், பிரிவு

தூ - வெண்மை , தூய்மை

தே - தெய்வம்

தை - மாதம்



ப வரிசை: பா, பூ, பே , பை , போ

பா- பாட்டு, நிழல், அழகு

பூ - மலர்

பே - நுரை , அழகு

பை - பசுமை , உறை

போ - செல்



ந வரிசை: நா , நீ, நே ,நொ, நை , நோ

நா - நாக்கு

நீ - நின்னை

நே - அன்பு , நேயம்

நை - வருந்து, நைதல்

நொ - நொண்டி , துன்பம்

நோ - நோவு வருத்தம்



க வரிசை: கா , கூ , கை , கோ

கா - சோலை , காத்தல்

கூ - பூமி , கூவுதல்

கை - கரம், உறுப்பு

கோ - அரசன் ,தலைவன் , இறைவன்



வ வரிசை: வா , வீ , வை , வௌ

வா - அழைத்தல்

வீ - பூ , அழகு ,

வை - கூர்மை, வைதல், வைத்தல்

வௌ - கௌவுதல், கொள்ளை அடித்தல்



ச வரிசை: சா, சீ, சே , சோ

சா- மரணம் , பேய் , சாதல்

சீ - இகழ்ச்சி , திருமகள்

சே - எருது

சோ - மதில்



மற்ற எழுத்து: யா

யா - மரம்

Seasonal Rain


1987-ல் இயற்கை விவசாயப் பயிற்சிக்குப் போனேன். அங்கு ஒரு பெரியவர் வந்திருந்தார். சுற்றுச்சூழல் கழகத்தினுடைய தலைவர் அவர். அவர் என்னிடம் "இனிமேல் உங்கள் நாட்டில் பருவ மழையே பெய்யாதென்று" சொன்னார். இதை அவர் 1987-ல் சொன்னார். ஏன் என்று நான் கேட்டதற்கு, "உங்களுடைய மேற்குத் தொடர்ச்சி மலை 3 ஆயிரம் அடி உயரத்தில் இருக்கிறது. அதில் 300 அடி உயரத்திற்கு மரங்கள் எல்லாம் இருக்கின்றன. அது அரபிக் கடலிலிருந்து வருகின்ற ஈரக் காற்றையெல்லாம் மேகமாக மாற்றி, மழையாக மாற்றி கீழே இறக்குகிறது. அந்த மழை நீரை பூமியில் இறக்கி பிறகு ஆற்றில் நீராக ஓடுகிறது. அந்த மரங்களையெல்லாம் நீங்கள் வெட்டிவிட்டு, இடுப்பளவு உயரமுள்ள "டீ" தோட்டம் போட்டு விட்டீர்கள். இன்னமும் போட்டுக் கொண்டிருக்கிறீர்கள். இன்னமும் குறையவே இல்லை அது. அதற்குப் பிறகு முழங்கால் உயரத்திற்கு உருளைக்கிழங்கு செடிகளை நடுகிறீர்கள். ஒரு ஜான் உயரத்திற்கு முட்டைக்கோஸ், காலிஃபிளவர் எல்லாம் பயிர் செய்து கொண்டிருக்கிறீர்கள். அதனுடைய விளைவு அரபிக்கடலிலிருந்து வரக் கூடிய ஈரக் காற்றை மேகமாக மாற்ற முடியவில்லை. மழையாக மாற்ற முடியவில்லை. அப்படியே தப்பித் தவறி மழை பெய்து ஓடுகின்ற தண்ணீரைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. ஆகவே எங்குப் பார்த்தாலும் வெள்ளம். ஆக, இனி உங்களுக்கு புயல் மழைதான் வரும். பருவ மழை வருவதற்கு வாய்ப்பில்லை" என்று சொன்னார் அவர். அவர் சொன்ன அன்றிலிருந்து தொடர்ந்து உற்றுக் கவனித்துக் கொண்டுதான் வருகிறேன். அதே தான் நடந்து கொண்டிருக்கிறது. நான் போகின்ற அத்தனை கூட்டங்களிலும் சொல்லிக் கொண்டிருக்கிறேன். நான் எழுதும் அத்தனை கட்டுரைகளிலும் எழுதி கொண்டுதான் இருக்கின்றேன். யாராவது இதை வாசித்து உணர மாட்டார்களா? தவறைத் திருத்திக் கொள்ள மாட்டார்களா? என்று. ஆனால் யாரும் யோசித்த மாதிரி தெரியவில்லை. தொடர்ந்து காடு அழிக்கப்படுகின்ற செய்தி வந்து கொண்டுதான் இருக்கிறது. - நம்மாழ்வார்

அர்த்தமுள்ள இந்துமதம் மொட்டை அடித்தல் ஏன் ? 

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மொட்டை அடிப்பது எதற்கு? ஆன்மீக ரீதியாக - தலையான பொருள் முடி. ஒவொரு மனிதருக்கும் தலை முடியானது கிரிடம் போன்றது. எங்கள் கிரிடத்தை உன் முன்னால் இறக்கி வைக்கிறோம் என்று இறைவனிடத்தில் வேண்டி முடி இறக்குதல் செய்கின்றனர். (முந்தய காலங்களில் இளவரசர்களை, அரச பதவியில் அமரவைப்பதர்க்கு முடிசூட்டு விழா (கிரிடம் சூட்டுவர்) என்று சொல்வது வழக்கம்.) அறிவியல் - வெட்டப்படும் முடிகளே அதிகம் வளரும். வியர்வை மற்றும் அழுக்கு காரணமாக மயிர்க்கால்கள் இடையில் அழுக்கு சேரும். மொட்டை அடிக்கும் போது இதை பெரும்பாலும் கண்டிருக்கலாம். தொடர்ச்சியாக இதை நீக்குவதால் தலை சார்ந்த வியாதிகள் வரும் வாய்ப்பு குறையும்.குழந்தைகள் தாயின் கருப்பையில் இருக்கு போழுது அந்த கர்ப்பையில் உள்ள மல ஜலங்களோடு மிதந்து கொண்டு இருக்கும் அப்படி இருக்கும் வேளையில் அந்த குழந்தையின் மயிர்கால்கள் வழியாக அந்த கெட்ட நீர் உள்சென்று ஊறி இருக்கும் ஆகையால் அதை குல தெய்வம் பெயர் சொல்லி மொட்டை அடிப்பது வழக்கம். அப்படி செய்யாமல் இருக்கும் குழைந்தகளுக்கு தலையில் சிரங்கு, புண் போன்றவை வருவதை பார்த்து இருப்பிர்கள். குழந்தை தாயின் கருப்பையில் வளரும் பொழுதே முடியும், நகமும் வளரும் ஆகவே அவைகளும் மனித உருப்புகளில் ஒன்று தான் ஆனால் அவை மீண்டும் வளரும் உருப்புகள்.
வகுப்பறையில் ஆசிரியர் மாணவர்களைப் பார்த்துக் கேட்கிறார், உலகில் இருக்கும் அனைத்தையும் படைத்தது கடவுளா ? என்று. ஒரு மாணவன் ஆமாம் என பதில் அளிக்கிறான். ஆசிரியர் : அப்படியெனில், சாத்தானை படைத்ததும் கடவுள் தானா? மாணவன் அமைதி காக்கிறான். சிறிது நேரம் கழித்து ஆசிரியரைப் பார்த்து நான் உங்களை சில கேள்விகள் கேட்கலாமா? என்கிறான். ஆசிரியர் அனுமதிக்கிறார். மாணவன் : 'குளிர்நிலை' என்று ஏதேனும் இருக்கிறதா? ஆசிரியர்: ஆமாம் இருக்கிறது.நீ குளிரை உணர்ந்தது இல்லையா? மாணவன்: மன்னிக்கவும்.தங்கள் பதில் தவறு.குளிர் என்ற ஒன்று இல்லை.அது வெப்பத்தின் பற்றாக்குறை. சராசரி வெப்பம் குறைந்ததை தான் குளிர் என்கிறோம். இருள் என்ற ஒன்று இருக்கிறதா? ஆசிரியர் : ஆம், இருக்கிறது. மாணவன் : மன்னிக்கவும்.மீண்டும் தவறு.இருள் என்ற ஒன்று இல்லை.ஒளி பற்றாக்குறையை தான் இருள் என்கிறோம். உண்மையில் ஒளி, வெப்பம் இவற்றை தான் நாம் அதிகம் படிக்கிறோம்.குளிரையும் இருளையும் அல்ல. அதே போல், சாத்தான் என்று இவ்வுலகில் எதுவுமில்லை. உண்மையில் அது கடவுளின் மீது உள்ள அன்பின் , நம்பிக்கையின் பாற்றாக்குறை. அந்த மாணவன் வேறு யாருமில்லை.ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். # ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் எழுதிய 'God Vs Science' புத்தகத்திலிருந்து...

from சித்தர் அறிவியல் Wisdoms of Siddhars
விரதமே மகத்தான மருத்துவம்!

இயற்கை மீதான பேரன்பும் உடல் மீதான அக்கறையும் எந்த வயதிலும் ஒருவரை இளமை குறையாமல் வைத்திருக்கும் என்பதற்குச் சாலச் சிறந்த உதாரணம் நம்மாழ்வார். சிறிய எழுத்துக்களையும் கண்ணாடி இல்லாமல் துல்லியமாகப் படிப்பது, சோர்வே இல்லாமல் பல கிலோ மீட்டர் தூரம் நடப்பது, தோட்ட வேலை, எழுத்துப் பணி, மேடைப் பேச்சு என ஒரு நாளைக்கு 16 மணி நேரம் பம்பரமாகச் சுழல்கிறது நம்மாழ்வாருக்கு. ''75 வயதிலும் எப்படி இப்படி ஒரு சுறுசுறுப்பு?'' எனக் கேட்டால், சிறு குழந்தையாகச் சிரிக்கிறார் நம்மாழ்வார்.

''எத்தனையோ வருஷங்களுக்கு முன்னாலேயே, 'உணவே மருந்து; மருந்தே உணவு’ன்னு திருமூலர் சொல்லிட்டுப் போயிட்டார். இந்த அற்புதமான வாக்கை ஆராதிக்கத் தவறியவர்கள்தான் எண் சாண் உடம்பில் எண்ண முடியாத வியாதிகளோடு அலையறாங்க. வாழ்க்கையில் இரண்டு வகை இருக்கிறது. ஒன்று நோயே வராமல் வாழ்வது. இரண்டாவது, நோய் வந்த பின் வருந்தியபடியே வாழ்வது. முதல் வகையில் இணைந்துவிட்டால், நமக்கு இன்னல்கள் இருக்காது.

'மருந்து என வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்’ என்ற குறளிலேயே நோய் அண்டாமல் வாழ்வதற்கான வழி சொல்லப்பட்டு இருக்கிறது. உண்ட உணவு சீரணமாகிவிட்டதை அறிந்து, அதன் பிறகு உண்டால் அந்த உடம்புக்கு மருந்து என்ற ஒன்றே தேவை இல்லை எனச் சொல்லி இருக்கிறார் வள்ளுவர்.

எதை, எப்போது, எப்படி உண்ண வேண்டும் என்பதே நம்மில் பலருக்கும் தெரிவதில்லை. நாம் உண்ணும்போது முதலில் உணவை விழுங்குறோம். ஆனால், அப்படி விழுங்கக்கூடாது. பற்களால் நன்றாக அரைத்து, கூழாக்கி உமிழ்நீரோடு சேர்த்து உள்ளே தள்ளவேண்டும். இதைத்தான், 'நொறுங்கத் தின்றால் நோய் தீரும்!’ எனப் பழமொழியாகச் சொன்னார்கள். அளவு கடந்து உணவு உண்பவர்கள் நோய்களை எதிர்கொள்ளவேண்டி இருக்கும். நாம் உண்ணும் உணவுக் கழிவுகள் உடம்பில் உள்ள ஒவ்வொரு செல்லிலும் கொஞ்சம் கொஞ்சமாகத் தேங்குகிறது. இதன் அளவு அதிகரிக்கும்போது நோய் உண்டாகிறது. சரி, அதை எப்படிக் களைவது? இதற்கான சுலபமான வழி, உண்ணாநோன்பு. இதைத்தான் 'விரதம்’ என்ற பெயரில் கடைபிடித்தார்கள் நமது முன்னோர்கள். 'நோயிலே படுப்பதென்ன கண்ண பரமாத்மா, நோன்பிலே உயிர்ப்பதென்ன கண்ண பரமாத்மா’ எனப் பாடினார்களே... அந்த நோன்புதான் உண்ணாநோன்பு. இறக்கும் தருவாயில் இருப்பவனைக்கூட உயிர்த்தெழுச் செய்யும் சக்தி உண்ணா நோன்புக்கு இருக்கிறது. இதைத்தான் ஆங்கிலத்தில் 'தெரப்பூட்டிக் பாஸ்ட்டிங்’ (Theraupeutic fasting) என்று சொல்கிறார்கள். இன்றைக்கு சர்வதேச அளவில் இந்தச் சிகிச்சை பிரபலமாகி வருகிறது. உண்ணாநோன்பு இருக்கும்போது நம் உடலுக்குள் இருக்கும் தேவையில்லாத கழிவுகள் தன்னாலே வெளியேறி விடுகின்றன. உடல் தன்னைத்தானே குணப்படுத்திக்கொள்ள நாம் அனுமதிக்க வேண்டும்.

அடுத்ததாக, எதைச் சாப்பிட வேண்டும் என்பது மிகவும் முக்கியம். நம் உணவில் காய்கறிகள், கீரைகள், பழங்கள் ஆகியவற்றை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். 'வெந்ததைக் குறைத்தால் வேதனையை குறைக்கலாம்’ என்பார்கள். அதாவது வேகவைத்த உணவைக் குறைத்துக்கொண்டு பச்சைக் காய்கறிகள், பழங்களை உண்ண வேண்டும். நான் 35 வயதில் கண்ணாடி அணிந்தேன். 60 வயதில் அதை அகற்றிவிட்டேன். இப்போது கண்ணாடியைப் பயன்படுத்துவதே இல்லை. பொடி எழுத்துக்களைக்கூட என்னால் துல்லியமாக வாசிக்க முடியும். இதற்குக் காரணம் எனது உணவுப் பழக்கங்கள்தான்!'' - விழி விரியவைக்கும் அளவுக்கு ஆச்சரியமாகப் பேசுகிறார் நம்மாழ்வார். அடுத்து, மூலிகைகளை நோக்கி நீள்கிறது பேச்சு.

''இயற்கை நமக்குக் கொடுத்த அருட்கொடை மூலிகைகள். நாம் பயிர் செய்யாமலேயே நமக்கான உணவாக சில மூலிகைகளை இயற்கை உற்பத்தி செய்கிறது. உதாரணமாக, பிரண்டை. இதைத் துவையல் செய்து சாதத்தில் குழம்புக்குப் பதிலாக பிசைந்து உண்ணலாம். தூதுவளை, மொசுமொசுக்கை இலைகளைச் சேர்த்து ரசம் வைத்து உண்டால் நாள்பட்ட சளி தீரும். வாய்ப்புண்ணை ஆற்ற மணத்தக்காளி, வெட்டுப் புண்களை ஆற்ற வெட்டுக்காயப் பச்சிலை, அனைத்துக் கும் சிறந்த ஆவாரை, துளசி என மூலிகைகளின் அதிசய ஆற்றல் கொஞ்சநஞ்சம் அல்ல. நம்மைச் சுற்றி வளர்ந்துகிடக்கும் எண்ணில்லா மூலிகைகளை நாம் சரியாகப் பயன்படுத்தினாலே பாதி நோய்கள் காணாமல் போய்விடும்!'' எனச் சொல்லும் நம்மாழ்வார், உடலின் மகத்துவத்தையும், யோகாவின் சிறப்பையும் சொல்லத் தொடங்கினார்.

''இயற்கை ஒருபோதும் தவறு செய்வதில்லை. உடல் ஒருபோதும் தன் கடமையை நிறுத்துவதில்லை. பசி வந்தால் உணவு, தாகம் எடுத்தால் தண்ணீர், சோர்வு வந்தால் உறக்கம் என உடல் சரியான சமிக்ஞைகளை நமக்கு கொடுத்தவண்ணம் இருக்கிறது. அதன்படி உணவு, உறக்கத்தை நாம் கடைப்பிடித்தாலே உடலுக்கு எந்தவிதமான சிக்கலும் வராது. பலர் உடம்பு வலிக்காக மாத்திரை, மருந்துகளை உட்கொள்கிறார்கள். வலி என்பது உடம்பு தன் உள்ளே இருக்கும் நச்சுப் பொருட்களை வெளியேற்றும் முயற்சி. அதைத் தடுக்கக்கூடாது.

50 வயது வரை உடம்புதான் உன்னதம் என நினைக்கும் மனது, அதற்குப் பிறகு ஆன்மாவை ஆராதிக்கிறது. ஆன்மா இந்த உடம்புக்குள்ளேதானே இருக்கிறது! அதனால், உடலைப் பராமரிப்பதும் அவசியம். இது இரண்டையும் ஒரே நேரத்தில் பராமரிக்க உதவுவதுதான் யோகா. நான் நீண்ட காலமாக யோகா செய்து வந்தாலும், 'ஈஷா’ பயிற்சியில்தான் அதை முறைப்படுத்தினேன். தினமும் காலையில் நடைப்பயிற்சி, மூச்சுப் பயிற்சி, யோகா செய்கிறேன்.

ஈஷா யோகா பயிற்சியின்போது நடந்த நேர்காணலில், 'யோகா செய்வதன் மூலம் நோய்கள் குணமாகும் என்றால், எதற்காக இத்தனை மருத்துவர்களும், மருத்துவமனைகளும் இருக்கின்றன?’ என சத்குருவிடம் கேட்டேன். 'நாட்டில் தினமும் ஆயிரக் கணக்கில் விபத்துகள் நடக்கின்றன. விபத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு யோகா சொல்லிக் கொடுக்க முடியாது அல்லவா? அவர்களுக்குத் தேவை, அவசர சிகிச்சை. அதற்காகத் தான் மருத்துவர்களும், மருத்துவமனைகளும்!’ என்று அவர் அமைதியாகச் சொன்னார்.

அவர் சொன்னது உண்மைதான். ஆங்கில மருத்துவத்தை அவசரத்தேவைக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். மாத்திரை, மருந்துகளைத் தொடர்ச்சியாக உட்கொள்ளும்போது, அதுவே உடம்பில் பல உபத்திரவங்களை உண்டாக்குகிறது.

மொத்தத்தில், சரியான பழக்க வழக்கங்களும், உடலைப் பேணும் உணவு முறையும், ஆரோக்கியமான சுற்றுச்சூழலும் இருந்தாலே நோய்க்கு 'நோ என்ட்ரி’ போட்டுவிடலாம்!'' எனச் சொல்லும் நம்மாழ்வார் இறுதியாக இப்படிச் சொல்கிறார் வாழ்வியல் மந்திரத்தை.

''கணியன் பூங்குன்றனார் சொன்ன 'தீதும், நன்றும் பிறர் தர வாரா’ என்கிற வரி நம் உடலுக்கும் உள்ளத்துக்கும் ஒருசேர வழிகாட்டக்கூடியது. அந்த வரிகளை மனதில் ஏற்று இயற்கையை வணங்கி, உடலை ஆராதிக்கக் கற்றுக் கொண்டால் வாழ்வின் சிறப்புக்குக் குறைவே இருக்காது!''.

- நன்றி சக்தி விகடன்
 — with Om Anand TTp andDr. G Nammalvar, Organic Agriculturist.

Saturday, 15 June 2013

saw in someones blog

ஒரு மனிதன் கருவில் உருவான நாள் முதல் இறக்கும் நாள் வரை உள்ள காலத்தை வாழ்க்கை அல்லது வாழ் நாள் என்று கணக்கிடுகிறார்கள். இந்த கால கட்டம் ஒவ்வொருவருக்கும் ஒரு மணித்துளியாகவும் இருக்கலாம் அல்லது ஒரு நூற்றாண்டாகவும் இருக்கலாம். அதன் அளவு ஒருவருக்கும் தெரியாது; அனுமானிக்கவும் முடியாது. வாழ்க்கையின் கால வரம்பு நிலையற்றதாக இருக்கிறது. ஒரு மனிதன் எப்போது வேண்டுமானாலும் இறக்கலாம். ஆகவே வாழ்க்கை நிலையற்றது என்று பெரியோர்கள் கூறுகிறார்கள். நிலையாமை என்பது வேறு; இல்லாமை என்பது வேறு, ஒரு மணித்துளி வாழ்ந்தவனுக்கும் வாழ்க்கை இருந்தது. நூறாண்டுகள் வாழ்ந்தவனுக்கும் வாழ்க்கை இருந்தது, ஆனால், இருவருக்குமே முடிவு எப்போது வரும் என்று தெரியாமலே இருந்தது; அதாவது நிலையாமை இருந்தது.ஆகவே, வாழ்க்கையில் நிலையாமை இருந்தாலும், ஒருவனுக்கு அளிக்கப்பட்ட வாழ்க்கையை அவன் வாழ்ந்தே ஆகவேண்டும். தற்கொலை செய்துகொள்ள முடியாது,25 வருட வாழ்க்கையை அவன் பிரம்மச்சாரியாகக் கழிக்க வேண்டும். மீதமிருந்தால், அடுத்த 25 வருட வாழ்க்கையை அவன் கிருஹஸ்தனாகக் கழிக்க வேண்டும். மேலும் மீதமிருந்தால் அடுத்த 10 வருட வாழ்க்கையை வானப்பிரஸ்தனாகக் கழிக்க வேண்டும். எஞ்சியிருந்தால் மீதமுள்ள வாழ்க்கையை சந்நியாசியாகக் கழிக்க வேண்டும்.இப்படி வாழும் நான்கு நிலைகளில் கிருஹஸ்த வாழ்க்கையே சிறந்தது. ஏனெனில், பிரம்மச்சாரிக்கும், வாணப்பிரஸ்தனுக்கும், சந்நியாசிக்கும் சோறு போட கிருஹஸ்தனால் மட்டுமே முடியும். கிருஹஸ்தன்( இல் வாழ்வான் ) இல்லாவிட்டால், மற்ற மூவரும் இல்லை. இதனையே, வள்ளுவர்,


”இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்நல்லாற்றின் நின்ற துணை.”-----என்றார்.

Thursday, 21 March 2013

JUST TO KNOW ABOUT CHENNAI


சென்னை இன்று மிகப்பெரிய மாநகரமாக விளங்க காரணம், பல சிறு சிறு கிராமங்களின்  இணைவு தான். அப்படி இணைந்த கிராமங்களின் பெயர்கள் உருவானதின் பின்னணியை தெரிந்து கொள்ளுங்கள்.
Ø  108 சக்தி ஸ்தலங்களில் 51வது ஊர் ஆகையால் ‘ஐம்பத்து ஒன்றாம் ஊர்’ என்று அழைக்கப்பட்டு, பின்னாளில் இவ்வூர் அம்பத்தூர் என மாறியது.

Ø  Armed Vehicles And Depot of India என்பதின் சுருக்கமே ஆவடி (AVADI)

Ø  1912ம் ஆண்டில் 25 ஏக்கர் பரப்பளவில் ஒரு ஆங்கிலேயரால்  Chrome Leather Factory என்ற ஒரு தோல் பதனிடும் தொழிற்சாலையை தொடங்கியதால் அப்பகுதிக்கு குரோம்பேட்டை என்ற பெயர் உருவானது

Ø   17,18 ம் நுற்றாண்டுகளில் நவாப் ஒருவரின் கட்டுப்பாட்டில் இருந்தது இப்பகுதி. அவருடைய குதிரைகளின் பசியை போக்கும் நந்தவனமாக
இது விளங்கியதால், கோடா பக் (பொருள் - Garden of horses) என்று உருது மொழியில் பெயர் வைத்தார். பின்னாளில் அதுவே கோடம்பாக்கம் ஆக மாறியது.

Ø  தென்னை மரங்கள் நிரம்பிய பகுதி ஆகையால் தென்னம்பேட்டை என பெயர் வைத்தார்கள். பிற்பாடு அது தேனாம்பேட்டை ஆக மாறிப்போனது.

Ø  சையத்ஷா என்ற இஸ்லாமிய முக்கிய  பிரமுகர் வைத்திருந்த நிலப்பகுதியின் அடிப்படையில், சையத்ஷாபேட்டை என்றிருந்த பெயர், சைதாப்பேட்டை என்றாகியது.

Ø  உருது வார்த்தையான சே பேக் (பொருள்- Six gardens) என்பதிலிருந்து உருவானது தான் சேப்பாக்கம்.

Ø  சௌந்தர பாண்டியன் பஜார் என்பதின் சுருக்கமே பாண்டி பஜார்.

Ø  கலைஞர் கருணாநிதி நகரை சுருக்கி கே.கே. நகர் என அழைக்கிறோம்.

Ø  சிவபெருமானுக்கு உகந்த வில்வமரங்கள் அதிகம் இருந்ததால் மகாவில்வம் என அழைக்கப்பட்ட இப்பகுதி, பின்பு மாவில்வம் என்றாகி, காலப்போக்கில் எப்படியோ மாம்பலம் ஆகி விட்டது.

Ø  பல்லவர்கள் ஆட்சி செய்ததால் பல்லவபுரம் என்றழைக்கப்பட்ட இடம் தான் பல்லாவரம்.

Ø  சென்னை மாகாண முதல்வராக இருந்த பனகல் ராஜாவின் நினைவாக இவ்விடம் பனகல் பார்க் என அழைக்கப்படுகிறது.

Ø  நீதி கட்சி தலைவர் சர். பி.டி.தியாகராஜன் செட்டியின் பெயராலேயே இப்பகுதி தி.நகர் (தியாகராய நகர்) என அழைக்கபடுகிறது

Ø  கடற்கரைப்பகுதியான இங்கு புரசை மரங்கள் அதிகமாக இருந்ததால், இப்பகுதி புரசைவாக்கம் ஆனது.

Ø  அதிக அளவில் மல்லிகை பூக்கள் பயிரிடப்பட்ட பகுதி இது. திருக்கச்சி நம்பி ஆழ்வார் தினமும் இங்கிருந்து பூக்களை பறித்துக்கொண்டு சென்று
காஞ்சி வரதராஜபெருமாளை வழிபட்டுவந்தார். அதனால் இவ்விடம் சமஸ்கிருதத்தில் புஷ்பகவல்லி என்றும், தமிழில் பூவிருந்தவல்லி என்றும்
அழைக்கப்படுகிறது. பின்னாளில் இது பூந்தமல்லி யாக மாறியது. வல்லி என்பது தெய்வத்தை குறிக்கும் ஒரு பெயர்.

Ø   17 ம் நூற்றாண்டில் இங்கு வாழ்ந்து வந்த ஒரு முஸ்லீம் துறவி ‘குணங்குடி மஸ்தான் சாகிப்’. இவரது சொந்த ஊர் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள
தொண்டி. ஆகையால் அப்பகுதி மக்கள் அவரை தொண்டியார் என அழைத்தனர். அந்த ஏரியா தான் தற்போதைய தண்டயார்பேட்டை.

Ø  முன்பு இப்பகுதி ஆடு மாடுகள் மேயும் திறந்தவெளியாக இருந்துள்ளது. அதனாலேயே மந்தைவெளி என்றழைக்கபடுகிறது.

Ø  மயில் ஆர்ப்பரிக்கும் ஊர் என்பதே மயிலாப்பூர் என மாறிப்போனது.

Ø  பல்லவர்கள் காலத்தில் போர்கள் நடத்த இவ்விடத்தையே பயன்படுத்தியதால், இப்பகுதி போரூர் எனப்படுகிறது.

Ø  சில நூறு வருடங்களுக்கு முன்பு இப்பகுதி முழுவதும் மூங்கில் மரங்கள் இருந்தது. அதனாலேயே பெரம்பூர் எனப்படுகிறது.

Ø  திரிசூல நாதர் ஆலயம் இருப்பதால் இந்த ஏரியா திரிசூலம் என்று அழைக்கப்படுகிறது.

Ø  பார்த்தசாரதி கோவிலின் எதிர்ப்புறம் இருக்கும் குளத்தில் (கேணி) நிறைய அல்லிகள் பூக்கும். அதன் காரணமாக இப்பகுதிக்கு திருஅல்லிக்கேணி என பெயர் உருவாக்கி, பின்பு திருவல்லிக்கேணி யாகி, தற்போது Triplicane என மாற்றம் கண்டுள்ளது.

Ø  1787 ல் தாமஸ் பாரி என்பவர் இப்பகுதில் EID Parry (India) Ltd கம்பெனியை நிறுவினர். வங்கி மற்றும் வணிகத்திற்கு பிரதான இடமாக இப்பகுதி மாறியதால் பாரிமுனை (பாரிஸ் கார்னர்) எனப் பெயர் பெற்றது.

Ø  மயிலாப்பூரின் ஒரு பகுதி லஸ், போர்ச்சுகீசியர் இந்தியாவை நோக்கி வந்த காலத்தில், சென்னைக் கடற் கரையை நோக்கி வரும் வேளையில், ஒரு தெய்வீக ஒளி அவர்களுக்கு வழி காட்டியாகத் தெரிந்ததாம். கடற் கரையை அடைந்த உடன் அந்த ஒளி மறைந்து விட்டதாம். கரை சேர்ந்த மாலுமிகள் அந்த இடத்தில் தேவாலயம் ஒன்றை கட்டினார்கள். அதை லஸ் தேவாலயம் என்றழைத்தனர். போர்ச்சு கீசிய மொழியில் லஸ் என்றால் ஒளி என்று பொருள்.

Ø  தற்போது எக்மோர் (எழும்பூர்) என்று அழைக்கப்படும் பகுதி, பக்கத்துப் பக்கம்  இருந்த ஏழு குடியிருப்புப் பகுதிகளின் தொகுப்புப் பெயராக எழாம்பூர் என்று வழங்கப்பட்டதாகப் பரவலாகக் கருதப்படுகிறது.

Ø   300 ஆண்டுகளுக்கு முன், ஆங்கிலேயர்கள் இங்கு நெசவாளர் குடியிருப்பை அமைத்தனர். நெசவாளர்களின் சிறுதறிகள் இங்கே இயங்கியதால், சின்ன+தறி+பேட்டை= சின்னதறிப்பேட்டை என்ற பெயர் ஏற்பட்டது. நாளடைவில் சிந்தாதிரிப்பேட்டை என மருவி விட்டது.

Ø  ஆங்கிலேயர்கள் பெரியளவில் மாளிகைகள் கட்டி வாழ்ந்தனர். சுதந்திரத்திற்குப் பிறகு, ஆங்கிலேயர்களிடம் பெரும் வணிகர்களான செட்டியார்கள், அவ்விடத்தை வாங்கினர். செட்டியார்கள் அதிகம் வாழ்ந்த இடம் என்ற காரணத்தால் செட்டியார்பேட்டை, செட்டிப்பேட்டை என்று அழைக்கப்பட்டது. இதை முழுமையாக அழைக்க முடியாத ஆங்கிலேயர், சேத்துப்பட்டு எனச் சுருக்கினர்.

Ø  பாந்தியன் சாலை- பொது மக்கள் குழுமும்கூடம் என்பது பேந்தியன் என்பதைக் குறிக்கும் சொல்லாக உள்ளது. இந்தப் பகுதி தற்போது அரசு அருங்காட்சியகத்தை உள் ளடக்கிய சில பகுதியைக் குறிக்கிறது.

Ø  முகப்பேர் - முகப்பு ஏரி எனப்பிரித்துப் பொருள் கொள்ளலாம். ஏரியின் முகப்புப் பகுதியில் உள்ள ஊர் என்பது பொருள். இதன் அருகே ஏரி இன்றும் காணப்படுகிறது.

Ø  வடசென்னையில் நீண்ட தெருவின் வட கோடியில் நாணயங்கள் அச்சடிப்பதற்காக கட்டப்பட்ட கட்டடம் காரணமாக இப்பெயர் உருவானது. ஏற்கனவே அங்கிருந்த தொழிற்சாலை ஒன்றினை அகற்றி விட்டு, தங்கநாணயத் தொழிற்சாலை அமைக்கும் பணிகள் துவங்கின. கி.பி., 1807ல் கட்டடம் கட்டி முடிக்கப்பட்டது; இயந்திரங்கள் 1841 ல் தான் பொருத்தப்பட்டன. ஆனாலும், இங்கு நாணயங்கள் அச்சடிக்கப்படவே இல்லை. இருந்தபோதிலும், இம்முயற்சிகளே தங்கசாலை (மின்ட்)  எனப் பெயர் பெறக் காரணமாக அமைந்து விட்டன.

Ø  ஆழ்வார்பேட்டை- முதலாழ்வார் மூவருள் ஒருவரான பேயாழ்வார் பிறந்த இடம் என்பதால் இப்பெயர் பெற்றதாகக் கூறப்படுகிறது. பேயாழ்வார் கோவிலுக்கு உரிய நிலங்கள் இருந்ததாலும் இப்பெயர் பெற்றது.

Ø  ஆயிரம் விளக்கு - ஆயிரம் விளக்குகள் கொண்ட பிரார்த்தனை அறை, நவாப் உம்தாத் உம் உமராவால் இங்கு கட்டப்பட்டதால் இப்பெயர் பெற்றது என்ற கருத்து சொல்லப்படுகிறது. ஆனால், ஆதாரமற்ற கருத்தாகவே இது உள்ளது. நவாப் கட்டியதாக தகவல் இல்லை.
மொகரம் பண்டிகை கொண்டாடப்படும் போது, இப்பகுதியில் இருந்த தொழுகை நடத்தும் இடத்தில் ஆயிரம் விளக்குகள் ஏற்றி வைப்பர்; இதனால் இப்பெயர் பெற்றது என்ற கருத்தும் உள்ளது.

Ø  கோட்டூர் - கோடு என்றால் வளைவு என்று ஒரு பொருள் உண்டு. அடையாறு ஆறு, சைதாப்பேட்டையில் இருந்து, கோட்டூர் வழியாக அடையாறு சென்று, கடலில் கலக்கிறது கோட்டூர் அருகே வளைந்து பின் செல்கிறது. ஆற்றங்கரையில் வளைவில் இருக்கும் ஊர் என்ற பொருளில் கோட்டூர் எனப் பெயர் பெற்றிருக்கலாம்.

Ø  வேளச்சேரி - இவ்வூரின் பழைய பெயர் வெளிச்சேரி. பிராமணர்களுக்காக அளிக்கப்பட்ட ‘பிரமதேயம்’ எனத்தெரிய வருகிறது. மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் வெளிச்சேரி என்றும் ஜினசிந்தாமணிச் சதுர்வேதி மங்கலம் எனவும் அழைக்கப்பட்டிருக்கிறது. கோட்டூர் நாட்டுக்கு உட்பட்டது என்ற குறிப்பால், கோட்டூருக்கு வெளியே அமைந்த சேரி, “வெளிச்சேரி’ என அழைக்கப்பட்டிருக்கலாம்.

Ø  திருவான்மியூர் - வான்மிகம் என்றால் புற்று என்று ஒரு பொருள் உண்டு. புற்றுகள் நிறைந்த பகுதியாக இது அறியப்படுவதால், “திரு’ என்ற அடைமொழி பக்தி இயக்க காலத்தில் சேர்க்கப்பெற்று திருவான்மியூர் எனப் பெயர் பெற்றிருக்கலாம்.

Data source received from Gowthami's mail