Showing posts with label சித்த வைத்தியம். Show all posts
Showing posts with label சித்த வைத்தியம். Show all posts

Tuesday, 22 December 2015

மாங்கொட்டை






மாங்கனியின் வித்து மருத்துப் பண்புள்ளது அதன் மருத்துவப் பாவம் பற்றி தேரையார் பின்வருமாறு வெண்பா பாடியருளியுள்ளார்.

“பேசுமோ சீதப் பெருக்கும் மூலக்கடுப்பும்
கோரிக் கடுப்பும் வீசுமோ மூலமுறுவின்
சொதிப்பு மாசுவுடைய பூங் கொட்டையை
காணில்வாது” 


1. “பேசுமோ சீதப் பெருக்கும்” : இது பெண்களுக்கு ஏற்படும் மாதாந்த உதிரப் போக்கு அதிகரித்து அதிதரித்து வெளியேறு வதால் உடல் பலமினந்து போவதை தடுக்க வல்லது மாங் கொட்டை.

2. “மூலக்கடுப்பும் கோரிக் கடுப்பும் வீசுமோ மூலமுறுவின் சொதிப்பு” :  தற்காலத்தில் வேலைப் பழுக்களின் மத்தியில் தொடச்சியாக ஓர் இடத்தில் உட்காந்திருந்து வேலை செய்வதனால் மூலம் தொடர்சியான வெப்பமேற்றலுக்கு உட்பட்டு ஆசனவாயிலில் கொதிப்பும் வெப்பமும் கானப்படும். இதனால் இரத்தக்கசிவு எப்போதும் இருக்கும். இதனால் உண்டாகும் மூலக்கடுப்பு, சோரிக்கடுப்பு, மூலக்கொதிப்பு போன்ற மூலநோய்களுக்கு அருமருந்து மாங்கொட்டை. பொதுவாக தற்கால இருக்கைகள் எல்லாம் “ரெற்சின்” போடப்பட்ட கற்றிறேட்டம் இல்லாத இருக்கைகளே பயன்படுத்தப்படுகின்றது. அக்காலத்தில் பிரப்பம் பிரம்பால் பின்னப்பட்ட பின்னல் கதிரை இருக்கைகளே பயன்படுத்தப்பட்டது. இக்கதிரைகள் காற்றோட்டம் உள்ளதாக சுவாத்தியமான இருக்கைகளாக இருந்தது. தற்போது பின்னுவதற்கான பிரம்பு கூட“பிளாஸ்டிக்” பிரம்பாகி விட்டது. அதுவே இவை மூலநோய்க்கு காரணமாகி விட்டது. இன் நோய்க்கு அருமருந்து மாங்கொட்டை ஆகும்.

3. “மாசுவுடைய பூங் கொட்டையை காணில்வாது” : மா பூக்கின்ற போது அதன் தேனை அருந்த வரும் பூச்சிகள் பூவினுள் சில தங்கி விடும் இவை பின்னர் பெருத்து புழுவாக மாறி பூக்கொட்டையை அரிது வெளிவரும். அப்போது கொட்டை அரிக்கப்பட்டு பழுதடைந்து விடும். அவ் வகையான கொட்டைகளை நீக்கிப் பயன்படுத்து வேண்டும். எனக் குறிப்பிட்டுள்ளர் வெண்பாவில்

பயன்பாடுத்தும் முறைகள்:
1.  புளிக் கொழம்பு : நன்றாக சுத்தம் செய்யப்பட்ட மாங்கொட்டையை பிளந்து கடினமான தோலை நீக்கி அதினுள் உள்ள பருப்பை எடுத்து சிறிது சிறிதாக நறுக்கி அதை புளிக் கொழப்பு செய்து சாப்பிடலாம்.
          இன்னுமோர் முறையில் அதனுடன் தோல் நீக்கி ஏழுமுறை நன்றாகச் சுத்தம் செய்த சோற்றுக் கற்றாலை என்னும் குமரியின் சோற்றையும் சிறிது சிறிதாக நறுக்கிய மாங் கொட்டை பருப்புடன் சேர்த்து புளிக் கொழம்பு செய்து சாப்பிடலாம்.

2. சூரணம் : மாங்கொட்டையை பிளந்தெடுத்த பருப்பை வெயிலில் உலர்த்தி பொடி செய்து அதை சூரணமாக வைத்துக் கொண்டு காலை மாலை உணவருந்த அரைமணித்தியாலத்துக்கு முன் அரைத்தேக்கரண்டி அளவு தேனில் குளைத்து அல்லது சூரணத்தை மட்டும் தன்னீரில் அருந்தலாம். இவ்வாறு உட்கொள்ள கற்பப்பைணில் உருவாகும் உத்ரப்போக்கான  “மெனோஐPறியா”  குணமாகும்.  அத்துடன் ஆசனவாயில் உதிரப்போக்கும் குணமாகும்.



சோற்றுக்கற்றாழை | ஆலோவேரா | குமரி


பெயா: “ஆலோவேரா” (AloebarbadensisLinn,Liliaceae,Aloevera,Aloeferox,Aloeafricana,Aloe, spicata, Aloe perji.)

            கற்றாலை மருத்துவக்குணம் நிறைந்தது சித்தவைத்தியத்தில் இதனை “குமரி” என அழைக்கப்படுகின்றது. இம் முகிலி இருபக்பகமும் சாதுவான முள்போன்ற நீண்ட மேல் நோக்கிய தாள் போன்ற அமைப்பைக் கொண்ட இலைகளை உடையது. இதனை “சுகத்துக்குத் தாழை” என்று கூறுவர் இது  காலப் போக்கில் மருவடைந்து “சோற்றுக்கற்றாழை” ஆகிவிட்டது. 

          தாவரங்கள் பொதுவாக நிலத்திலிருந்து அகற்றியதும் வாடி வதங்கி காலதாமதமானால் இறந்து விடும் ஆனால் சோற்றுக்கற்றாழை நிலத்திலிருந்து அகற்றியதும் இறந்து விடாது வளியில் இருக்கும் ஈரப்பதத்தை ஈத்து வளர்வதுடன் உலர்ந்த தாளிகளின் நீரையும் ஈத்து வளரும் தன்மையுடையது. பொதுவாக கிராமபுறங்களில் வீட்டின் கூரையின் தாள்வாரத்தில் தாள் ஒன்றினை கட்டி விடுவர்கள் அத்தாழை மேல்நோக்கி திரும்பி புதிய குருத்துக்கள் உருவாகி வளர்வதை அவதானிக்கூடியதாகவிருக்கும். இத்தாவரம் ஒவ்வொரு வருடமும் பூக்கொத்தை உருவக்கும். இதன் காரணத்தினாலே இத்தாவரத்தை “வான்குமரி” என அழைப்பதும்முண்;டு.

       கற்றாழையின் தாவரவியல் பெயர் “ஆலோவேரா” அல்லது “ஆலோ” என்றும் குறிப்பிடுவர். இதில் இன்னுமேர் வகையும் உண்டு. அது “ஆலோவாவிடன்ஸ்” இவை இரண்டினதும் மருத்துவத் தன்மையும் ஒன்றுதான். இவ் முகிலிகையை நவீன அறிவியல் உலகம் காயகற்ப அதிசய முகிலிகையாக குறிப்பிடுகின்றனர். இதில் இருபதிற்கு மேற்பட்ட அமிலோஅமிலங்கள் உண்டென்று குறிப்பிடுகின்றனர். உடலின் கட்டுமாணப் பணிக்கான புரதச் சத்தின் அடிப்படை அலகுகளை அமிலோ அமிலங்கள் என்று அழைப்பர். இதில் மனித ஆரோக்கியத்துக்குத் தேவையான மிக முக்கிய எட்டு வகை அமிலோஅமிலம் இதில் உண்டு. இந்து இல்லாவிட்டால் உடல் ஆரோக்கியம் குன்றி விடும் எனக்குறிப்பிடுகின்றனர். இதனால் இத் தாவரத்தை முழு மருத்துவக்குணமுள்ள தாவரமாக கருதுகின்றனர். 

          கற்றாழை தொர்பாக பார்;க்கும் போது ஒன்று ஆரோக்கியத்துக்குத் தேலையான அமிலோஅமிலங்கள் இருக்கின்றன அடுத்து. அது இன்ரைய அறிவியல் இதனை அழகுசாதனப் பொருட்களுக்கு அடிப்பாடையான பொருளாகப் பயன்படுத்தப்படுகின்றது. இற்றைக்கு இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் ரசியநாட்டைச் சேர்ந்த விஞ்ஞானிகள் செய்த ஆய்வில் முதுமை அடைந்து இறக்கும் தருவாயில் இருந்த  கற்றாலை உணவாக கொடுக்பப்பட்டு; வெள்ளை எலிகளுக்கு கொடுத்து ஆயூட் காலத்தை இருமடங்காக அதிகரித்ததை அவதானித்தாக கட்டுரை வெளியாகியிருந்தது. வெள்ளை எலிகளின் ஆயூட்காலம் முற்பது மாதங்களாகும் என்பது குறிப்பிடத்தக்கது. 

   இதற்கு தழிழ் மெய் உலகம் பல்ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னே இதை உணர்து இத்தாவரத்துக்கு “குமரி” என பெயர் இயம்பி இழமையை நிலைத்து முதுமையை விரட்டிடும் அற்புதமுகிலிகையாக இயம்பியிருக்கின்றது. மானிடப் பிறவியின் அர்த்தம் புரிந்து மானிடர்க்காக வாழ்ந்த சித்தார்கள் இதை ப்புரிந் திருந்தனர். அனுபவ அறிவால் நுன்மதி நுளை புலத்தால் அவர்களின் தெய்வீக அற்றலால் வெளிப்படுத்தினர். 
     
தேரையர் பாதார்த்த குணசிந்தாமனியில் குமரியின் மருத்துவ பண்பை

 “பொல்லா மேகம் கபம் புல் சூலை
குட்டம் ரசம் அல்லார் மந்தம்
 பகம் தரும் குன்மம் எல்லாம் விட்டு ஏகும்
 அரிக்கும் எரிச்சர் கிரிச்சரமும் மாறும்
 குமரிக்கு மருண்டு” 

 1.“பொல்லா மேகம்”: இது சக்கரை நோயைக் குறிக்கின்றது. இதனை மேகத்துக்கு ஒப்பிடுகின்றார். மேகமானது தோன்றி மறைவதுடன் திரும்பத் திரும்ப தோன்றுவதும் மேகங்கள் உயர்வதும் தாழ்வதும் அதன் இயக்கையான குணமாமும் இதையொத்த பண்புடையது சக்கரை நோயாகும். இன் நோயைப் போக்கும் தன்மை குமரிக்கு உண்டு.

 2.“கபம்”: கபம் என்பது நாசி, தொண்டை, நெஞ்சிப்பகுதியில் சளி கட்டி உடலை உபாதைக்குட்படுத்தும். இதனை கிராமப்புறங்களில் சளிபிடித்தால் சனிபிடித்தமாதிரி என்று இயம்புவதுண்டு அவ்வளவு அவத்தைப்பாடுத்தும். கண்டத்தில் கபம் கட்டி சுவாசத்தை தடை செய்து உடல் இயக்கத்தை நிறுத்தக்கூடிய தன்மையானது கபம். நெருப்பெரிய ஒட்சிசன் தேவை ஒட்சிசன் இல்லாவிட்டால் நெருப்பு அனைந்து விடும். இது போன்றே பிரபஞ்கம் இயங்க பிராணவாயு தேவை. அதுபோன்று உடல் இயங்க ஆத்துமா வாகிய அக்கினி பிரகாசிக்க வேண்டும். அதற்கு பிராணவாயு கண்டத்தின் வழியாக செல்ல வேண்டும். அதை கபம் தடைசெய்யும் இச் சந்தர்ப்பாத்தில் வாயால் சுவாசிக்க நேரும் இதனை “மோவாய் சுவாசம்” என்பர். இது போன்று ஒரு மனிதன் இறப்பதற்கு முன்னர் சுவாசம் நெஞ்கிப்பகுதிக்கு மேல் சுவாசம் இழுத்துக் கொண்டு இருக்கும் இதனை “சேப்பம் கட்டி இழுக்குது” என்பர். சேப்பம் என்பது கபம் இறுதியாக உடலிலிருந்து உயிரை பிரிக்க கபம் உதவுகின்றது. அப்படிபட்ட கபத்தை இல்லாமல் செய்யும் ஆற்றல் குமரிக்குண்டு. 

     குமரி குளிர்த்தன்மையானது. இது கபத்தை உருவாக்கக்கூடியது எனலாம். இதன் தன்மை கபத்தை இல்லாமல் செய்துவிடும் தன்மையுள்ளது. ஆரம்பத்தில் சளியை ஏற்படுத்தி பின்னர் தெடர்ந்து உண்டுவர நோய் எதிப்புச் சக்தியை உருவாக்கி கபத்தை அடியோடுடொலித்து விடும் சக்தி பெற்று விடும் குமரி.  குமரியைப் பயன்படுத்துவதில் கவனம் தேவை பொதுவாக கபத்தினால் உண்டாகும் அஸ்டுமா,கடுமையான ஜலதோம், சைனஸ் வருத்தங்கள் உள்ளவர் நிதானத்துடன் தவித்துக் கொள்வது நன்று. பொதுவாக குளிர்சியைத் தரும் தன்மை குமரிக்கு உண்டு. அதேவேளை சளியைத் தடுக்கும் வல்லமையும் குமரிக்கு உண்டு. சிறிது சிறிதாக நாளுக்கு நாள் உணவாக சேர்த்து வர காலப்போக்கில் நோய்எதிப்பு சத்தியைப் பொற்று விடும் உடல் அதன் பின்னர் கபம் தனது சக்தியை இழந்து விடும். வயதானவர்களுக்கு மார்புப் பகுதியில் கபம் கட்டுவது இயல்பு இதனால் உடல் நல்ல திடகாத்திரத்தை இழந்து விடும் அச்சந்தப்பத்தில் குமரியை உணவாக்கி  திடகாத்திரத்தைப் பெறமுடியும் எனவே குமரி ஓர் காயகற்ப முகிலிகையாகும.; 

3.“புல் சூலை”: உடலில் குடலில் புழுக்கள் ஒட்டுண்ணியாக இருப்பது உடலில் உள்ள சத்துப்பொருட்களை உறுஞ்சி குடித்து தேகாரோக்கியத்தை இழக்கச் செய்வது இயல்பு பல்வேறு நோய்களை ஏற்ப்படுத்தும். இப்படிப்பட்ட புழுக்களை அகற்றும் ஆற்றல் குமரிக்கு உண்டு. 

 4.“சூலை”: சூலை என்பது கணுக்களில், கபாலத்தில்,வயிற்றில், குடலில் வரும். கணுக்களில் வரும்போது கணுச்சூலை என்றும் கபாலத்தில் ஏற்படுகின்ற போது கபாலைச்சூலை அல்லது சிரசூலை என்றும் குடலில் வருகின்ற போது குடல்சூலை என்றும் இரைப்பையில் வருகின்ற போது சூலை நோய் என்றும் குறிப்பிடுகின்றனர். சூலையின் வேதனை சூலத்தால் குத்துவதை ஒத்தவலியை போன்றது. இது உஸ்னத்தால் உண்டாவது இதை தடுக்கும் ஆற்றல் குமரிக்கு உண்டு. சங்கால இலக்கியம் குமரியின் தன்மையை “குமரியின் சாற்றை உண்டு குடல் புண் ஆறக்கண்டேன்” என்று கூறுகின்றது. கருக்குடலில் இருக்கும் பினிகளுக் கெல்லாம் அருமருந்து குமரி  

5.“குட்டம்”: தொழுநோய்யாகிய விரல்கள் அழுகி விழுவதுடன் அங்கங்கள் சுருங்கி ஒலிந்து அபலட்சணத்தை உருவாக்கின்ற கிருமிகளை அகற்றி ஒழிக்கும் ஆற்றல் குமரிக்குண்டு.

6.“ரசம்”: எலும்பு மச்சையை ரசம் என்று அழைப்பதுண்டு எலும்பு மச்சையில் உள்ள சத்துக்கள் குன்றிப்போனால் சிவப்பணுக்களின் உற்பத்தி தடைப்படும் இதன் விளைவால் இரத்தத்தை நரம்பு வளியாக இலுத்துக் செல்லும் பிராணவாயுவின் அளவு குறைவடைந்து நாம் செயல்படும் செயலாற்றல் குறைவடையும் இதனால் இளமையில் முதுமையை எதிர் நோக்க விளையும் அத்துடன் வெளுப்பு நோய்க்கு ஆட்படுவோம். இன்நிலையிலிருந் எம்மை காக்க குமரி ஓர் அருமந்தாகும். இது சிவப்பணு உற்பத்தியை அதிகரித்து எம்மை பலமிக்தாக்கும் தன்மை குமரிக்கு உண்டு.

 7.“மந்தம்”: மந்தம் என்பது ஐPரணக்குறைபாடு இயல்பான வேகத்தில் குறைபாடு இதனால் ஏற்படும் அஐPரணம் வயிற்று பொருமலாக இருக்கும் இதன் மூலம் உடலில் அமிலம் சுரந்து அசாதாரன நிலையை ஏற்படுத்தும் இவ்வாறன நிலையிலிருந்து குமரி எம்மைப் பாதுகாக்கும்.

8. “பகம் தரும்”: பகர்தரும் என்பது ஆசன வாசலில் ஏற்படும் புண்ணும் சீளுமான நிலை இதை வயல் வெளியில் சேறும்சகதியுமாக இருக்கும் நிலைக்கு ஒப்பிடுவர். இது மூலநோயின் ஒருவகை இதனால் குத்துகின்றது போன்ற வலியும் எரிச்சலும் கடுப்புடண் கூடிய வலியும் ஆசனவாசலால் இரத்தக்கசிவுள்ள பல பண்புகளைக் கொண்ட மூலரோகம் உழையும் மூலரோகம் எனப்படும். மூலநோய் என்பது பலவகை உண்டு உள்மூலம், வெளிமூலம், உதிரமூலம், ஆசனவாய் வெடிப்பு, ஆசனவாயில் திறவு இன்னுமோர் மேலதிக பாதை போல் தோன்றும் இயல்பு இதை பவித்திரம் என்பார்கள்  இதனை போக்க வவ்லது குமரி. 

9.“குன்மம் எல்லாம் விட்டு ஏகும்”: அஐPரனத்தால் ஏற்படும் நோய் குன்மம் இப்படிப்hட்ட நோய்கள் எல்லாம் நம்மை விட்டு ஓடிடும் எனக்குறிப்பிர்வதுடன்.  

10. “அரிக்கும் எரிச்சர் கிரிச்சரமும் மாறும்”: கிரிச்சரம் என்பது  சிறுநீர்த்தாரையில் சிறுநீர் வரும் பாதையில் அரிப்பும் எரிச்சலும் இருந்து அளொகரியத்தை ஏற்படுத்துகின்ற நீர்த்தாரை நோய் இதற்கு குமரி அருமருந்து .       

பயன் படுத்தும் முறைகள்:
       சோற்றுக்கற்றாழை(குமரி)யின் தொலை நீக்கி சோற்றை எடுத்து அதை ஏழு முறை சுத்மான நீரில் திரும்பத்திரும் புதிய புதிய நீரினால் கழுவி சுத்தம் செய்து அதிலுள்ள அலோயின் என்ற சத்தை நீக்கிவிட வேண்டும். இது கொளுகொளுப்பாக இருக்கும் இதை நீக்கியபின் மருத்து உயயோகத்துக்கு உகந்தாக அமையும். தாழையின் மடலைத் தெரிவு செய்கையில் பின்வரும் விடையங்களைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

1. கற்றாழை மரத்தின் முதிர்வு ஆகக்குறைந்தது ஒன்றரைவருடத்தை பூர்திசெய்திருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் முழுமையான மருத்துவ பண்புகள் நிறைந்தாக இருக்கும். வேதியல் மூலக்கூறுகளை முழுமையாக பெற்றிருக்கும்.

2. தாழை ஓலை மரத்திலிருந்து வெட்டி எடுத்து அரைமணித்தியாலத்;துக்கும் ஒரு மனித்தியாலத்துக்கும் இடையில்  தோலை நீக்கி சுத்தம் செய்தல் உத்தமம். ஆனாலும் நான்கு மணித்தியாலத்துக்கு மேல்படுதலாகாது.

3. சோற்றுப்பகுதியை துண்டுகளாக நறுகி எடுக்கவேண்டும். உண்ண ஆரம்பிக்கும் போது முதலில் அரைச் சதுரடிப் பிரமாணமாக ஒரு வாரமும் இரண்படாவது வாரத்தில் ஒரு சதுரடிப் பிரமாணமாகவும் அடுத்து ஒன்றரை சதுரடி பிரமாணமாகவும் நான்காவது வரத்தில் இரண்டு சதுரடிப் பிரமாணமாகவும்  காலையில்  வெறு வயிற்றில் உணவு உண்பற்கு அரைமண்த்தியாலயம் முன்தாக உட் கொள்ள வேண்டும். பொதுவாக இரண்டு சதுரடிப் பிரமாணம் கொண்ட ஒரு துண்டில் ஒரு நாளுக்குத் தேவையான சத்துப் பொருட்கள் அணைத்தும் அடங்கியுள்ளது. ஒரு நாளுக்குப் போதுமானதாகும். இத்துன்டுகளை சக்கரை, பணம்கற்கண்டு, கற்கண்டு போன்றவற்றில் போட்டு புறட்டியுட் சுவையுட்டியும் பயன் படுத்தலாம் அல்லது வெறுமனேயும் பயன் படுத்தலாம். குமரியின் பாதப்படுத்திய துண்டுகளை சீலையில் கட்டிதொங்விட்டு சிறுது நேரத்தின் பின் அதை புளிக்கொளம்பாகம் தயார் செய்து உணவாகவும் பயன் படுத்தலாம். அடுத்து இதை குமரியை சாறாக்கி தொடம்பழச்சாறும் சேர்த்து பழரசமாகவும் பயன் படுத்தலாம். லேக்யமாக்கியும் பயன்படுத்தலாம்.

4. இவ்வாறு எடுத்து கொள்வதன் நோக்கம் உடலில் சத்து பொருளைகளை படிப்படியாக சேர்த்துக் கொள்வதே இதன் நோக்கம் இப்படி முறையான செயல் பாட்டுக்கு காரணமாகும்.

5. ஏக்கனவே கபம் அதிமாகி இளை நோய்க்கு ஆளானவர்களும் பினிச நோக்கு ஆளானவர்களுடம் வைத்தியரின் ஆலோசணையுடன் குமரியை உகயோகிக்த் தொடங்குவது சிறந்தது. உகயோகிப்பதானால் தற்போது பயன்படுத்திக் கொண்டு இருக்கும் ஆலோபதி மருந்துடன் சேர்த்து பயன்படுத்தி காலப் போக்கில் ஆலோபதி மருந்துகளை நிறுத்திக் கொள்ள முடியும். பொதுவாக எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளல் நன்று.

6. முதுமையால் உண்டாகும் மூட்டுவலி முட்டிவலி மூட்டுக்களில் வழுவின்மை போன்ற நோய்களுக்கு குமரியை தோலுடன் இரண்டு சதுரடி அளவு எடுத்து அதனுடன் இஞ்சி, மஞ்சல் சமனிடை சேர்த்து விழுது போல் அரைத்து சாதுவாக சூடாக்கி மூட்டுகளில் பற்றுப்போல் நன்றாக பூசி காயவிட மூட்டுவலி, வீக்கம் என்பன நீங்கி சுகம் பெறலாம். இது போன்று காலை மாலை பற்றிடலாம்.  

    

மனத்தக்காளி அல்லது மிளகுத்தக்காளி


          மனத்தக்காளிக் கீரையின் காய்கள் மிளகை ஒத்தவையாகக் கானப்படுவதால் அதனை மிளகுத்தக்காளி என்றும் அழைப்பர். இத்தக்காளிச் செடி மனமுள்தால் மனத்தக்காளி என்றும் திருமனத்துக்கு தக்க உடல்லை யாளியை யொத்ததாக்கும் தன்மை தரக்கூடிய வல்லமை யுள்ளதால் இக் கீரையை மனக்க தக்க யாளி மனத்தக்காளி யாக்கிவிட்டது.
          இக்கீரையின் மருத்துவ பாகம் பற்றி தேரையர் பதாத்தகுண சிந்தாகணியில் 

“மந்தாக்கின சோவை வாந்தி யாழல.; வாயு வெப்பம்
  விந்து நோய் பாண்டொதிர் விக்கல் - முந்து
  வளருமத்தோச நோய் மாறும் கைப்பான
   மினகுத் தக்காளியிலை மெய்” என்று ஒருபாடலிலும் அடுத்து


 காய்க்குக் கபம் தீரும் காரிகையே யவ் வினைக்கு
 வாய்க்கிரந்தி வேக்காடு மாறும்காண் - தீக்குள்
 உணக்கிடு வற்றலுறு பிணியாக்கு கூறும்
 மனத்தக் காளிக்குள்ள வாறு”   


 வெப்பத்தினால் உண்டாகும் நோய்களுக்கு இது அருமந்தாகும் என்பதை தேரையர் எவ்வளவு அழகாக வெண்பாவில் குறிப்பிட்டுள்ளார்.            
 பொதுவாக வெப்பகாலத்திலே ஏற்படக்கூடிய வாய்ப்புண்ணுக்கு மனத்தக்காளி இலையை மெண்று விழுங்கி விட்டால் குணமாகிவிடும். 
     இற்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மூன்னர் வாழ்த சித்தர்கள் இன்றைய உலகுக்கு பொருத்தமானதை எப்படி உணர்ந்திருந்தனர் என்பதை அறிவியல் ஆய்கின்றது என்னும் போது நமக்கெல்லாம் ஒருபுறம் பெருமையும் இன்னுமோர் புறம் வியர்ப்பாகவும் இருக்கின்றது. தமிழ் மருத்துவ உலகம்கில் சித்தர்கள் தொண்மையும் விஞ்ஞானத்தின் மெய்ஞானியாக இருந்திருக்கின்றனர். என்பது இங்கு கண்கூடு.



   1.இரண்டாயிரத்து ஆறாம் வருடம்( 2006இல்) மஸ்பரலஸ் என்ற ஆய்வியலாளர் மனதக்காளியின் இலைச்சாற்றை ஆய்வு செய்து குடல்புண்ணை ஆற்றும் ஆற்றல் உண்டு என்பதை வெள்ளை எலிகளுக்கு கொடுத்து அவைகளுக்கு ஏற்பட்டிருந்த குடல் புண் ஆறக்கண்டு ஆய்வுக் கட்டுரை வெளியிட்டுள்ளார். அத்துடன் வாயுடன் கூடிய அல்சறை குணமாக்கும் ஆற்றலும் மனதக்காளியின் இலைச்சாற்றுக்கு உண்டு என்று நிருபித்துள்ளார்.


  2. யதீஸ் என்ற இன்னுமோர் ஆய்வாளர் இரண்டாயிரத்து பதினொன்றில் (2011 இல்)செய்த ஆய்விலும் மனதக்காளியின் இலைச்சாற்றுக்கு வயிற்றில் எற்படும் புண்களை முற்றாக மாற்றும் வல்லமை இருப்பதாக மீண்டும் உறுதி செய்துள்ளார்.

   3. இரண்டாயிரத்து ஆறாம் வருடம்( 2006இல்) ராஐ; என்ற இன்னுமோர் ஆய்வாளர் மனதக்காளியின் இலைச்சாற்றில் உள்ள “கப்பட்டோ புரட்டக்டியுல்” என்ற வேதியல் மூலக்கூறு கல்லீரலைப் பாதுகாக்கின்றது. என்ற கருத்தை அவரின் ஆய்வின் மூலம் முன்வைத்து நீருப்பித்துள்ளார்.


   4.இரண்டாயிரத்து பதினொன்றில் (2011 இல்) பகிஸ்தானைச் சேர்ந்த உஸ்மான்னலி அஸ்ரப் அலி என்னும் ஓர் ஆய்வாளர் மனதக்காளியின் இலைச்சாற்று மஞ்சல் காச்சலில் ஒருவகையான “கப்பட்டைடிஸ் -சீ” என்ற காச்சலை உருவாக்கும் வைரஸ்சை அழிக்கும் வல்லமை உள்ளதுடன் கல்லிரலின் பலவீனத்தால் உண்டாக்கும் நோய்களை குணப்படுத்த வல்லதுடன் கல்லீரலை பலப்படுத்தும் வல்லமையும் இருக்கின்றது என மீண்டும் அக் கருத்துக்கு வலுவுட்டியுள்ளார்;.


   5.செல்வப்பா முத்து என்ற இன்னுமொரு ஆய்வாளர் இரண்டாயிரத்து பதினொன்றில் (2011 இல்) செய்த ஆய்வில் மனதக்காளிக் கீரை மிகவும் சக்தி வாய்தது என்றும் அது ஆண்களின் ஆண்மையை வீரியமாக்குவதுடன் விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதுடன் இதன் அளவையும் விந்து சுரப்பையும் அதிகரிக்கின்றது என்று தனது முடிவை வெளியிட்டுள்ளார். இதனை சித்தர்“விந்து நோய் பாண்டொதிர்”என முன்னரே அறிந்து அறிவியல் உலகுக்கு தெரிவித்துன்னர் என்பதை அறியும்போது தமிழ் மருத்துவத்தின் அறிவியல் தொன்மையை அறிய முடிகின்றது. 
மனத்தக்காளி காயும் பழமும்
  5. திருமதி. வடிவேல் அருள்மொழி என்ற ஆய்வாளர் இரண்டாயிரத்து பத்தில் (2010 இல்)தாம் செய்த ஆய்வில் மனத்தக்காளிக் சற்றுக்கு இரண்டு பண்புகள் உண்டு என்றும் இவை
        1;.நோய் எதிப்பு சக்தி வீழ்சிக்கு காரணமாக இருக்கின்ற பொருட்கள்         எல்லாவற்றையும் அழிக்கின்ற ஆற்றல் உண்டு என்றும். உடலை முதுமையிலிருந்து இளமையாக்கி  காக்கின்ற ஆற்றல் உண்டு என்றும். 
       2.உடலில் கொளுப்பு சத்து அதிகரித்து கொலஸ்றோல் அதிகர்த்து அதன் விளைவால் வரக்கூடிய சைக்கிளிசைட், லோடெண்சிட்டி கொலஸ்றோல், லிப்பீட் கொலஸ்றோல்போன்றவை உடலில் கூடுவதை தடுக்கும் ஆற்றல் மனத்தக்காளிக்குண்டு. என்று தனது ஆய்வில் வெளியிட்டுள்ளார்.


6. சீனதேசத்தைக் சேர்ந்த கெஸ்சி முவான் என்ற ஆய்வாளர் இரண்டாயிரத்து பத்தினென்றில்(2011) வெளியிட்ட கட்டுரையில் மனத்தக்காளிக் கீரைக்கு இன்னும் இரண்டு பண்புகள் இருப்பதாக குறிப்பிடுகின்றார். 
            1.அட்டோ பசிஸ்
            2.அப்போட்டசிஸ் என்ற வேதியல் மூலக்கூறுகள் இருப்பதாகவும் அது உடலில் அழிந்த கலங்களை மீண்டும் புதிப்பிக்கின்றதுடன் கலங்கள் தேவைக் கேற்ப உற்பத்தி செய்வதுடன் உற்பத்தியின் போது ஏற்படும் தவறான நகல்களை அழித்து சரியான நகல்களை நிலை நிறுத்தும் ஆற்றல் உள்ளது என்பதை நிருபித்துள்ளார். இதை சித்தர் பாடலில் “முந்து வளருமத்தோச நோய் மாறும் கைப்பான  மினகுத் தக்காளியிலை மெய்” என அப்போதே அழகாகக் கூறியிக்கின்றார்.


7.லைவோசன் என்பவரும் ரீக் என்ற இருவரும் இரண்டாயிரத்து பத்தினென்றில்(2011) இல் ஆய்வு செய்து மனத்தக்காளிக் கீரைகயில் “கிக்கோரோட்டிக்” என்ற வேதியல் மூலக்கூறு இருக்கின்றது என்றும் இது புற்றுநோயை தடுக்க வல்லது என்று குறிப்பிட்டுள்ளனர். இதில் கிக்கோ என்பது மாச்சத்து புரோட்டீன் என்பது புரதம் இவை இரண்டும் சேர்ந்த ஓர் புரதப்பொருள் இது புற்றுநோயை தடுக்க வல்லது. இதன் முலம் மீண்டும் ஆதாரப்படுத்தியுள்ளது.



மனத்தக்காளி 
             சீன நாட்டில் இருதய நோய்க்கு பல முகிலிகைகளுடன் சேர்த்துப் மனத்தக்காளியைப் பயன்படுத்து கின்றனர்.அது போன்று கிரேக்க மருத்துவத்தில் வீக்கத்துக்கு பற்றுப்போட பயன்படுத்துகின்றனர். வீக்கம் வருவதையும் காச்சல் வருவதையும் இக்கீரை தர்க்கும் ஆற்றல் உண்டு. பேஸ்சிய நாட்டிலே நீக்கோவைக்கு அருமந்தாக பயன் படுத்து கின்றனர். நீக்கோவை என்பது கால், முகம், கண்ணீத்தாரைப்பை( கண்களின் கீழ்ப்பகுதி),வயிறு போன்ற இடங்களில் நீர் சுரந்திருத்தல் உடலில் தேவையற்ற வகையில் நீர் தோல்லின் அடிப்பகுதியில் நீhதேங்கியிருத்தல்.  
பெண்களின் கற்பப்பையில் ஏற்படும் புற்று நோக்கு அருமருந்தாக பல ஆய்வுகள் கூறுகின்றன.
  இந்தக்கீரை உடலிலே நோய் எதிர்ப்புக் சக்தியை ஏற்படுத்தி புற்றுநோயை வராது தடுத்து புற்றுநோய் திசுக்களை அழித்து உடலைப் பாதுகாக்கின்றது. முத்தோச நோய் என்னும் புற்றுநோய் இது ஒன்றில் ஆரம்பித்து உடல் முழுவதும் பரவி உடலை அழித்து விடும் ஆனால் அஸ்துமா என்னும் சுவாசகாசம். இருதையநோய், நுரையிரல் நோய் போன்றவை அந்த உறுப்பை மட்டும் பாதிப்பாவை இதனாலே சித்தர்கள் இதனை முத்தோச நோய் எனக் குறிப்பிட்டுள்ளனர்.
“காய்க்குக் கபம் தீரும் காரிகையே யவ் வினைக்கு
 வாய்க்கிரந்தி வேக்காடு மாறும்காண்” காய் குளிர்சியால் வரும் நோயை குணமாக்கும். உடலில் வெப்பத்தை ஏற்படுத்தி குணமாக்கும் காய்க்குக் கபம் தீரும் என்றும் கீரை வெப்பத்தினால் வரும் நோயை குணமாக்கும். உடலில் குளிர்சிசியை ஏற்படுத்தி குணமாக்கும் வினைக்கு வாய்க்கிரந்தி வேக்காடு மாறும்காண் என்று வெண்பாவில் கூறியுள்ளார். நோய்யுற்று உடல் தளர்தவர்களின் தளர்வு நீங்கி வலிமை பெற மனத்தக்காளி வற்றல் புளிக் குழம்பு சிறந்த பலனைத்தரும்,  “தீக்குள் உணக்கிடு வற்றலுறு பிணியாக்கு கூறும் மனத்தக் காளிக்குள்ள வாறு” என கூறிப்பிடுகின்றார். தளர்வு நீங்கி வலிமை பெறுகின்ற போது உடலில் பல்வேறு மாற்றங்கள் இடம் பெறும் அப்போது மீள்திறனை ஏற்படுத்தும் ஆற்றல்லுடன் நோய் எதிர்ப்புச்சக்தியை ஏற்படுத்தி உடலை வலுவுட்டும் சக்தி மனத்தக்காளிக் குண்டு. 


பயன்படுத்தும் முறைகள்:    
 1;.மனத்தக்காளி சூப்
தயாரிக்கும் முறை: தக்காளி இலைகளை தெரிந் தெடுத்து நன்கு நாலு அல்லது ஐந்து முறை சுத்தமான நீரினால் திரும்ப திரும்ப கழுவிச் சுத்தம் செய்து எடுத்து வைத்துக் கொண்டு சுத்தமான இரும்பு பாத்திரம் அல்லது மண்கட்டியில் தேங்காங்காய் எண்ணை அல்லது நெய்யை விட்டு அடுப்பிலேற்றி கடுகு போட்டு தாளித்து விட்டு அதனுடன் நறுக்கிய சின்னவெங்காயத்துடன் மிளகுத்தூள், சீரகத்தூள் போட்டு தாளித்துவிட்டு இதனுள் சுத்தம் செய்து வைத்திருக்கும் கீரையைப் போட்டு அதனுடன் சேர்த்து தக்காளிப் பழத்துண்டும் போட்டு தேவையான அளவு நீர்ரும் உப்பும் சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து  பின் இறக்கி சூப்பாக பருக முடியும். பருகினால் வாய்வேக்காடு வராது வாய்ப்புண் வராது. வந்தாலும் குணமாகி விடும். 

2.பச்சையாக மென்று சாப்பிடலாம்.

3. கீரையை பருப்பு போட்டு கடைந்து காப்பிடலாம். பாத்திரத்தில் கீரையைப் போட்டு சின்னவெங்காயத்தை நறுகிப்போட்டு அதனுடன் அரைத்பங்கு தக்களிப் பழத்தையும் நறுகிப் போட்டு சிறிதளவு மிளகு சீரகம் பச்சைமிளகாய் இவை போட்டு திடமாக தன்னீவிட்டு காச்ச வேண்டும். கீரையின் பசுமை நிறம் மாறாது இருக்க சக்கரையை சிறிதளவு தூவி விடவேண்டும் பசுமை நிறம் மாறாது இருக்கும் .இதை எடுத்து வைத்து விட்டு இன்னுமோர் பாத்திரத்தில் எண்ணை அல்லது நெய்யில்யை விட்டு அடுப்பிலேற்றி கடுகு போட்டு தாளித்து விட்டு அதனுடன் பருப்பு அல்லது துவரம் பருப்பு அவித்த நீரை விட்டு அதில் அவித்துவைத்த இலையை போட்டு அவித்து வதக்கி கடைந்து தேவையான உப்புச்சேர்த்து எடுத்து சாதத்துடன் உண்ணமுடியும்.  பொதுவாக கீரைகளுக்கு புளிசேர்ப்பதை தவிப்பதால் சத்தி இழப்பின்றி முழுமையான பலனைப் பொறமுடியும். நெய் சேர்ப்பது கீரைக்கறிக்கு நல்ல சுவையைத்தருவதுடன் ஊட்டமாகவும் இருக்கும்.    

4. காயை அல்லது வற்றலை புளிக்குழம்பாக செய்து வெந்தையக் சேர்த்து தாயாரித்து உணவுடன் தேர்த்து உண்ண முடியும். கபம் உள்ளவர்கள் வெந்தயத்தை தவித்துக் கொள்ளலாம். வேந்தையம் குளிர்த் தன்மையானது.