கணிதத்தின் ஆரம் கணக்கதிகாரம் :
“காரிநாயனார்” என்னும் புலவர் இயற்றியதே கணக்கதிகாரம். இந்நூல் கணிதச் செய்திகளை அறிவியல் முறையில் தருகிறது. கணக்கதிகாரத்தில் 60 வெண்பாக்களும் 45 புதிர் கணக்குகளும் உள்ளன.பூமி சூரியனை சுற்றும் காலம் , நிலவு சூரியனை சுற்றும் காலம் , நிலவு பூமியை சுற்றும் காலம் போன்றவற்றையெல்லாம் கச்சிதமாக கூறுகிறது கணக்கதிகாரம். எடுத்துக்கட்டாக பலாப்பழத்தைப் பிளக்காமல் அதன் உள்ளிருக்கும் சுளையின் எண்ணிக்கையை அறிந்துகொள்ளும் வழிமுறை மற்றும் ஓர் பூசணிக்காயை உடைக்காமலே அதில் எத்தனை விதை இருக்கிறது போன்ற செய்திகள் கச்சிதமாக கூறுகிறது கணக்கதிகாரம்.மேலும் விளக்கமாக இங்கு காண்போம்.
"பலாவின் சுளையறிய வேண்டுதிலேல் ஆல்கு
சிறுமுள்ளுக் காம்பரு எண்ணி - வருவதை
ஆறிற் பெருக்கியே ஐந்தனுக் கீந்திடவே
வேறெண்ண வேண்டாஞ் சுளை." - கணக்கதிகாரம்
விளக்கம் :
பலாப்பழத்தின் காம்புக்கு அருகில் உள்ள சிறு முட்களை எண்ணி ஆறாலே பெருக்கி ஐந்தால் வகுக்க பலாப்பழத்தினுள் உள்ள சுளைகளின் எண்ணிக்கையை அறியலாம்.
"கீற்றெண்ணி முத்தித்துத் கீழாறினால் மாறி
வேற்றையஞ்சு தன்னில் மிகப்பெருக்கிப் பார்த்ததிலே
பாதி தள்ளி மூன்றிற் பகிர விதையாகும்
பூசணிக்காய் தோறும் புகல்" - கணக்கதிகாரம்
விளக்கம் :
ஒரு பூசணிக்காயின் கீற்றுகளை எண்ணிக்கொண்டு அதை மூன்று, ஆறு, ஐந்து இவற்றால் பெருக்கி வரும் விடையை பாதியாக்கி மீண்டும் மூன்றால் பெருக்கினால் வருவது விதைகளின் எண்ணிக்கையாகும்.
ஒரு பூசணியில் உள்ள கீற்றுகளின் எண்ணிக்கையை "அ" என்க.
பாடலின் படி அதை 3,6,5 ஆகியவற்றால் பெருக்க கிடைப்பது "90அ" ஆகும் அதை பாதியாக்கினால் கிடைப்பது "45அ" ஆகும். அதை மீண்டும் மூன்றால் பெருக்க கிடைப்பது "135அ" ஆகும்.
ஒரு பூசணியில் உள்ள கீற்றுகளின் எண்ணிகையை அ=6 ஆறு எனக்கொண்டால் (135 * 6 = 810) 135 ஐ ஆறால் பெருக்க கிடைப்பது 810 ஆகும். எனவே பூசணியில் உள்ள விதைகளின் எண்ணிக்கை 810 ஆகும்.

No comments:
Post a Comment