Sunday, 5 January 2014

தமிழர் உறவுப் பரம்பல்..!



தமிழில் உள்ள மொத்த எழுத்துக்கள் 247, இந்த 247 எழுத்துக்களில் 42 எழுத்துக்கள் ஓரெழுத்து சொல்லாக விளங்குகின்றன அதாவது இந்த 42 எழுத்துக்களுக்கும் தனியாக பொருள் உண்டு.

உயிரெழுத்து: ஆ , ஈ , ஊ , ஏ, ஐ ,ஓ எழுத்து பொருள்

ஆ - பசு

ஈ - கொடு ,பறக்கும் பூச்சி

ஊ - இறைச்சி

ஏ - அம்பு

ஐ - அழகு, தலைவன் , வியப்பு

ஓ - வினா , மதகு



ம வரிசை: மா . மீ , மு , மே, மை , மோ

மா - பெரிய , விலங்கு

மீ - மேலே , உயரம்

மு - மூப்பு

மே - மேன்மை , மேல் , மாதம்

மை - கண்மை , இருள்

மோ - முகர்தல் , மோதல்



த வரிசை: தா, தீ, து, தூ , தே, தை

தா - கொடு , கேட்பது

தீ - நெருப்பு

து - கெடு, உண், பிரிவு

தூ - வெண்மை , தூய்மை

தே - தெய்வம்

தை - மாதம்



ப வரிசை: பா, பூ, பே , பை , போ

பா- பாட்டு, நிழல், அழகு

பூ - மலர்

பே - நுரை , அழகு

பை - பசுமை , உறை

போ - செல்



ந வரிசை: நா , நீ, நே ,நொ, நை , நோ

நா - நாக்கு

நீ - நின்னை

நே - அன்பு , நேயம்

நை - வருந்து, நைதல்

நொ - நொண்டி , துன்பம்

நோ - நோவு வருத்தம்



க வரிசை: கா , கூ , கை , கோ

கா - சோலை , காத்தல்

கூ - பூமி , கூவுதல்

கை - கரம், உறுப்பு

கோ - அரசன் ,தலைவன் , இறைவன்



வ வரிசை: வா , வீ , வை , வௌ

வா - அழைத்தல்

வீ - பூ , அழகு ,

வை - கூர்மை, வைதல், வைத்தல்

வௌ - கௌவுதல், கொள்ளை அடித்தல்



ச வரிசை: சா, சீ, சே , சோ

சா- மரணம் , பேய் , சாதல்

சீ - இகழ்ச்சி , திருமகள்

சே - எருது

சோ - மதில்



மற்ற எழுத்து: யா

யா - மரம்

Seasonal Rain


1987-ல் இயற்கை விவசாயப் பயிற்சிக்குப் போனேன். அங்கு ஒரு பெரியவர் வந்திருந்தார். சுற்றுச்சூழல் கழகத்தினுடைய தலைவர் அவர். அவர் என்னிடம் "இனிமேல் உங்கள் நாட்டில் பருவ மழையே பெய்யாதென்று" சொன்னார். இதை அவர் 1987-ல் சொன்னார். ஏன் என்று நான் கேட்டதற்கு, "உங்களுடைய மேற்குத் தொடர்ச்சி மலை 3 ஆயிரம் அடி உயரத்தில் இருக்கிறது. அதில் 300 அடி உயரத்திற்கு மரங்கள் எல்லாம் இருக்கின்றன. அது அரபிக் கடலிலிருந்து வருகின்ற ஈரக் காற்றையெல்லாம் மேகமாக மாற்றி, மழையாக மாற்றி கீழே இறக்குகிறது. அந்த மழை நீரை பூமியில் இறக்கி பிறகு ஆற்றில் நீராக ஓடுகிறது. அந்த மரங்களையெல்லாம் நீங்கள் வெட்டிவிட்டு, இடுப்பளவு உயரமுள்ள "டீ" தோட்டம் போட்டு விட்டீர்கள். இன்னமும் போட்டுக் கொண்டிருக்கிறீர்கள். இன்னமும் குறையவே இல்லை அது. அதற்குப் பிறகு முழங்கால் உயரத்திற்கு உருளைக்கிழங்கு செடிகளை நடுகிறீர்கள். ஒரு ஜான் உயரத்திற்கு முட்டைக்கோஸ், காலிஃபிளவர் எல்லாம் பயிர் செய்து கொண்டிருக்கிறீர்கள். அதனுடைய விளைவு அரபிக்கடலிலிருந்து வரக் கூடிய ஈரக் காற்றை மேகமாக மாற்ற முடியவில்லை. மழையாக மாற்ற முடியவில்லை. அப்படியே தப்பித் தவறி மழை பெய்து ஓடுகின்ற தண்ணீரைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. ஆகவே எங்குப் பார்த்தாலும் வெள்ளம். ஆக, இனி உங்களுக்கு புயல் மழைதான் வரும். பருவ மழை வருவதற்கு வாய்ப்பில்லை" என்று சொன்னார் அவர். அவர் சொன்ன அன்றிலிருந்து தொடர்ந்து உற்றுக் கவனித்துக் கொண்டுதான் வருகிறேன். அதே தான் நடந்து கொண்டிருக்கிறது. நான் போகின்ற அத்தனை கூட்டங்களிலும் சொல்லிக் கொண்டிருக்கிறேன். நான் எழுதும் அத்தனை கட்டுரைகளிலும் எழுதி கொண்டுதான் இருக்கின்றேன். யாராவது இதை வாசித்து உணர மாட்டார்களா? தவறைத் திருத்திக் கொள்ள மாட்டார்களா? என்று. ஆனால் யாரும் யோசித்த மாதிரி தெரியவில்லை. தொடர்ந்து காடு அழிக்கப்படுகின்ற செய்தி வந்து கொண்டுதான் இருக்கிறது. - நம்மாழ்வார்

அர்த்தமுள்ள இந்துமதம் மொட்டை அடித்தல் ஏன் ? 

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மொட்டை அடிப்பது எதற்கு? ஆன்மீக ரீதியாக - தலையான பொருள் முடி. ஒவொரு மனிதருக்கும் தலை முடியானது கிரிடம் போன்றது. எங்கள் கிரிடத்தை உன் முன்னால் இறக்கி வைக்கிறோம் என்று இறைவனிடத்தில் வேண்டி முடி இறக்குதல் செய்கின்றனர். (முந்தய காலங்களில் இளவரசர்களை, அரச பதவியில் அமரவைப்பதர்க்கு முடிசூட்டு விழா (கிரிடம் சூட்டுவர்) என்று சொல்வது வழக்கம்.) அறிவியல் - வெட்டப்படும் முடிகளே அதிகம் வளரும். வியர்வை மற்றும் அழுக்கு காரணமாக மயிர்க்கால்கள் இடையில் அழுக்கு சேரும். மொட்டை அடிக்கும் போது இதை பெரும்பாலும் கண்டிருக்கலாம். தொடர்ச்சியாக இதை நீக்குவதால் தலை சார்ந்த வியாதிகள் வரும் வாய்ப்பு குறையும்.குழந்தைகள் தாயின் கருப்பையில் இருக்கு போழுது அந்த கர்ப்பையில் உள்ள மல ஜலங்களோடு மிதந்து கொண்டு இருக்கும் அப்படி இருக்கும் வேளையில் அந்த குழந்தையின் மயிர்கால்கள் வழியாக அந்த கெட்ட நீர் உள்சென்று ஊறி இருக்கும் ஆகையால் அதை குல தெய்வம் பெயர் சொல்லி மொட்டை அடிப்பது வழக்கம். அப்படி செய்யாமல் இருக்கும் குழைந்தகளுக்கு தலையில் சிரங்கு, புண் போன்றவை வருவதை பார்த்து இருப்பிர்கள். குழந்தை தாயின் கருப்பையில் வளரும் பொழுதே முடியும், நகமும் வளரும் ஆகவே அவைகளும் மனித உருப்புகளில் ஒன்று தான் ஆனால் அவை மீண்டும் வளரும் உருப்புகள்.
வகுப்பறையில் ஆசிரியர் மாணவர்களைப் பார்த்துக் கேட்கிறார், உலகில் இருக்கும் அனைத்தையும் படைத்தது கடவுளா ? என்று. ஒரு மாணவன் ஆமாம் என பதில் அளிக்கிறான். ஆசிரியர் : அப்படியெனில், சாத்தானை படைத்ததும் கடவுள் தானா? மாணவன் அமைதி காக்கிறான். சிறிது நேரம் கழித்து ஆசிரியரைப் பார்த்து நான் உங்களை சில கேள்விகள் கேட்கலாமா? என்கிறான். ஆசிரியர் அனுமதிக்கிறார். மாணவன் : 'குளிர்நிலை' என்று ஏதேனும் இருக்கிறதா? ஆசிரியர்: ஆமாம் இருக்கிறது.நீ குளிரை உணர்ந்தது இல்லையா? மாணவன்: மன்னிக்கவும்.தங்கள் பதில் தவறு.குளிர் என்ற ஒன்று இல்லை.அது வெப்பத்தின் பற்றாக்குறை. சராசரி வெப்பம் குறைந்ததை தான் குளிர் என்கிறோம். இருள் என்ற ஒன்று இருக்கிறதா? ஆசிரியர் : ஆம், இருக்கிறது. மாணவன் : மன்னிக்கவும்.மீண்டும் தவறு.இருள் என்ற ஒன்று இல்லை.ஒளி பற்றாக்குறையை தான் இருள் என்கிறோம். உண்மையில் ஒளி, வெப்பம் இவற்றை தான் நாம் அதிகம் படிக்கிறோம்.குளிரையும் இருளையும் அல்ல. அதே போல், சாத்தான் என்று இவ்வுலகில் எதுவுமில்லை. உண்மையில் அது கடவுளின் மீது உள்ள அன்பின் , நம்பிக்கையின் பாற்றாக்குறை. அந்த மாணவன் வேறு யாருமில்லை.ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். # ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் எழுதிய 'God Vs Science' புத்தகத்திலிருந்து...

from சித்தர் அறிவியல் Wisdoms of Siddhars
விரதமே மகத்தான மருத்துவம்!

இயற்கை மீதான பேரன்பும் உடல் மீதான அக்கறையும் எந்த வயதிலும் ஒருவரை இளமை குறையாமல் வைத்திருக்கும் என்பதற்குச் சாலச் சிறந்த உதாரணம் நம்மாழ்வார். சிறிய எழுத்துக்களையும் கண்ணாடி இல்லாமல் துல்லியமாகப் படிப்பது, சோர்வே இல்லாமல் பல கிலோ மீட்டர் தூரம் நடப்பது, தோட்ட வேலை, எழுத்துப் பணி, மேடைப் பேச்சு என ஒரு நாளைக்கு 16 மணி நேரம் பம்பரமாகச் சுழல்கிறது நம்மாழ்வாருக்கு. ''75 வயதிலும் எப்படி இப்படி ஒரு சுறுசுறுப்பு?'' எனக் கேட்டால், சிறு குழந்தையாகச் சிரிக்கிறார் நம்மாழ்வார்.

''எத்தனையோ வருஷங்களுக்கு முன்னாலேயே, 'உணவே மருந்து; மருந்தே உணவு’ன்னு திருமூலர் சொல்லிட்டுப் போயிட்டார். இந்த அற்புதமான வாக்கை ஆராதிக்கத் தவறியவர்கள்தான் எண் சாண் உடம்பில் எண்ண முடியாத வியாதிகளோடு அலையறாங்க. வாழ்க்கையில் இரண்டு வகை இருக்கிறது. ஒன்று நோயே வராமல் வாழ்வது. இரண்டாவது, நோய் வந்த பின் வருந்தியபடியே வாழ்வது. முதல் வகையில் இணைந்துவிட்டால், நமக்கு இன்னல்கள் இருக்காது.

'மருந்து என வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்’ என்ற குறளிலேயே நோய் அண்டாமல் வாழ்வதற்கான வழி சொல்லப்பட்டு இருக்கிறது. உண்ட உணவு சீரணமாகிவிட்டதை அறிந்து, அதன் பிறகு உண்டால் அந்த உடம்புக்கு மருந்து என்ற ஒன்றே தேவை இல்லை எனச் சொல்லி இருக்கிறார் வள்ளுவர்.

எதை, எப்போது, எப்படி உண்ண வேண்டும் என்பதே நம்மில் பலருக்கும் தெரிவதில்லை. நாம் உண்ணும்போது முதலில் உணவை விழுங்குறோம். ஆனால், அப்படி விழுங்கக்கூடாது. பற்களால் நன்றாக அரைத்து, கூழாக்கி உமிழ்நீரோடு சேர்த்து உள்ளே தள்ளவேண்டும். இதைத்தான், 'நொறுங்கத் தின்றால் நோய் தீரும்!’ எனப் பழமொழியாகச் சொன்னார்கள். அளவு கடந்து உணவு உண்பவர்கள் நோய்களை எதிர்கொள்ளவேண்டி இருக்கும். நாம் உண்ணும் உணவுக் கழிவுகள் உடம்பில் உள்ள ஒவ்வொரு செல்லிலும் கொஞ்சம் கொஞ்சமாகத் தேங்குகிறது. இதன் அளவு அதிகரிக்கும்போது நோய் உண்டாகிறது. சரி, அதை எப்படிக் களைவது? இதற்கான சுலபமான வழி, உண்ணாநோன்பு. இதைத்தான் 'விரதம்’ என்ற பெயரில் கடைபிடித்தார்கள் நமது முன்னோர்கள். 'நோயிலே படுப்பதென்ன கண்ண பரமாத்மா, நோன்பிலே உயிர்ப்பதென்ன கண்ண பரமாத்மா’ எனப் பாடினார்களே... அந்த நோன்புதான் உண்ணாநோன்பு. இறக்கும் தருவாயில் இருப்பவனைக்கூட உயிர்த்தெழுச் செய்யும் சக்தி உண்ணா நோன்புக்கு இருக்கிறது. இதைத்தான் ஆங்கிலத்தில் 'தெரப்பூட்டிக் பாஸ்ட்டிங்’ (Theraupeutic fasting) என்று சொல்கிறார்கள். இன்றைக்கு சர்வதேச அளவில் இந்தச் சிகிச்சை பிரபலமாகி வருகிறது. உண்ணாநோன்பு இருக்கும்போது நம் உடலுக்குள் இருக்கும் தேவையில்லாத கழிவுகள் தன்னாலே வெளியேறி விடுகின்றன. உடல் தன்னைத்தானே குணப்படுத்திக்கொள்ள நாம் அனுமதிக்க வேண்டும்.

அடுத்ததாக, எதைச் சாப்பிட வேண்டும் என்பது மிகவும் முக்கியம். நம் உணவில் காய்கறிகள், கீரைகள், பழங்கள் ஆகியவற்றை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். 'வெந்ததைக் குறைத்தால் வேதனையை குறைக்கலாம்’ என்பார்கள். அதாவது வேகவைத்த உணவைக் குறைத்துக்கொண்டு பச்சைக் காய்கறிகள், பழங்களை உண்ண வேண்டும். நான் 35 வயதில் கண்ணாடி அணிந்தேன். 60 வயதில் அதை அகற்றிவிட்டேன். இப்போது கண்ணாடியைப் பயன்படுத்துவதே இல்லை. பொடி எழுத்துக்களைக்கூட என்னால் துல்லியமாக வாசிக்க முடியும். இதற்குக் காரணம் எனது உணவுப் பழக்கங்கள்தான்!'' - விழி விரியவைக்கும் அளவுக்கு ஆச்சரியமாகப் பேசுகிறார் நம்மாழ்வார். அடுத்து, மூலிகைகளை நோக்கி நீள்கிறது பேச்சு.

''இயற்கை நமக்குக் கொடுத்த அருட்கொடை மூலிகைகள். நாம் பயிர் செய்யாமலேயே நமக்கான உணவாக சில மூலிகைகளை இயற்கை உற்பத்தி செய்கிறது. உதாரணமாக, பிரண்டை. இதைத் துவையல் செய்து சாதத்தில் குழம்புக்குப் பதிலாக பிசைந்து உண்ணலாம். தூதுவளை, மொசுமொசுக்கை இலைகளைச் சேர்த்து ரசம் வைத்து உண்டால் நாள்பட்ட சளி தீரும். வாய்ப்புண்ணை ஆற்ற மணத்தக்காளி, வெட்டுப் புண்களை ஆற்ற வெட்டுக்காயப் பச்சிலை, அனைத்துக் கும் சிறந்த ஆவாரை, துளசி என மூலிகைகளின் அதிசய ஆற்றல் கொஞ்சநஞ்சம் அல்ல. நம்மைச் சுற்றி வளர்ந்துகிடக்கும் எண்ணில்லா மூலிகைகளை நாம் சரியாகப் பயன்படுத்தினாலே பாதி நோய்கள் காணாமல் போய்விடும்!'' எனச் சொல்லும் நம்மாழ்வார், உடலின் மகத்துவத்தையும், யோகாவின் சிறப்பையும் சொல்லத் தொடங்கினார்.

''இயற்கை ஒருபோதும் தவறு செய்வதில்லை. உடல் ஒருபோதும் தன் கடமையை நிறுத்துவதில்லை. பசி வந்தால் உணவு, தாகம் எடுத்தால் தண்ணீர், சோர்வு வந்தால் உறக்கம் என உடல் சரியான சமிக்ஞைகளை நமக்கு கொடுத்தவண்ணம் இருக்கிறது. அதன்படி உணவு, உறக்கத்தை நாம் கடைப்பிடித்தாலே உடலுக்கு எந்தவிதமான சிக்கலும் வராது. பலர் உடம்பு வலிக்காக மாத்திரை, மருந்துகளை உட்கொள்கிறார்கள். வலி என்பது உடம்பு தன் உள்ளே இருக்கும் நச்சுப் பொருட்களை வெளியேற்றும் முயற்சி. அதைத் தடுக்கக்கூடாது.

50 வயது வரை உடம்புதான் உன்னதம் என நினைக்கும் மனது, அதற்குப் பிறகு ஆன்மாவை ஆராதிக்கிறது. ஆன்மா இந்த உடம்புக்குள்ளேதானே இருக்கிறது! அதனால், உடலைப் பராமரிப்பதும் அவசியம். இது இரண்டையும் ஒரே நேரத்தில் பராமரிக்க உதவுவதுதான் யோகா. நான் நீண்ட காலமாக யோகா செய்து வந்தாலும், 'ஈஷா’ பயிற்சியில்தான் அதை முறைப்படுத்தினேன். தினமும் காலையில் நடைப்பயிற்சி, மூச்சுப் பயிற்சி, யோகா செய்கிறேன்.

ஈஷா யோகா பயிற்சியின்போது நடந்த நேர்காணலில், 'யோகா செய்வதன் மூலம் நோய்கள் குணமாகும் என்றால், எதற்காக இத்தனை மருத்துவர்களும், மருத்துவமனைகளும் இருக்கின்றன?’ என சத்குருவிடம் கேட்டேன். 'நாட்டில் தினமும் ஆயிரக் கணக்கில் விபத்துகள் நடக்கின்றன. விபத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு யோகா சொல்லிக் கொடுக்க முடியாது அல்லவா? அவர்களுக்குத் தேவை, அவசர சிகிச்சை. அதற்காகத் தான் மருத்துவர்களும், மருத்துவமனைகளும்!’ என்று அவர் அமைதியாகச் சொன்னார்.

அவர் சொன்னது உண்மைதான். ஆங்கில மருத்துவத்தை அவசரத்தேவைக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். மாத்திரை, மருந்துகளைத் தொடர்ச்சியாக உட்கொள்ளும்போது, அதுவே உடம்பில் பல உபத்திரவங்களை உண்டாக்குகிறது.

மொத்தத்தில், சரியான பழக்க வழக்கங்களும், உடலைப் பேணும் உணவு முறையும், ஆரோக்கியமான சுற்றுச்சூழலும் இருந்தாலே நோய்க்கு 'நோ என்ட்ரி’ போட்டுவிடலாம்!'' எனச் சொல்லும் நம்மாழ்வார் இறுதியாக இப்படிச் சொல்கிறார் வாழ்வியல் மந்திரத்தை.

''கணியன் பூங்குன்றனார் சொன்ன 'தீதும், நன்றும் பிறர் தர வாரா’ என்கிற வரி நம் உடலுக்கும் உள்ளத்துக்கும் ஒருசேர வழிகாட்டக்கூடியது. அந்த வரிகளை மனதில் ஏற்று இயற்கையை வணங்கி, உடலை ஆராதிக்கக் கற்றுக் கொண்டால் வாழ்வின் சிறப்புக்குக் குறைவே இருக்காது!''.

- நன்றி சக்தி விகடன்
 — with Om Anand TTp andDr. G Nammalvar, Organic Agriculturist.

Saturday, 15 June 2013

saw in someones blog

ஒரு மனிதன் கருவில் உருவான நாள் முதல் இறக்கும் நாள் வரை உள்ள காலத்தை வாழ்க்கை அல்லது வாழ் நாள் என்று கணக்கிடுகிறார்கள். இந்த கால கட்டம் ஒவ்வொருவருக்கும் ஒரு மணித்துளியாகவும் இருக்கலாம் அல்லது ஒரு நூற்றாண்டாகவும் இருக்கலாம். அதன் அளவு ஒருவருக்கும் தெரியாது; அனுமானிக்கவும் முடியாது. வாழ்க்கையின் கால வரம்பு நிலையற்றதாக இருக்கிறது. ஒரு மனிதன் எப்போது வேண்டுமானாலும் இறக்கலாம். ஆகவே வாழ்க்கை நிலையற்றது என்று பெரியோர்கள் கூறுகிறார்கள். நிலையாமை என்பது வேறு; இல்லாமை என்பது வேறு, ஒரு மணித்துளி வாழ்ந்தவனுக்கும் வாழ்க்கை இருந்தது. நூறாண்டுகள் வாழ்ந்தவனுக்கும் வாழ்க்கை இருந்தது, ஆனால், இருவருக்குமே முடிவு எப்போது வரும் என்று தெரியாமலே இருந்தது; அதாவது நிலையாமை இருந்தது.ஆகவே, வாழ்க்கையில் நிலையாமை இருந்தாலும், ஒருவனுக்கு அளிக்கப்பட்ட வாழ்க்கையை அவன் வாழ்ந்தே ஆகவேண்டும். தற்கொலை செய்துகொள்ள முடியாது,25 வருட வாழ்க்கையை அவன் பிரம்மச்சாரியாகக் கழிக்க வேண்டும். மீதமிருந்தால், அடுத்த 25 வருட வாழ்க்கையை அவன் கிருஹஸ்தனாகக் கழிக்க வேண்டும். மேலும் மீதமிருந்தால் அடுத்த 10 வருட வாழ்க்கையை வானப்பிரஸ்தனாகக் கழிக்க வேண்டும். எஞ்சியிருந்தால் மீதமுள்ள வாழ்க்கையை சந்நியாசியாகக் கழிக்க வேண்டும்.இப்படி வாழும் நான்கு நிலைகளில் கிருஹஸ்த வாழ்க்கையே சிறந்தது. ஏனெனில், பிரம்மச்சாரிக்கும், வாணப்பிரஸ்தனுக்கும், சந்நியாசிக்கும் சோறு போட கிருஹஸ்தனால் மட்டுமே முடியும். கிருஹஸ்தன்( இல் வாழ்வான் ) இல்லாவிட்டால், மற்ற மூவரும் இல்லை. இதனையே, வள்ளுவர்,


”இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்நல்லாற்றின் நின்ற துணை.”-----என்றார்.