Monday, 23 November 2015

இராஜநாகம்


நிறையப் பேர் வைட் காலர் ஜாப்பிற்கே ஆசைப்படுபவர்களாக இருக்கிறார்கள், ஆனால் ரோமியலஸ் விடேகர் தமது வாழ்க்கையை காட்டின் அதிசயங்களையும் ஆச்சர்யங்களையும் நுகர்வதற்காக இயற்கையோடு தம்மை இணைத்துக் கொண்டார்.
img_4940pg
யார் இவர் ? என்ற எனது தேடல் இவரைப் பற்றி ஆச்சர்ய விசயங்களை தந்தது. அவைகளை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
ரோமியலஸ் விடேகர் , இயற்கை ஆர்வளர் மட்டுமல்ல, (conservationist) ஊர்வன நீர்வாழ் உயிரிகளை நேசிப்பவர் மட்டுமல்ல ( herpetologist )அவர் சினிமா தயாரிப்பாளர் (டாக்குமென்ரி) மட்டுமல்ல, சென்னையில் உள்ள பாம்பு பண்னையை நிறுவியவரும் ஆவார்.
மனித வாசனை படாத பழங்குடிகளின் பாதம் கூட படாத அமைதியான காட்டுப்பகுதி அமைதிப்பள்ளத்தாக்கு. இதனை உலகறியச் செய்தவர் ரோமியுலஸ் விடேகர்.
இந்திய துணைக்கண்டத்தில் அழியும் நிலையில் இருந்த பாம்பு இனங்கள் இந்த பண்ணையில் பராமரித்துப் பாதுகாக்கப் படுகிறது. கிண்டியில் இந்த பாம்பு பூங்கா 1972 ல் இவரால் ஆரம்பிக்கப் பட்டது. இது தான் இந்தியாவில் முதன் முதலில் ஆரம்பிக்கப் பட்ட பாம்பு பூங்கா. வேர்ட்லைப் ஃபண்ட் ஒத்துழைப்புடன் இதை சாதித்தார். அதன் பிறகு (1976)ஆரம்பிக்கப்பட்டது தான் மாமல்லபுரம் சாலையில் உள்ள முதலை பண்ணை இதில் 15 வகைப்பாட்டியலில் வரும் 3000 முதலைகள் இருக்கின்றன. முக்கியமாக இதில் இருக்கும் 3 வகைகள் அழிவின் விளிம்பில் இருகின்றன என்று சொல்கிறார்கள்.
சிறியவயதில் இருந்து பாம்புகளை பிடிப்பதில் வல்லவர்.
அமெரிக்காவில் பிறந்த இவர் இந்திய குடியுரிமை பெற்றவர் அதற்கான இவரின் பயண எல்லை விரிந்த அளவிளானது.
க்ரோகடைல் ஹண்டர் ஸ்டீவன் இர்வின் பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கும் அவர் போல செயற்கையான த்ரில்கள் இவரின் டாக்குமென்ரிகளில் பார்க்கமுடியாது. இவருடைய கோப்ரா டாக்குமென்ரிகள் எதார்த்தமானது, செயற்கை கலப்பு இல்லாதது.
இந்தியாவின் பல பகுதிகளிலும் மழைக்காடுகளில் ரிசர்ச் செண்டர் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்பது இவரது அவா.
இயற்கையையும்,காட்டுயிர்களை பற்றியும் இவரது அனுபவங்களை பேசுகிறது இவர் எழுதிய புத்தகங்கள். wild Dreams, Green screen (2002)
“The Dragon Chronicles,” filmed in 2008 for PBS’s series Nature, shows Whitaker cave-diving in ice-cold water for Slovenian olms, climbing trees in pursuit of flying lizards in the Western Ghats, and Komodo dragon-wrestling in Indonesia.
எழுபதுகளில், ரஷ்யன் பிலிம் நண்பருடன் சேர்ந்து “ரிக்கி டிக்கி தாவி” எனும் டாகுமென்ரியை எடுத்தார். அதில் பறவைகளின் முட்டைகளை திருடும் பாம்புதான் முக்கிய கதா பாத்திரம்.
ரோமியலஸ் சொல்கிறார் “ 1980 ல் நான் காட்டு வாழ்க்கையை பற்றிய படங்களை எடுத்த போது என்னிடம் டி.வி கிடையாது, இப்படி பட்ட படங்கள் அதிகம் இல்லை அப்போது. பாம்புகளுடனான எனது பரிசயம் மற்றும் அவைகள் பற்றிய விழிப்புணர்வு ஜனங்களுக்கு சென்று சேரவேண்டும் என்று விருப்பப் பட்டேன். பாம்பு பண்ணை ஆரம்பிக்கப் பட்ட பிறகு அவைகளை பற்றி வருடத்திற்கு மில்லியன் பேருக்கு தெரியப் படுத்தப் படுகிறது. ஆனால் அதுவே டி.வி மூலமாக ஒரே நேரத்தில் 20 மில்லியன் பேரை சென்றடைகிறது.”
பள்ளித்தோழர்கள் இருவருடன் சேர்ந்து எடுத்த டாக்குமென்ரி (Snake bite – 1985 ) பாம்பு கடியால் இறப்பவர்களை பற்றியது. இதற்கு 50000 ரூபாய் செலவானது. அரை மணிநேரம் ஓடும் இது பல இந்திய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு உள்ளது. இதற்கு U.S ல் கோல்டன் ஈகிள் விருது கொடுக்கப்பட்டு கெளரவிக்கப் பட்டது.
இந்த மாதிரியான படங்கள் எடுக்க செல்லும் காட்டுபகுதிகளில் மலைவாழ் மக்களோடு (ஆரவல்லி, பழனி மற்றும் இருளர்கள் )பழகிய அனுபங்கள் மறக்கமுடியாது என சொல்கிறார். அந்த பயணங்களின் போது கொடிய விசம் கொண்ட பாம்புகளிடம் இருந்து தப்பித்தேன். ஆனால் அதைவிட NH 47 ல் காரில் செல்வது பயமாய் இருக்கிறது.
இவரது பல டாக்குமென்ரிகளும், அனிமல் ப்ளானட், டிஸ்கவரி, நேசனல் ஜியாகிரபிகளில் ஓடுகிறது.
விருதின் மூலம் தனக்கு கிடைத்த 30000 பவுண்டுகளை Agumbe Rainforest Research Station ஆரம்பிக்க செலவிட்டார். இங்கு முக்கியமாக ராஜ நாகங்களின் வாழ்வியலை பற்றிய ஆய்வகம் செய்யப் படுகிறது.
கிங் கோப்ரா (ராஜ நாகம்) நேசனல் ஜியாகிரபியில் எமி அவார்ட்(Emmy award) பெற்று தந்தது. இது சின்னத் திரையில் ஆஸ்கார் போன்றது.
“super sized ” முதலை படம் இந்தியா கிழக்கு ஆப்பிரிக்கா, மற்றும் ஆஸ்திரேலியாவில் படமாக்கப் பட்டது.
“I’m 65 years old, and instincts (and some well-meaning friends) say I should slow down and maybe take it a little easier, but how can I? ”
Romulus Whitaker
img_p9e0g2
“I am happiest out in the wild just watching turtles, snakes, crocs and other herps.”
“[Children] are fascinated with snakes. They haven’t got that steely thing that you end up either fearing or hating or despising or loathing them in some way. They are interested.”
ராஜ நாகம் பற்றி சில தகவல்கள் :
சாதாரணமாக 18 அடி நீளம் வளரக்கூடிய ஜீவன். வால் நுனி யில் நேராக தரைமேல் எழும்பி மனிதனை அச்சுறுத்தக் கூடிய வல்லமையும், உலகில் கொடும் விசம் கொண்ட உயிரினங்களில் ஒன்று. இருபது வருடங்கள் உயிர் வாழும்.
அடிப்படையில் மனிதர்களை கண்டால் ஒதுங்கி விடும் ஆனால் கட்டம் கட்டப் படும் போது நேருக்கு நேர் எதிர்த்து தாக்கக்க கூடியது.
இதன் சிறு துளி விசம் 20 மனிதர்களை கொல்லக் கூடியதும், யானையை கொல்லவும் போதுமானது.
மழை காடுகளும் காட்டு பகுதியோடு ஒட்டி மனிதர் வசிப்பிடங்களிலும் இதன் நடமாட்டம் இருக்கும்.
தென்கிழக்காசியா, தென் சீன பகுதிகளிலும் காணப் படும் ராஜ நாகம் இடத்திற்கு தகுந்தாற் போல் நிறங்களில் வேறு படுகிறது. விசமுடைய பாம்புகளையும் விழுங்கக் கூடியது. மரத்தின் மீதேறி பறவை முட்டைகளையும் ஸ்வாகா செய்யும்.

பெண் ராஜ நாகம் முட்டைகளை அடைகாக்க இழை தளைகளை கொண்டு கூடு கட்டும். ஆண் ராஜ நாகம் பெண் ராஜ நாகத்துடன் இணை சேர வில்லை யென்றால் அவைகளை விழுங்குவது ஏன் ?  என்பது இன்னும் புலப்படாத இரகசிய மாக இருக்கிறது.

மரியாதைக்குரிய பிரிட்டிஷ் பொறியாளன் – ஜான் பென்னிகுயிக்.


யார் இந்த ஜான் பென்னிகுயிக்…..?
இது 118 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த நிலை…
தமிழகத்தின் நெல்லைமாவட்டத்தில் உற்பத்தியாகும் ஆறு அது(முல்லைப் பெரியாறு). குமுளி வழியாக கேரளாவுக்குள் பயணம் செய்து அரபிக்கடலில் கலந்து கொண்டிருந்தது. குமுளி மலைக்குக் கிழக்கே தமிழகத்தில் தேனிமாவட்டம் தொடங்கி அதைச்சுற்றியிருந்த சுமார் இரண்டரை லட்சம் ஏக்கருக்கும் அதிகமான (அரிசி தரும்) நெல் விளையும் பூமி தண்ணீரின்றி வறண்டு கிடந்தன. தலைக்கு மேலே கோடிக்கணக்கான லிட்டர் தண்ணீர் அதுவும் தமிழகத்தில் உற்பத்தியாகிற தண்ணீர் ஒரு சொட்டுக்கூட தங்களுக்குக் கிடைக்காமல் அரபிக்கடலில் எந்த மனிதர்க்குப் பலனின்றி கலந்து உப்பாகிக்கொண்டிருந்தது.
தேனிமாவட்டப்பகுதிகளில் வாழ்ந்தவர்கள் உணவுக்கு கிழங்குகளைப் பறித்து தின்றுகொண்டும், வழிப்பறி, கொள்ளை அடித்துக்கொண்டும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். வேறு வழி இல்லை…உணவுக்கு என்னவேண்டுமானாலும் செய்யும் அளவுக்கு பசி, பஞ்சம், பட்டினி தலைவிரித்தாடுகிறது.
பிரிட்டிஷ் பொறியாளராக இந்தப்பகுதிக்கு வந்திருந்த ஜான் பென்னிக்குயிக்….இந்த மக்களின் நிலையைப்பார்த்துப் பரிதாப்படுகிறார், பதறுகிறார். கண்ணுக்குத் தெரியும் மலையின்மீது ஆறு ஓடுகிறது…அது கீழேவந்தால் இந்தப்பகுதி வளம் பெறும்.
220px-John_Pennycuick
அந்தத்தண்ணீரை அப்படியே கீழே கொண்டுவருதற்கு வழி இல்லை. அதற்கு பல கோடி ரூபாய் செலவாகும். அப்படியானால் குமுளி (கேரளப்பகுதி) ஆற்றுக்குக்கு குறுக்கே அணை ஒன்று கட்டவேண்டும். அந்த அணை அரபிக்கடலில் ஓடிக்கலக்கும் தண்ணீரைத் தடுத்து தேக்கி வைக்கும். அதாவது மேற்கு நோக்கி ஓடும் ஆற்றை அணை கொண்டு தடுத்து (தேவையான அளவு தேக்கிக்) கிழக்கு நோக்கித் திருப்பவேண்டும். மீதமுள்ள தண்ணீர் அரபிக்கடலுக்கே செல்லலாம். (இந்தவகையில் அத்தகைய தொழில்நுட்பத்தில் கட்டப்பட்ட இந்தியாவின் முதல் அணை இது)
கிழங்கையே மூன்று வேளை உணவாக உண்டு வாழும் மக்கள் வாழ்க்கை முறை மாறும் என்று எண்ணுகிறார். பிரிட்டிஷ் அரசுக்கு பட்ஜெட் தருகிறார். அரசும் அரைமனதோடு முதல்கட்டமாக சிறு தொகை ஒன்றைத் தருகிறது. சுண்ணாம்பு, சுட்ட செங்கல் ஜல்லி, சர்க்கரை, கால்சியம் ஆக்சைடு, முட்டை என கலவைகள் உருவாக்கப்பட்டு கட்டப்படவேண்டும்.
அணை கட்டுவதற்குத் தொடங்கியபோது காட்டுக்குள் விலங்குகள் தொல்லை, யானைகள் தொல்லை என பலவித இயற்கை செயற்கை தொல்லைகளைச் சந்திக்கிறது கட்டுமானக்குழு. தொடர்ந்து மூன்று ஆண்டுகள் பலவித பாதிப்புகளையும் தாண்டி அணைக்கட்டுமானம் நடக்கிறது.
ஒரு இரவு தொடங்கிய மழை..தொடர்ந்து பெய்ய கட்டப்பட்ட கட்டுமானம் மழை வெள்ளத்தில் அடித்துச்செல்லப்படுகிறது. பென்னிக்குயிக்கின் கனவும் அந்த மழை வெள்ளத்தில் அடித்துசெல்லப்படுகிறது. கூலிக்காக இல்லாமல் தங்கள் சந்தததிகளின் வாழ்வாதாரத்திற்காக கல்லும், மண்ணும் சுமந்து குழந்தை குட்டிகளோடு காட்டுக்குள் ஒட்டிய வயிறோடு பாடுபட்ட அத்தனை ஊழியர்களின் கனவுகளும் மழைவெள்ளத்தில் அடித்துசெல்லப்படுகிறது. அடர்ந்த வனாந்திரத்தில் ரத்தம் சிந்திக்கட்டிய அணை காட்டாற்று வெள்ளத்தோடு கலந்து கண்முன்னே பறிபோகிறது.
பிரிட்டிஷ் அரசின் உயர் அதிகாரிகளை அணுகுகிறார் பென்னிக்குயிக். மூன்று ஆண்டுகள் கட்டிய நிலையில் அணைக்கட்டுமானம் உடைந்துபோன நிலையில் அவரை மேலும்கீழும் ஏளமானகப்பார்த்த அவர்கள் இனிமேல் சல்லிக்காசுகூடக் கொடுக்கமுடியாது என்று கைவிரித்து விடுகின்றனர். தளரவில்லை பென்னிக்குயிக். தனது நாட்டுக்குச் செல்கிறார். தனக்கும் தன் மனைவிக்குச் சொந்தமான அத்தனை சொத்துக்களையும் விற்றுக்காசாக்குகிறார். மீண்டும் தேனிமாவட்டத்திற்கு வருகிறார்.
இந்தமுறை பென்னிக்குயிக்கின் சொந்தக்காசில் பிரம்மாண்டமாய் எழுந்து நிற்கிறது முல்லைப்பெரியாறு அணை. இந்த முறை இயற்கையும் அவருக்கு ஒத்துழைத்தது. முல்லைப்பெரியாறு அணை கட்டியதோடு மட்டுமல்லாமல், அந்த அணையில் இருந்து வெளியேறும் தண்ணீரை தேனி மாவட்ட நிலப்பரப்புக்குகொண்டு வர ராட்சத குழாய்களைப் பதித்து தண்ணீரை தரைக்குக் கொண்டுவருகிறார் பென்னிகுயிக். அஸ்திவாரத்தில் இருந்து 176 அடி உயர அணை அது. அதன் அப்போதைய மதிப்பு 1.04 கோடி ரூபாய் (!).
காய்ந்து வறண்டுபோய் வானம் பார்த்துக்கிடந்த 3 லட்சம் ஏக்கர்களுக்கும் அதிகமான நிலப்பரப்புக்கு தண்ணீர்கிடைக்கிறது. ஆயிரக்கணக்கான விவசாயக் குடும்பங்கள் மூன்று வேளை நல்லுணவு உண்ணுகின்றனர். எவரையும் துன்புறுத்தாத நாகரிக வாழ்வியலுக்கு மாறுகின்றனர் லட்சக்கணக்கானோர். கோடிக்கணக்கான மக்களுக்கு நல்ல குடிநீர் கிடைக்கிறது.
தேனிமாவட்டத்தின் தேவைகளை நிறைவேற்றியபின் அப்படியே கிழக்கு நோக்கி ஓடும் இந்த தண்ணீர், மதுரையைக் கடந்து அங்கும் தாகம் தீர்த்துவிட்டு, சிவகங்கை மாவட்டத்திற்கும் தாகம் தீர்த்துவிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தையும் ஈரப்படுத்திவிட்டு வங்காளவிரிகுடாவில் இறுதியில் கலக்கிறது. மேற்கே அரபிக்கடலில் கலந்த தண்ணீரை வங்காள விரிகுடாவிற்குத் திருப்பிவிட்ட பென்னிகுயிக் எத்தனை சந்ததிகளுக்கு எத்தனை கோடி மக்களுக்கு வாழ்வாதாரமாக மாறிப்போனார் ? அதுவும் தன் சொந்தக்காசில்…?!
இந்த அணை 50 ஆண்டுகள் மட்டுமே தாக்குப்பிடிக்கும் என்றே அவரைக் கேலி செய்தனர் அன்றைய பிரிட்டிஷ் சக பொறியாளர்கள். ஆனால் 119 ஆண்டுகளையும் தாண்டி இன்னமும் பல 100 ஆண்டுகளுக்கு வலுவாக இருக்கும் தரத்தில் உள்ளது முல்லைப்பெரியாறு அணை. 119 ஆண்டுகளுக்கு முன்னரே 1 கோடியே 40 லட்சம் ரூபாய் என்றால் இன்று இந்த அணையின் மதிப்பு எத்தனை கோடிகள்….???? !!!
இத்தகைய மாபெரும் புரட்சியின் நாயகன்தான் ஜான் பென்னிக்குயிக்..!

பெண்கள் சாப்பிடவேண்டிய உணவுகள்

”சிட்னியில் வசிக்கும் அக்கா வீட்டுக்குப் போயிருந்தேன். அப்போது அக்காவின் மகள் வயதுக்கு வந்துவிட, விதம்விதமாக உணவுகளைத் தயார் செய்துவைத்து, ‘இதைச் சாப்பிடு, அதைச் சாப்பிடு’ என மகளுக்குத் திணித்துக்கொண்டிருந்தார் அக்கா. இதைப் பார்த்ததும், ”நம் ஊரில் இருக்கும் பலரே, இதில் பலதையும் மறந்துட்டாங்க. நீ மறக்காம பார்த்துப் பார்த்து செய்திட்டிருக்கியே’ என்றேன் நான்.
”இதுமட்டுமில்லை. காலையில தூங்கி எழுந்ததும் வெறும் வயித்துல நல்லெண்ணெய், விளக்கெண்ணெய், பால் இதெல்லாம் குடிக்கச் சொல்றாங்க. அதுக்கப்புறம் உளுந்தங்களிதான் சாப்பிடணுமாம். கொஞ்ச நேரம் கழிச்சு வாழைப்பழம், எள்ளுருண்டை இதெல்லாம் தர்றாங்க. வடை சாப்பிடு… பயத்தம் பருப்பு பாயசம் சாப்பிடுனு வெரைட்டியா சமைச்சுப் போடறாங்க’ என்று அம்மாவைப் பெருமையோடு பார்த்தாள் மகள்.
”வயசுக்கு வந்த சமயத்துல சாப்பிடற ஒவ்வொரு சத்தான ஆகாரமும், பொண்ணோட எலும்பை உறுதியா வெச்சுருக்கிறதோட, ரத்தப் போக்கை சரியாக்கி, வலியில்லாம பாத்துக்கும். என் காலத்துல, இதைவிட அதிகமாவே எங்கம்மா செஞ்சு போட்டாங்க. ம்ம்ம்… காலம் மாறிப்போச்சு. இப்பல்லாம் வாய்க்கு ருசியா இருக்கானு மட்டும்தானே பார்க்கறாங்க’ என பெருமூச்சுவிட்ட அக்கா, ஆச்சர்யக்குறியாகவே நிற்கிறார் என் மனதில்!
நவீனம் என்கிற பெயரில், நம்மில் பலரும் சத்தில்லாத உணவுகளைத்தான் விருப்ப உணவாக வைத்திருக்கிறோம். ஆனால், மாதவிடாய் வலிகளைப் பொறுத்துக்கொள்ள முடியாதவர்களாவும், பிரசவவலி பொறுக்காதவர்களாகவும், குறைந்த வயதிலேயே இடுப்பு மற்றும் மூட்டு வலிகளால் அவதியுறுபவர்களாகவும் நம் பெண்கள் அதிகரித்து வருவது, உணவின் பெருங்குறைபாடு என்று இப்போது ஆங்கில மருத்துவர்களும் ஏற்றுக்கொண்டுவிட்டார்கள் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது!”

திருகைக்கள்


நம் கலாச்சாரத்தோடு இணைந்த ஒரு சாதனம் திருகைக்கள். குமரிமாவட்டத்தில் இதன் பெயர் திரிகள். காலமாற்றத்தால் தொலைந்துபோனது திருகைக்கள் மட்டும் அல்ல நம் ஆரோக்கியமும் தான்……..இதை மீட்டெடுக்க ஒவ்வொரு திருமண வீட்டிலும் இதை சீதனமாக கொடுக்க வேண்டும்………செய்வோமா தமிழா
10268480_827655560616782_3757938921089734099_n
நம்ம தலைமுறை தொலைத்த தமிழன் கண்டுபிடிப்பான திருகையின்அனுபவம் உண்டா உங்களுக்கு.!
திருகை என்பது பயறு, உழுந்து போன்ற தானியங்களை உடைத்துப் பருப்பு ஆக்குவதற்காக உள்ள சாதனமாகும். இது பொதுவாகக் கருங்கல்லினால் செய்யப்படுகின்றது. திருகையில் இரண்டு பகுதிகள் உண்டு.
ஒன்று நிலையாக இருக்கும் கீழ்ப்பகுதி. இது கிடைத் தளத்தில் வட்ட வடிவம் கொண்டது. திருகையின் அளவுக்குத் தக்கபடி உயரம் உள்ளதாயிருக்கும். ஒரு குட்டையான உருளை வடிவம் எனலாம்.
கிராமபுறங்களில் பல பேர் வீட்டில் மதிய நிசப்தத்தை கெடுக்கும் இந்த அரைவைக்கல்லில் நடுவில், வெயிலில் காய வைத்த அரிசியை போட்டு சுத்தினால் கர கர கர சத்தத்தை ஏற்ப்படுத்தி மாவை கொடுக்கும்.
சமாச்சாரம் இது…இதை அரைக்கின்றார்கள் என்றால் வீட்டுக்கு வெளியே கூட இதன் சத்தம் கேட்கும்… ஆனால் இன்று பல வீடுகளில் சீரியல் சத்தம் மட்டுமே கேட்கின்றது.. இந்த சத்தம் கேட்டு வெகுநாள் ஆகி விட்டது…
இதன் மேற்பகுதியின் மையத்தில் நிலைக்குத்தாகப் பொருத்தப்பட்ட ஒரு தண்டு காணப்படும். இத்தண்டு பெரும்பாலும் இரும்பினால் செய்யப் பட்டிருக்கும்.
மற்றப் பகுதியான மேற்பகுதியும் வட்டவடிவமாகக் கீழ்ப்பகுதி போலவே இருந்தாலும், இதன் நடுப்பகுதியில் ஒரு துளை அமைந்திருக்கும் இது துளையின் அளவு, திருகையின் கீழ்ப் பாகத்தில் பொருத்திய தண்டின் விட்டத்திலும் சற்றுப் பெரிதாக இருக்கும்.
இத் துளையினூடாகக் கீழ்ப் பாகத்தின் தண்டைச் செலுத்தி இரண்டு பாகங்களையும் ஒன்றன்மீது ஒன்று வைக்கக்கூடியதாக இருக்கும். கீழ்ப் பகுதியின் தண்டைச் சுழலிடமாகக் கொண்டு மேற்பகுதியைச் சுற்றுவதற்கு வசதியாக மேற்பாகத்தின் விளிம்புக்கு அருகில் இன்னொரு தண்டு பொருத்தப்பட்டிருக்கும்.
சுற்றுவதற்கான கைபிடியாக இது பயன்படும். திருகையின் மேற்பாகத்தில் அமைந்த முன் குறிப்பிட்ட துளை மேல் அகன்றும் கீழே ஒடுங்கியும் புனல் வடிவில் அமைந்திருக்கும். திருகையின் கீழ்ப்பகுதியும் மேற்பகுதியும் ஒன்றன் மீது ஒன்று அடுக்கிய நிலையில், மேற்பகுதியின் துளைக்குள் உடைக்க வேண்டிய தானியத்தைப் போட்டுக் கைப்பிடியினால் மேற்பகுதியைச் சுழற்றுவார்கள்.
தானியம் சிறிது சிறிதாக இரண்டு கற்களுக்கும் இடையே சென்று உடைக்கப்பட்டு வெளி விளிம்பினூடாக வெளியேறும். இவ்வாறு வெளியேறும் உடைந்த தானியம் (பருப்பு) சேகரிக்கப்படும்.

எண்ணெய் தேய்த்துக் குளிப்பதற்கு


என் நண்பர்கள் பல பேர் என்னிடம் முடி கொட்டுவதற்கு என்ன செய்வது என கேட்கின்றனர், இதற்கு ட்ரீட்மெண்ட் இருக்கா என்று கேட்கின்றனர். இதற்கு காரணம் எண்ணெய் குளியல் மறந்து போனதுதான்.
அவர்களின் வயது கேட்டால் 27அல்லது 28 ந்னு சொல்றாங்க, இந்த வயதிலேயே தலையில் பாதியை காணாமல் போய் இருக்கு, பாவமாகவும் இருக்கு.
நண்பர்களே தயவு செய்து எண்ணெய் தேய்ச்சு குளிங்க, தினமும் ஷாம்பூ போட்டு குளிச்சா கண்ணகள் பாடாயிடும், எண்ணெய் குளியல் இல்லாட்டி விந்தணுகளும் குறையும். ஆண்மைக்குறைவு ஏற்ப்படும், குழந்தையின்மை ஏற்ப்படும்.
நமது சருமம் மற்றும் கூந்தலுக்கு எண்ணெய் சத்தானது அவசியம். இரண்டிலும் இயல்பிலேயே மிதமான கொழுப்பும் எண்ணெய் சுரப்பும் இருக்கும். அந்த இரண்டும் நம் சருமம் மற்றும் கூந்தலுக்குக் கவசம் போன்றவை. இதைத் தக்க வைத்துக்கொள்ள வெளியிலிருந்து எண்ணெய் தடவுவது, மசாஜ் செய்து குளிப்பது போன்றவை அவசியம்
qqqq
.
ஒரு 15 வருடங்களுக்கு முன் எண்ணெய் தேய்த்துக் குளித்தல் என்பது நமது கிராமங்களில் சனிக்கிழமை அன்று எண்ணெய் குளியல் நிறைய வீடுகளில் நடக்கும்
இன்று அது அரிதாகி விட்டது. தீபாவளி அன்று தான் நம் வீட்டில் எண்ணெய் தேய்த்துக் குளியல் நடக்கும் ஆனால் அதன் முழுப்பயனும் அன்று ஒரு நாள் மட்டும் குளித்தால் நடக்குமா? நிச்சயம் நன்மை இருக்காது.
எப்படிக் குளிப்பது :
எண்ணெய் தேய்த்துக் குளிப்பதற்கு என்று நாட்கள் உள்ளன. ஆண்கள் புதன் மற்றும் சனிக்கிழமைகளிலும்,
பெண்கள் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளிலும் செய்ய வேண்டும்.
எண்ணெய்க் குளியலுக்கு ஏற்ற எண்ணெய் நல்லெண்ணெய் தான். அல்லது தேங்காய் எண்ணெய் மற்றும் விளக்கெண்ணெய். ( ப்ராண்ட் எண்ணெய்கள் நல்லது இல்லை, அதில் மெழுகு சேர்ந்திருக்கும் ஜாக்கிரதை)
அது கொஞ்சம் சூடு படுத்தி முதலில் உச்சந்தலையில் சூடு பறக்க தேய்க்க வேண்டும். பின் உடலின் ஒவ்வொரு பாகங்களிலும் மெதுவாக தேய்க்க வேண்டும், (உடம்பில் தேய்க்காட்டிலும் பரவயில்லை தலையில் மட்டுமாவது தேய்ங்க) பின் வெந்நீரில் சீகக்காய் அல்லது அரப்பு போட்டு எண்ணெய் போக குளிக்க வேண்டும்.
(அரப்பு சீகக்காய் காதி பவன் கடைகளில் அல்லது நாட்டு மருந்து கடைகளில் வாங்கி உப்யோகியுங்கள், சீகக்காய் பேஸ்ட் உபயோகம் செய்யாக்கூடாது அதில் வேதிப்பொருட்கள் உள்ளது அது ஆபத்து)
குழந்தைகளுக்கு:
ஒரு வயது‌க்கு‌ள் இரு‌க்கு‌ம் குழ‌ந்தைகளாக இரு‌ந்தா‌ல் அவ‌ர்களு‌க்கு சுத்தமான தேங்காய் எண்ணெயை வார‌த்‌தி‌ல் ஒரு நாளாவது உட‌ல் முழு‌க்க‌த் தட‌வி‌வி‌ட்டு வெதுவெது‌ப்பான ‌நீ‌ரி‌ல் கு‌ளி‌ப்பா‌ட்டு‌ங்க‌ள்.
ஒரு வயது‌க்கு மே‌லிரு‌க்கு‌ம் குழ‌ந்தைகளு‌க்கு ந‌ல்லெ‌ண்ணை வா‌ங்‌கி வ‌்ந்து, ச‌னி‌க் ‌கிழமைக‌ளி‌ல் உட‌ல் முழுவது‌ம் தே‌ய்‌த்து ‌சி‌றிது நேர‌ம் ஊற‌வி‌ட்டு ‌பி‌ன்ன‌ர் கு‌ளி‌க்க வை‌க்கலா‌ம்.
முத‌ல் இர‌ண்டு மூ‌ன்று வார‌ங்களு‌க்கு ந‌ல்லெ‌ண்ணை தே‌ய்‌த்தது‌ம் கு‌ளி‌க்க வை‌த்து ‌விடு‌ங்க‌ள். பு‌திது என்‌பதா‌ல் உடலு‌க்கு ஏற்று‌க் கொ‌ள்ள ‌சில நா‌‌‌ள் ‌பிடி‌க்கு‌ம். ந‌ல்லெ‌ண்ணைய புரு‌வ‌த்‌தி‌ல் தடவ ம‌ற‌க்க வே‌ண்டா‌ம்.
4வது வார‌த்‌தி‌ல் இரு‌ந்து 10 ‌நி‌மிட‌ம் முத‌ல் ஊற ‌வி‌ட்டு‌க்‌ கு‌ளி‌ப்பா‌ட்டு‌ங்க‌ள் கடினமான உழைப்பு, கால மாற்றம் ஆகியவை காரணமாக உடலில் உஷ்ணம் அதிகரிப்பது வழக்கம்.
எண்ணெய் தேய்த்துக் குளிப்பதால் தோலுக்கு என்ன பயன்?
நமது உடலில் சூடு அதிகரிப்பதால் பல பிரச்னைகள் ஏற்படுகின்றன. நமது நாடு வெப்பமான நாடு. எனவே வேனல் கட்டி, கொப்புளங்கள், வேர்க்குரு போன்றவை வெயில் காலத்தில் ஏற்படுவது இயல்பு.
வாரத்திற்கு இருமுறை எண்ணெய் தேய்த்துக் குளிப்பதன் மூலம் இப்படிப்பட்ட பிரச்னைகள் ஏற்படாமல் தடுக்க முடியும்.
உடலில் எண்ணெயை நன்றாக அழுத்தித் தேய்ப்பதன் மூலம் அது தோலில் உள்ள மேல் அடுக்குகளுக்குள் சென்று பல நல்ல விளைவுகளை ஏற்படுத்துகிறது.
வியர்வையின் காரணமாக தோலில் ஏற்பட்டுள்ள அழுக்குகளையும், நுட்பமான அடைப்புகளையும் எண்ணெய்க் குளியல் நீக்கிவிடுகிறது.
தோலின் கழிவான வியர்வை தடையில்லாமல் வெளியேறுகிறது. இதனால் உடலில் பல உள்ளுறுப்புகள் சிறப்பாகச் செயல்பட வழி ஏற்படுகிறது.
வேனல் கட்டி, கொப்புளங்கள், வேர்க்குரு போன்றவை ஏற்படாமல் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது தடுக்கிறது.
எண்ணெய் தேய்த்துக் குளிப்பதால் தோலில் பளபளப்புக் கூடுகிறது. வறண்ட தோல் உள்ளவர்கள் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது மிகவும் அவசியம்.
எண்ணெய் தேய்த்துக் குளிப்பதால் உடல் ரொம்பக் குளிர்ச்சியாகிவிடுமே, அதனால் பாதிப்பு ஏற்படாதா?
எண்ணெய் தேய்த்துக் குளிப்பதால் உடல் குளிர்ச்சியடைகிறது. அதனால் எந்தப் பாதிப்பும் இல்லை. உடலில் சூடு குறைவதால் மனம் ரிலாக்ஸ் ஆகிறது.
உடல் ரிலாக்ஸ் ஆகிறது. நல்ல இயற்கையான தூக்கம் வருகிறது. தூங்கி எழுந்ததும் உடல், மனம் புத்துணர்ச்சி அடைகிறது.
இயற்கையான அலுப்பு மருந்தாக எண்ணெய்க் குளியல் இருக்கிறது.
வெப்பத்தாலோ, தூக்கமில்லாததாலோ கண்களில் ஏற்படும் எரிச்சல் எண்ணெய் தேய்த்துக் குளிப்பதன் மூலம் இல்லாமற் போகிறது. கண்கள் பொங்குவது நின்றுவிடுகிறது. தலையும், கண்களும் குளிர்ச்சியடைகின்றன.
நன்மைகள் :
முடி கொட்டாது, நன்கு வளரும்
இளநரை வராது
உடல் சூட்டைத் தணிக்கும்.
உடல் புத்துணர்ச்சி பெறும்.
உடலில் உள்ள நரம்புகள் செயல்பாடு அதிகரிக்கும்.
திருமணம் ஆன தம்பதிகளுக்கு இல்லற இன்பம் அதிகரிக்கும்
(இதற்காகத்தான் திருமணம் ஆன இரண்டு நாட்கள் கழித்து எண்ணெய் தேய்த்து விருந்து வைக்கின்றனர்)
சளி தலைவலி தொல்லையில் இருந்து விடுபடலாம்.
ஆரோக்கியமான தூக்கத்திற்கு வழி வகுக்கும்.
நோயற்ற வாழ்விற்கும் உடல் ஆரோக்கியத்திற்கும் எண்ணெய் குளியல் அவசியம்

http://www.pannaiyar.com/category/%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/2/

இந்த Pi என்பது இங்கு எப்படி வந்தது?


வட்டத்தின் சுற்றளவு = 2*Pi*R (or) Pi*D. எனக்கூறி Pi என்பதை 22/7 அல்லது 3.142 எனவும், D – விட்டம். R – ஆரம் எனவும் விளக்கமளித்து சந்தேகமிருந்தால் கேளுங்கள் என்றார்.
சக மாணவர் சிலர் அவர்களது சந்தேகத்தை கேட்டு விளக்கம் பெற்றனர். (விளக்கம் பெற்றதாக நம்பவைக்கப்பட்டனர்.)
நான் கேட்ட கேள்வியும் ஆசிரியரின் பதில்களும். உரையாடலாக கீழே…
நான்: இந்த Pi என்பது இங்கு எப்படி வந்தது? அதன் விளக்கம் என்ன? ஐயா.
ஆசிரியர் : அது தான் வட்டத்தின் சுற்றளவு சூத்திரம் என்று கூறினேனே?
நான்: சதுரம் மற்றும் செவ்வகம் சுற்றளவு சூத்திரங்களில் இந்த Pi வரவில்லையே.
ஆசிரியர்: இப்போது நான் வட்டத்தின் சுற்றளவு பற்றிதானே பாடம் நடத்துகிறேன் நீ எதற்காக சதுரம் செவ்வகத்தை பற்றி இங்கே கேட்கின்றாய்.
நான்: ஐயா எனது சந்தேகம் சதுரத்தின் சுற்றளவிற்கு 4A எனவும், A என்பது பக்கத்தின் நீளம் என்று கூறினீர்கள். செவ்வக சுற்றளவிற்கு 2LB எனவும், L = நீளம் எனவும், B = அகலம் எனவும் கூறினீர்கள்.அது போல Pi என்பது என்ன சற்று தெளிவாக கூறுங்களேன்.
ஆசிரியர்: அதுவா, Pi is a constant value.
இருப்பினும் நான் கேட்ட 22/7 என்பது எப்படி வந்தது என அவரால் விளக்கமளிக்க முடியவில்லை. எனக்கும் விளங்கவில்லை. இதனால் ஏற்பட்ட வாக்கு வாதத்தினால் இரு தினங்கள் வகுப்பிலிருந்து விலக்கி வைக்கப்பட்டு, இது போன்ற கேள்விகளை இனி கேட்க மாட்டேன் என்ற உத்தர வாதம் தந்து உள்சென்றேன்.
இச்சம்பவத்தை மறந்து சிலநாள் கடந்த பின்பு எதேட்சயாக இதன் விளக்கம் கிடைத்தது.
எனது தாத்தா எங்கள் ஊரின் மிகச்சிறந்த தச்சர் எனும் பெயர் பெற்றவர். எங்கள் ஊர் கோயிலின் தேர் சக்கரங்கள் பழுதுபட்ட காரணத்தினால் அச்சகரங்களை மாற்றும் பணி எனது தாத்தாவிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.
அவருக்கு எழுத படிக்க தெரியாத காரணத்தினால் தேவையான சாமான்களை பட்டியலிடும் பணிஎன்னிடம் வழங்கப்பட்டது.(உண்மையில் தினிக்கப்பட்டது). தாத்தா ஒவ்வொன்றாக கூற நான் எழுத வேண்டும்.
அப்படி அவர் கூறி வரும் போது வந்த ஒரு வாக்கியம் என்னை நெருடியது. அவ்வாக்கியம்,
ஐந்தடி உயர சக்கரத்திற்கு 15அடி 9 அங்குல நீள இரும்பு பட்டை, (இரும்பு பட்டை என்பது மரக்கட்டை தேயாமல் இருக்க சக்கரத்தில் ஒட்டப்படும் இரும்பு ). 7 அடி உயர சக்கரத்திற்கு 22 அடி நீள இரும்பு பட்டை.
இதில் வந்த 7 அடிக்கு 22 அடி என்பது எங்கோ கேட்டதாக நினைவுக்கு வர, என் தாத்தாவிடம் எப்படி 7 அடி உயர சக்கரத்திற்கு 22 அடி என கணக்கிட்டீர்கள் என்று வினவினேன்.
பழைய சக்கரங்கள் இருந்த இடத்திற்கு அழைத்து சென்று ஏழடி உயர சக்கரத்தின் ஒரு இடத்தில் குறியிட்டு அக்குறிக்கு நேராக மண்ணிலும் குறித்துக்கொண்டு, சக்கரத்தை ஒரு முழு சுற்று வரும் வரை தள்ளிக்கொண்டு வந்து மீண்டும் சக்கரத்தில் குறியிட்ட பகுதி மண்ணை தொட்ட இடத்தில் குறியிட்டார். மண்ணில் முதலில் குறியிட்ட இடத்திற்கும் இரண்டாம் இடத்திற்குமான தொலைவை அளந்தால் சரியாக 22 அடி வந்தது.
அதாவது சக்கரத்தின் விட்டம் 7 அடியாக இருந்தால் அதன் சுற்றளவு 22 அடி. சக்கரத்தின் விட்டம் 1 அடியாக இருந்தால் அதன் சுற்றளவு 3 அடி 1.7 அங்குலம் (3.142) என விளக்கினார்.
இந்த விளக்கம் என் தாத்தாவுக்கு எப்படி தெரிந்தது? அவருடைய அப்பா சொல்லிக்கொடுத்தார். 
http://www.pannaiyar.com/category/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81/

விரதமே மகத்தான மருத்துவம்!-நம்மாழ்வார்



விரதமே மகத்தான மருத்துவம்!
இயற்கை மீதான பேரன்பும் உடல் மீதான அக்கறையும் எந்த வயதிலும் ஒருவரை இளமை குறையாமல் வைத்திருக்கும் என்பதற்குச் சாலச் சிறந்த உதாரணம் நம்மாழ்வார். சிறிய எழுத்துக்களையும் கண்ணாடி இல்லாமல் துல்லியமாகப் படிப்பது, சோர்வே இல்லாமல் பல கிலோ மீட்டர் தூரம் நடப்பது, தோட்ட வேலை, எழுத்துப் பணி, மேடைப் பேச்சு என ஒரு நாளைக்கு 16 மணி நேரம் பம்பரமாகச் சுழல்கிறது நம்மாழ்வாருக்கு. ”75 வயதிலும் எப்படி இப்படி ஒரு சுறுசுறுப்பு?” எனக் கேட்டால், சிறு குழந்தையாகச் சிரிக்கிறார் நம்மாழ்வார்.
”எத்தனையோ வருஷங்களுக்கு முன்னாலேயே, ‘உணவே மருந்து; மருந்தே உணவு’ன்னு திருமூலர் சொல்லிட்டுப் போயிட்டார். இந்த அற்புதமான வாக்கை ஆராதிக்கத் தவறியவர்கள்தான் எண் சாண் உடம்பில் எண்ண முடியாத வியாதிகளோடு அலையறாங்க. வாழ்க்கையில் இரண்டு வகை இருக்கிறது. ஒன்று நோயே வராமல் வாழ்வது. இரண்டாவது, நோய் வந்த பின் வருந்தியபடியே வாழ்வது. முதல் வகையில் இணைந்துவிட்டால், நமக்கு இன்னல்கள் இருக்காது.
‘மருந்து என வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்’ என்ற குறளிலேயே நோய் அண்டாமல் வாழ்வதற்கான வழி சொல்லப்பட்டு இருக்கிறது. உண்ட உணவு சீரணமாகிவிட்டதை அறிந்து, அதன் பிறகு உண்டால் அந்த உடம்புக்கு மருந்து என்ற ஒன்றே தேவை இல்லை எனச் சொல்லி இருக்கிறார் வள்ளுவர்.
எதை, எப்போது, எப்படி உண்ண வேண்டும் என்பதே நம்மில் பலருக்கும் தெரிவதில்லை. நாம் உண்ணும்போது முதலில் உணவை விழுங்குறோம். ஆனால், அப்படி விழுங்கக்கூடாது. பற்களால் நன்றாக அரைத்து, கூழாக்கி உமிழ்நீரோடு சேர்த்து உள்ளே தள்ளவேண்டும். இதைத்தான், ‘நொறுங்கத் தின்றால் நோய் தீரும்!’ எனப் பழமொழியாகச் சொன்னார்கள். அளவு கடந்து உணவு உண்பவர்கள் நோய்களை எதிர்கொள்ளவேண்டி இருக்கும். நாம் உண்ணும் உணவுக் கழிவுகள் உடம்பில் உள்ள ஒவ்வொரு செல்லிலும் கொஞ்சம் கொஞ்சமாகத் தேங்குகிறது. இதன் அளவு அதிகரிக்கும்போது நோய் உண்டாகிறது. சரி, அதை எப்படிக் களைவது? இதற்கான சுலபமான வழி, உண்ணாநோன்பு. இதைத்தான் ‘விரதம்’ என்ற பெயரில் கடைபிடித்தார்கள் நமது முன்னோர்கள். ‘நோயிலே படுப்பதென்ன கண்ண பரமாத்மா, நோன்பிலே உயிர்ப்பதென்ன கண்ண பரமாத்மா’ எனப் பாடினார்களே… அந்த நோன்புதான் உண்ணாநோன்பு. இறக்கும் தருவாயில் இருப்பவனைக்கூட உயிர்த்தெழுச் செய்யும் சக்தி உண்ணா நோன்புக்கு இருக்கிறது. இதைத்தான் ஆங்கிலத்தில் ‘தெரப்பூட்டிக் பாஸ்ட்டிங்’ (Theraupeutic fasting) என்று சொல்கிறார்கள். இன்றைக்கு சர்வதேச அளவில் இந்தச் சிகிச்சை பிரபலமாகி வருகிறது. உண்ணாநோன்பு இருக்கும்போது நம் உடலுக்குள் இருக்கும் தேவையில்லாத கழிவுகள் தன்னாலே வெளியேறி விடுகின்றன. உடல் தன்னைத்தானே குணப்படுத்திக்கொள்ள நாம் அனுமதிக்க வேண்டும்.
அடுத்ததாக, எதைச் சாப்பிட வேண்டும் என்பது மிகவும் முக்கியம். நம் உணவில் காய்கறிகள், கீரைகள், பழங்கள் ஆகியவற்றை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். ‘வெந்ததைக் குறைத்தால் வேதனையை குறைக்கலாம்’ என்பார்கள். அதாவது வேகவைத்த உணவைக் குறைத்துக்கொண்டு பச்சைக் காய்கறிகள், பழங்களை உண்ண வேண்டும். நான் 35 வயதில் கண்ணாடி அணிந்தேன். 60 வயதில் அதை அகற்றிவிட்டேன். இப்போது கண்ணாடியைப் பயன்படுத்துவதே இல்லை. பொடி எழுத்துக்களைக்கூட என்னால் துல்லியமாக வாசிக்க முடியும். இதற்குக் காரணம் எனது உணவுப் பழக்கங்கள்தான்!” – விழி விரியவைக்கும் அளவுக்கு ஆச்சரியமாகப் பேசுகிறார் நம்மாழ்வார். அடுத்து, மூலிகைகளை நோக்கி நீள்கிறது பேச்சு.
”இயற்கை நமக்குக் கொடுத்த அருட்கொடை மூலிகைகள். நாம் பயிர் செய்யாமலேயே நமக்கான உணவாக சில மூலிகைகளை இயற்கை உற்பத்தி செய்கிறது. உதாரணமாக, பிரண்டை. இதைத் துவையல் செய்து சாதத்தில் குழம்புக்குப் பதிலாக பிசைந்து உண்ணலாம். தூதுவளை, மொசுமொசுக்கை இலைகளைச் சேர்த்து ரசம் வைத்து உண்டால் நாள்பட்ட சளி தீரும். வாய்ப்புண்ணை ஆற்ற மணத்தக்காளி, வெட்டுப் புண்களை ஆற்ற வெட்டுக்காயப் பச்சிலை, அனைத்துக் கும் சிறந்த ஆவாரை, துளசி என மூலிகைகளின் அதிசய ஆற்றல் கொஞ்சநஞ்சம் அல்ல. நம்மைச் சுற்றி வளர்ந்துகிடக்கும் எண்ணில்லா மூலிகைகளை நாம் சரியாகப் பயன்படுத்தினாலே பாதி நோய்கள் காணாமல் போய்விடும்!” எனச் சொல்லும் நம்மாழ்வார், உடலின் மகத்துவத்தையும், யோகாவின் சிறப்பையும் சொல்லத் தொடங்கினார்.
”இயற்கை ஒருபோதும் தவறு செய்வதில்லை. உடல் ஒருபோதும் தன் கடமையை நிறுத்துவதில்லை. பசி வந்தால் உணவு, தாகம் எடுத்தால் தண்ணீர், சோர்வு வந்தால் உறக்கம் என உடல் சரியான சமிக்ஞைகளை நமக்கு கொடுத்தவண்ணம் இருக்கிறது. அதன்படி உணவு, உறக்கத்தை நாம் கடைப்பிடித்தாலே உடலுக்கு எந்தவிதமான சிக்கலும் வராது. பலர் உடம்பு வலிக்காக மாத்திரை, மருந்துகளை உட்கொள்கிறார்கள். வலி என்பது உடம்பு தன் உள்ளே இருக்கும் நச்சுப் பொருட்களை வெளியேற்றும் முயற்சி. அதைத் தடுக்கக்கூடாது.
50 வயது வரை உடம்புதான் உன்னதம் என நினைக்கும் மனது, அதற்குப் பிறகு ஆன்மாவை ஆராதிக்கிறது. ஆன்மா இந்த உடம்புக்குள்ளேதானே இருக்கிறது! அதனால், உடலைப் பராமரிப்பதும் அவசியம். இது இரண்டையும் ஒரே நேரத்தில் பராமரிக்க உதவுவதுதான் யோகா. நான் நீண்ட காலமாக யோகா செய்து வந்தாலும், ‘ஈஷா’ பயிற்சியில்தான் அதை முறைப்படுத்தினேன். தினமும் காலையில் நடைப்பயிற்சி, மூச்சுப் பயிற்சி, யோகா செய்கிறேன்.
ஈஷா யோகா பயிற்சியின்போது நடந்த நேர்காணலில், ‘யோகா செய்வதன் மூலம் நோய்கள் குணமாகும் என்றால், எதற்காக இத்தனை மருத்துவர்களும், மருத்துவமனைகளும் இருக்கின்றன?’ என சத்குருவிடம் கேட்டேன். ‘நாட்டில் தினமும் ஆயிரக் கணக்கில் விபத்துகள் நடக்கின்றன. விபத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு யோகா சொல்லிக் கொடுக்க முடியாது அல்லவா? அவர்களுக்குத் தேவை, அவசர சிகிச்சை. அதற்காகத் தான் மருத்துவர்களும், மருத்துவமனைகளும்!’ என்று அவர் அமைதியாகச் சொன்னார்.
அவர் சொன்னது உண்மைதான். ஆங்கில மருத்துவத்தை அவசரத்தேவைக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். மாத்திரை, மருந்துகளைத் தொடர்ச்சியாக உட்கொள்ளும்போது, அதுவே உடம்பில் பல உபத்திரவங்களை உண்டாக்குகிறது.
மொத்தத்தில், சரியான பழக்க வழக்கங்களும், உடலைப் பேணும் உணவு முறையும், ஆரோக்கியமான சுற்றுச்சூழலும் இருந்தாலே நோய்க்கு ‘நோ என்ட்ரி’ போட்டுவிடலாம்!” எனச் சொல்லும் நம்மாழ்வார் இறுதியாக இப்படிச் சொல்கிறார் வாழ்வியல் மந்திரத்தை.
”கணியன் பூங்குன்றனார் சொன்ன ‘தீதும், நன்றும் பிறர் தர வாரா’ என்கிற வரி நம் உடலுக்கும் உள்ளத்துக்கும் ஒருசேர வழிகாட்டக்கூடியது. அந்த வரிகளை மனதில் ஏற்று இயற்கையை வணங்கி, உடலை ஆராதிக்கக் கற்றுக் கொண்டால் வாழ்வின் சிறப்புக்குக் குறைவே இருக்காது!”.

http://www.pannaiyar.com/category/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/page/2/