Saturday, 15 June 2013

saw in someones blog

ஒரு மனிதன் கருவில் உருவான நாள் முதல் இறக்கும் நாள் வரை உள்ள காலத்தை வாழ்க்கை அல்லது வாழ் நாள் என்று கணக்கிடுகிறார்கள். இந்த கால கட்டம் ஒவ்வொருவருக்கும் ஒரு மணித்துளியாகவும் இருக்கலாம் அல்லது ஒரு நூற்றாண்டாகவும் இருக்கலாம். அதன் அளவு ஒருவருக்கும் தெரியாது; அனுமானிக்கவும் முடியாது. வாழ்க்கையின் கால வரம்பு நிலையற்றதாக இருக்கிறது. ஒரு மனிதன் எப்போது வேண்டுமானாலும் இறக்கலாம். ஆகவே வாழ்க்கை நிலையற்றது என்று பெரியோர்கள் கூறுகிறார்கள். நிலையாமை என்பது வேறு; இல்லாமை என்பது வேறு, ஒரு மணித்துளி வாழ்ந்தவனுக்கும் வாழ்க்கை இருந்தது. நூறாண்டுகள் வாழ்ந்தவனுக்கும் வாழ்க்கை இருந்தது, ஆனால், இருவருக்குமே முடிவு எப்போது வரும் என்று தெரியாமலே இருந்தது; அதாவது நிலையாமை இருந்தது.ஆகவே, வாழ்க்கையில் நிலையாமை இருந்தாலும், ஒருவனுக்கு அளிக்கப்பட்ட வாழ்க்கையை அவன் வாழ்ந்தே ஆகவேண்டும். தற்கொலை செய்துகொள்ள முடியாது,25 வருட வாழ்க்கையை அவன் பிரம்மச்சாரியாகக் கழிக்க வேண்டும். மீதமிருந்தால், அடுத்த 25 வருட வாழ்க்கையை அவன் கிருஹஸ்தனாகக் கழிக்க வேண்டும். மேலும் மீதமிருந்தால் அடுத்த 10 வருட வாழ்க்கையை வானப்பிரஸ்தனாகக் கழிக்க வேண்டும். எஞ்சியிருந்தால் மீதமுள்ள வாழ்க்கையை சந்நியாசியாகக் கழிக்க வேண்டும்.இப்படி வாழும் நான்கு நிலைகளில் கிருஹஸ்த வாழ்க்கையே சிறந்தது. ஏனெனில், பிரம்மச்சாரிக்கும், வாணப்பிரஸ்தனுக்கும், சந்நியாசிக்கும் சோறு போட கிருஹஸ்தனால் மட்டுமே முடியும். கிருஹஸ்தன்( இல் வாழ்வான் ) இல்லாவிட்டால், மற்ற மூவரும் இல்லை. இதனையே, வள்ளுவர்,


”இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்நல்லாற்றின் நின்ற துணை.”-----என்றார்.

No comments:

Post a Comment