Thursday, 29 September 2016
Wednesday, 17 February 2016
திருமூலரின் -45 கற்பக மூலிகைகளின் பாடல்
திருமூலரின் -45 கற்பக மூலிகைகளின் பாடல்
1"கேளென்ற" கருநெல்லி,
2 கருத்த நொச்சி
கெடியான,
3 கருவீழி,
4 கருத்த வாழை காளென்ற,
5 கரிய கரிசா லையோடு
6 கருப்பான நீலியோடு,
7 கரியவேலி கோளென்ற
8 கரூமத்தைத்
9 தீபச் சோதி
10 கொடு திரணச் சோதி
11 சாயா விருட்சம் ஏளென்ற
12 எருமை கனைச்சான்
13 ரோமவிருட்சம் ஏற்றமாம்
14 சுணங்க விருட்சம்
15 செந்திரா” (1) “செந்திராய்
16 செங்கள்ளி
17 செம்மல்லி யோடு
18 சிவந்தக றறாழை
19 செஞ்சித்திர மூலம் நந்திராய்சிவப்பப்பா மார்க்கத்தோடு
நலமான
20 கற்பிரபி
21 கறசேம் பாகும் பரந்திராய்
22 கல்லுத்தா மரையி னோடு பாய்ந்த
23 குழல் ஆ தொண்ட
24 மகாபொற்சீந்தல்
25 வெந்திராய்
26 வெண்புரசு
27 வெள்ளைத் துத்தி மிகு
28 வெள்ளைத் தூதுவளை மிடுக்குமாமே” (2) “மிடுக்கான குண்டலமாம்
29 பாலை யோடு
30 வெள்ளை நீர்முள்ளி
31 வெண்விண்டுக் காந்தி கடுக்கான
32 வெண்கண்டங் காரி யோடு
33 கசப்பான பசலையோடு
34 மதுர வேம்பு கிடுக்கான
35 கிளிமூக்குத் துவரை
36 அமுகண்ணி கெடியான
37 பொன்மத்தை
38 மதுர கோவை படுக்கான
39 பொன்வன்னச் சாலியோடு
40 பாங்கான கருந்தும்பை
41 மதனத் தண்டே” (3) “தண்டொடு
42 மூவிலையாம் குருத்துமாகும் தணலான
43 சிவத்ததில்லை
44 கருத்த வேம்பு
45 இண்டோடே
இவ்வகைகள் நாற்பத் தைந்தும் ஏற்றமாம் மலைகளிலே மிகுதி உண்டு பண்டோடு பாடாணம் அறுபத்து நாலும்
பட்டுடனே கட்டுண்டு படுதீப் பற்றும் துண்டோடு சூதமது கட்டும் ஆகும் சுயம்பான உபரசங்கள் சத்தும் ஆமே.” (4)
“சத்தான மூலிகையில் சுருக்குச் சித்தி சாப்பிட்டால் மண்டலந்தான் சாவோ இல்லை
மத்தான மன்மதன்போல் தேகமாகும்
மாசற்று நரைதிரைகள் எல்லாம் மாறும்
எத்தான வாசியெல்லாம் இறுகிப் போகும்
ஏறலாம் சுகனத்தில் ஏற்றமாக
அத்தான அடுக்கெல்லாம் சோதித்தேறி
அண்டரண்டபதமெல்லாம் அறிய லாமே.” (5)
இப்பாடலின் படி நாற்பத்தைந்து கற்பக மூலிகைகளினைக் கூறியுள்ளார்.மேலும் இம்மூலிகைகளினை முறையாக உட்கொள்ளுபவர்களிற்கு சாவு இல்லை என்றும் மேலும் மன்மதன் போல அழகுடைய மிடுக்கான வாலிபத்தோற்றம் இருக்கும்;முடி நரைக்காது;தோல் சுருங்காது;உடல் மூப்பு அடையாது மலைகளில் எளிதாக ஏறலாம்.மூச்சு இரைக்காது. விண்வெளியில் உலாவலாம்.வான மண்டலத்தில் உள்ள பல்வேறு நட்சத்திர மண்டல அடுக்குகளைப் பார்க்கலாம்.போன்ற கூற்றுக்களும் மேலும் இம்மூலிகைகளின் சாற்றினால் அறுபத்து நான்கு பாஷாணங்களின் கட்டு உண்டாகும் எனவும் இவற்றின் ரசம் கட்டியாய் மூலிகை மணியாகும் எனவும் கூறுகின்றனர்.

Wednesday, 30 December 2015
ரிபோஃப்ளேவின்
‘‘என் மகளுக்கு வாயிலே அடிக்கடி புண் வருது. மணத்தக்காளி சாப்பிடு நல்லதுன்னு சொன்னால் கேட்டால்தானே? அவளுக்கு இங்கிலீஷ் மருந்துகளிலேதான் நம்பிக்கை.’’மருந்துக்கடைக்காரரிடம் ராஜாராமன் பேசிக்கொண்டே போனார். எப்போதும் அவர் அப்படித்தான். வந்தோமா, மருந்தைக் கேட்டுவாங்கிக் கொண்டு கிளம்பினோமா என்று கிடையாது. என்றாலும், இரண்டு காரணங்களுக்காக மருந்துக்கடைக்காரர் ராஜாராமனைப் பொறுத்துக்கொள்வார். ஒன்று, அவர் பல வருடங்களாக அந்தக் கடையின் வாடிக்கையாளர். இரண்டு, அவருக்கு மருந்துகளைப் பற்றிய ஞானம் நிறைய உண்டு.
‘‘குரோசின் கொடு, அல்லது மெட்டசின் கொடு’’ என்று மருந்தினுடைய பிராண்டின் பெயரைக்கூற மாட்டார். ‘‘பாரசிட்டமால் மாத்திரை நாலு வேணும்’’ என்று அந்த மாத்திரைகளின் அடிப்படையான பொருளைக் குறிப்பிட்டுத்தான் கேட்பார்.
‘‘வாய்ப்புண்ணுக்கு ரிபோஃப்ளேவின் அடங்கின மாத்திரை நாலு கொடுப்பா’’ என்றார்.
அவருக்குத் தெரியும் ரிபோஃப்ளேவின் என்பது ஒரு வகைப் புரதம் என்பது. உதடு, வாயின் உட்புறம் போன்றவற்றில் உள்ள மெல்லிய தசைகள் வெடிக்காமல் வழுவழுப்புடன் இருக்க, இந்தச் சத்து தேவைப்படுகிறது. இதுகுறித்த பிற தகவல்களை நீங்களும் தெரிந்து கொள்ளுங்களேன்.
எந்தவிதமான இயற்கை உணவில் ரிபோஃப்ளேவின் அதிகம் காணப்படுகிறது?
கீரை வகைகள், வேர்க்கடலை ஆகியவற்றைக் குறிப்பாகச் சொல்லலாம். பயிர் வகைகளிலும் இந்தச் சத்து உண்டு.
பயிர் வகைகளை சமைக்கும்போதோ, நிலக்கடலையை வேகவைக்கும் போதோ ரிபோஃப்ளேவின் சத்து அழிந்து விடுமா?
சராசரி வெப்பத்தில் ரிபோஃப்ளேவின் அழிந்துவிடுவதில்லை. அதே சமயம் நிறைய நேரம் சூரிய வெளிச்சத்தில் படுகிற மாதிரி இந்த உணவுப் பொருள்களை வைத்திருந்தால், அவற்றில் உள்ள ரிபோஃப்ளேவின் சத்து கொஞ்சம் கொஞ்சமாக அழிந்துவிடும்.
கருத்தரித்த பெண்களுக்கு அதிக அளவில் ரிபோஃப்ளேவின் தேவைப்படுமா?
அப்படி ஒன்றும் ஆராய்ச்சிகள் தெரிவிக்கவில்லை. என்றாலும், கருத்தரித்த பெண்களின் சிறுநீரில் உள்ள ரிபோஃப்ளேவின் அளவு, குறைவாகவே இருக்கிறது என்று கண்டறிந்து இருக்கிறார்கள். அதாவது அப்போது அவர்களது உடல் அதிக ரிபோஃப்ளேவின் புரதச் சத்தை ஈர்த்துக்கொள்கிறது என்று கூறலாம். இந்த வகையில் சற்றே அதிகமாக ரிபோஃப்ளேவின் கர்ப்பிணிப் பெண்களின் உணவில் இருக்க வேண்டும் என்று கூற இடம் உண்டு.
ரிபோஃப்ளேவின் என்பது ஒருவகை வைட்டமினா?
ஆம். Vitamin B யில் பல முக்கிய வகைகள் உண்டு. அவற்றில் இதுவும் ஒன்று. B2 என்பதில் இரண்டு முக்கிய என்ஸைம்கள் உண்டு. அவற்றில் ஒன்று ரிபோஃப்ளேவின். மற்றொன்று நியாஸின்.
VitaminB பிரிவைச் சேர்ந்த மற்றவை குறித்தும் கொஞ்சம் தெரிந்து கொள்ளலாமே.
Vitamin B1 என்பது தியாமின் என்ற வேதியல் பொருளைக் குறிக்கிறது. மூளை, நரம்புகள், தசைகள் மற்றும் மூளை சரியாக வேலை செய்ய Vitamin B தேவை.
Vitamin B சத்தை எந்த வகை உணவுப்பொருள்களின் மூலம் பெறலாம்?
ராகி, சோளம், முட்டை, பன்றிக்கறி, முந்திரி போன்ற பருப்புகள் ஆகியவற்றில் Vitamin B1 இருக்கிறது.
உடலில் Vitamin B1 குறைவு ஏற்பட்டால் என்னவாகும்?
பெரிபெரி என்ற ஆரோக்கியக் குறைவு தோன்றும். தொடக்கத்தில் பசியின்மை, களைப்பு, தசைகளில் வலி ஆகியவை இருக்கும். கவனிக்காமல் விட்டால் கைகால்களில் தாங்கமுடியாத வலி, இதயத்தின் பணியில் தடுமாற்றம் ஆகியவை ஏற்படலாம்.
அதிகஅளவில் Vitamin B1 ஐ உட்கொண்டால் ஆபத்தா?
இல்லை. அதேபோல் ரிபோஃப்ளேவினை அதிகமாக உட்கொண்டாலும் உடலுக்குப் பாதகம் எதுவும் ஏற்படுவதில்லை.
Tuesday, 29 December 2015
தமிழக வரலாறு
தமிழ்நாடு ஏறத்தாழ 6000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான வரலாற்றைக் கொண்டுள்ளது. இங்கே வாழுகின்ற திராவிட இன மக்களின் தோற்றம் (origin) தொடர்பாகப் பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. சிலர், ஒரு காலத்தில் இந்தியா முழுதும் பரவி வாழ்ந்திருத்த திராவிடர், சிந்து வெளி நாகரீகத்துக்கு உரியவர்களுள் ஒரு பிரிவினராக இருந்தனர் என்று கருதுகிறார்கள். இவ்வினத்தவருடைய தெற்கு நோக்கிய பெயர்வு, ஆரிய ஆக்கிரமிப்புக் கொள்கையுடன் தொடர்பு படுத்தப் படுகின்றது. இக் கொள்கைப்படி, வடக்கிலிருந்து வந்த ஆரிய ஆக்கிரமிப்பு திராவிடர்களை இன்றைய இந்திய மாநிலங்களான தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம், கேரளா ஆகியவை அடங்கிய தென்னிந்தியாவுக்குள் ஒடுக்கியதாகக் கருதப்படுகின்றது. வரலாற்று உண்மைகள் எவ்வாறு இருப்பினும், தற்காலத் தமிழ் மக்களுடைய அடையாளம் மேற்கண்ட கொள்கைகளின் அடிப்படையிலேயே வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது எனலாம்.
இன்றைய தமிழ்நாட்டையும் உள்ளடக்கிப் பரந்திருந்த பண்டைய திராவிட நாடு, பல்வேறு நாடுகளாகப் பிரிந்திருந்தது. இவற்றைக் காலத்துக்குக் காலம் பல அரச வம்சங்கள் ஆண்டுவந்தன. இவற்றுள் முக்கியமாகக் குறிப்பிடத்தக்கவர்கள், பாண்டியர், சேரர், சோழர், பல்லவர், சாளுக்கியர், விஜய நகரத்தார், நாயக்கர் என்போராவர்.
பாண்டியர்களுடைய காலம் கி.மு ஆறாம் நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே தொடங்குவதாகச் சொல்லப்படுகின்றது. மதுரை முதற் பாண்டிய மன்னனான குலசேகர பாண்டியனால் கட்டப்பட்டதாகச் சொல்லப்படுகின்றது. மேலே குறிப்பிடப்பட்ட மதுரை தற்கால மதுரைக்குத் தெற்கே அமைந்திருந்து பிற்காலத்தில் ஏற்பட்ட கடல்கோளினால் முற்றாக அழிந்து போனதாகப் பழந் தமிழ் இலக்கியங்கள் வாயிலாக அறியக்கிடக்கின்றது. பாண்டிய நாடு கல்வியிலும், வணிகத்திலும் சிறந்து விளங்கியது. இவர்கள் அக்காலத்தின் பேரரசுகளாகிய கிரேக்க, ரோமப் பேரரசுகளுடன் வணிகத் தொடர்பு கொண்டிருந்தனர். அவ்வப்போது பல்லவர்களாலும், சோழர்களாலும் அடக்கப் பட்டிருந்தாலும், தமிழ்நாட்டின் பலம் மிக்க அரச வம்சங்களில் ஒன்றாகப் பாண்டியர் விளங்கினர்.
கி.பி 1 முதல் 4 ஆம் நூற்றாண்டு வரை
முற்காலச் சோழர் கி.பி முதலாம் நூற்றாண்டு தொடக்கம் நான்காம் நூற்றாண்டு வரை தமிழகத்தில் ஆட்சி செலுத்தினர். இவர்களுள் மிகப் புகழ் பெற்றவனாக கரிகால் சோழன் விளங்கினான். தற்காலத் தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதிகளில் செல்வாக்குச் செலுத்திய இவர்கள், யுத்த நடவடிக்கைகளில் சிறந்து விளங்கினர்..
கி.பி 4 முதல் 9 ஆம் நூற்றாண்டு வரை
கி.பி நான்காம் நூற்றாண்டின் பிற்பாதியில், சிறந்த கோவில்களை அமைத்த பல்லவர்கள் முன்னணிக்கு வந்தனர். இவர்கள் தென்னிந்தியாவில் 400 ஆண்டுகள் ஆதிக்கம் செலுத்தினர். காஞ்சிபுரத்தைத் தலை நகரமாகக் கொண்டு தமிழ் நாட்டின் பெரும்பகுதியைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர். ஆறாம் நூற்றாண்டில் பல்லவர்கள் சோழரைத் தோற்கடித்தனர். இவர்கள் செல்வாக்கு இலங்கை வரை பரவியிருந்ததாகக் கருதப்படுகின்றது. முதலாம் மகேந்திரவர்மனும், அவனுடைய மகனான நரசிம்மவர்மனும் பல்லவர்களுள் சிறந்து விளங்கிய அரசர்களாவர். திராவிடக் கட்டிடக்கலை பல்லவர் காலத்திலேயே உருப்பெற்றது. இறுதிப் பல்லவ மன்னன் அபராஜிதன் ஆவான். இவன் கி.பி ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் ஆதித்த சோழனால் தோற்கடிக்கப்பட்டதுடன் பல்லவராட்சி தமிழ் நாட்டில் முடிவுக்கு வந்தது. இக்காலகட்ட பகுதியில் (கி.பி. 300- கி.பி. 600) பெளத்தம் தமிழகத்தில் மிகவும் செல்வாக்கோடு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
கி.பி 9 முதல் 13 ஆம் நூற்றாண்டு வரை
கி.பி ஒன்பதாம் நூற்றாண்டில் சோழர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தனர். இராஜராஜ சோழன் மற்றும் அவனது மகனான இராஜேந்திர சோழன் ஆகியோரது காலத்தில் சோழர், தென்னிந்தியாவில் ஒரு பலம் மிக்க சக்தியாக உருவெடுத்தனர். இவர்களுடைய பேரரசு, மத்திய இந்தியா, ஒரிஸ்ஸா, மற்றும் வங்காளத்தின் சில பகுதிகள்வரைகூடப் பரவியிருந்தது. இராசராச சோழன் கிழக்கிலிருந்த சாளுக்கிய அரசர்கள் மற்றும் சேர மன்னர்களை வீழ்த்தினான். அத்துடன் பாண்டிய அரசிடமிருந்து இலங்கையின் சில பகுதிகளையும் கைப்பற்றினான். இராசேந்திர சோழன் மேலும் முன்னேறி அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகள், இலட்சத்தீவுகள், சுமத்ரா, ஜாவா, மலேயா மற்றும் பெகு தீவுகளையும் தன் கப்பற்படையைக் கொண்டு கைப்பற்றினான். அத்துடன் தற்போதைய பீகார் மற்றும் வங்காளப் பகுதிகளை ஆண்டு வந்த மகிபாலனையும் வீழ்த்தினான். தன் வெற்றியைக் கொண்டாடும் வகையில் கங்கை கொண்ட சோழபுரம் எனும் தலைநகரை உருவாக்கினான். பதிமூன்றாம் நூற்றாண்டு வாக்கில் சோழர்களின் ஆதிக்கம் குறைந்தது.
14 ஆம் நூற்றாண்டு
14ஆம் நூற்றாண்டில் சோழர்களின் வீழ்ச்சிக்குப் பிறகு பாண்டியர்கள் மீண்டும் எழுச்சி பெற்றனர். ஆயினும் அந்த எழுச்சி நீண்ட காலம் நீடிக்கவில்லை. 1316ல் வடக்கிலிருந்து படையெடுத்து வந்த கில்ஜி ஆட்சியாளர்கள், மதுரையை முற்றுகையிட்டு சூறையாடினர். இஸ்லாமியர்களின் படையெடுப்பு சோழர்களையும் பாண்டியர்களையும் பலவீனப்படுத்தி இஸ்லாமிய "பாமினி" ஆட்சிக்கு வித்திட்டது. இஸ்லாமியப் படையெடுப்புக்கு பதிலடி தரும் வண்ணம் பல்வேறு சிற்றரசுகள் சேர்ந்து விஜயநகர பேரரசைத் தோற்றுவித்தன. இப்பேரரசின் பல்வேறு பகுதிகள் பிரிக்கப்பட்டு அவற்றை மேற்பார்வையிட நாயக்கர்கள் என்னும் ஆட்சியாளர்கள் நியமிக்கப் பட்டனர். ஹம்பியை தலை நகராகக் கொண்டிருந்த விஜய நகரப் பேரரசு செல்வச் செழிப்போடும் அமைதியுடனும் திகழ்ந்தது.
ஆனால், 1564 ஆம் ஆண்டு வாக்கில் நடந்த தலிகோட்டா போரில் தக்காணப் பீடபூமியைச் சேர்ந்த சுல்தான்களால் விஜயநகர ஆட்சியாளர்கள் தோற்கடிக்கப்பட்டு, அவர்கள் ஆட்சிக்கடங்கிய பகுதிகள் யாவும் நாயக்கர்களிடையே பிரித்தளிக்கப்பட்டது. நாயக்கர் ஆட்சிக் காலத்திலும் தமிழ்நாடு அமைதியுடனும் செழிப்புடனும் விளங்கியது.தஞ்சை மற்றும் மதுரையைச் சேர்ந்த நாயக்கர்கள் புகழ் பெற்று விளங்கியதோடு பழங்கால கோயில்களை புதுப்பிக்கவும் செய்தனர்.
இன்றைய கேரளாவும் மலபாரை ஒட்டிய பகுதிகளும் சேர நாட்டின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தது.கடலை ஒட்டியிருந்த சேரர்களின் ஆட்சிப்பகுதி ரோமானியர்களுடனான வாணிபத்திற்கு ஏதுவாக இருந்தது. ஆங்கிலேய படையெடுப்பு நிகழும் வரை சேரர்களின் ஆளுகைக்கு உட்பட்டு இருந்த சிறிய நிலப்பகுதி பெரும்பாலும் வேறெவருடைய படையெடுப்பிற்கும் ஆளாகாமல் இருந்தது.
17 ஆம் நூற்றாண்டு
1639 இல் ஆங்கிலேயர்கள் மதராஸில் (தற்பொழுது சென்னை என்று அழைக்கப்படுகிறது) கிழக்கிந்தியக் கம்பெனியை நிறுவிய பிறகு தமிழ் நாட்டின் அரசியல் வரலாற்றில் புதிய பகுதி தொடங்கியது. தமிழ் நாட்டு சிற்றரசர்களிடையே நிலவி வந்த சச்சரவுகளைப் பயன்படுத்தி அவர்களைப் பிரித்தாண்டு , அவர்களின் மேல் தங்கள் அதிகாரத்தை செலுத்தத் தொடங்கினர். தமிழ்நாடும் அதைத் தொடர்ந்து தென்னிந்தியாவும் மெல்ல மெல்ல ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. ஆங்கிலேயர் அதிகாரத்தை தம் வசப்படுத்திய இந்த காலக்கட்டத்தில் அவர்களை எதிர்த்துப் போராடிய தமிழ் ஆட்சியாளர்களும் கணிசமானோர் இருந்தனர். வீர பாண்டிய கட்டபொம்மன், மருது பாண்டியர், பூலித்தேவன் ஆகியோர் அவர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர்.
20 ஆம் நூற்றாண்டு
1947இல் இந்தியா விடுதலை அடைந்தபோது, மதராஸ் மாகாணம் மதராஸ் மாநிலம் ஆனது. தமிழ்நாடு, கடலோர ஆந்திரப் பகுதிகள், மேற்கு கேரளம், தென் மேற்கு கர்நாடக கடற்கரைப் பகுதிகள் ஆகியவை மதராஸ் மாநிலத்தின் கீழ் வந்தது. 1953இல் மதராஸ் மாநிலத்தின் தெலுங்கு பேசும் மக்கள் உள்ள வட பகுதிகள் ஆந்திர மாநிலமாகவும் தமிழ் பேசும் தென் பகுதிகள் மதராஸ் மாநிலமாகவும் மேலும் பிரிக்கப்பட்டது. 1956இல் மாநில எல்லைகளை மறு வரையறை செய்யும் சட்ட திருத்தத்தின் மூலம் மதராஸ் மாநிலத்தின் மேற்கு கடற்கரை பகுதிகள் கேரளாவிற்கும் கர்னாடகத்திற்கும் இடையே பிரித்தளிக்கப்பட்டது. 1968இல், மதராஸ் மாநிலத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
Posted in: http://tamilpadaipugal.blogspot.in/2011/07/blog-post_2493.html
தமிழரின் கணக்கதிகாரம்
ஓர் பூசனிக்காயை உடைக்காமலே அதில் எத்தனை விதை இருக்கிறது என்பதை உங்களால்கூற முடியுமா ?
ஒரு தமிழ் செய்யுளின் வரிகள்
கீற்றெண்ணி முத்தித்துத் கீழாறினால் மாறி
வேற்றையஞ்சு தன்னில் மிகப்பெருக்கிப் பார்த்ததிலே
பாதி தள்ளி மூன்றிற் பகிர விதையாகும்
பூசனிக்காய் தோறும் புகல்
ஒரு பூசனிக்காயின் கீற்றுகளை எண்ணிக்கொண்டு அதை மூன்று, ஆறு , ஐந்து, இவற்றால் பெருக்கி வரும் விடையை பாதியாக்கி மீண்டும் மூன்றால் பெருக்கினால் வருவது விதைகளின் எண்ணிக்கையாகும்
ஒரு பூசனியில் உள்ள கீற்றுகளின் எண்ணிக்கையை "X" என்க.
பாடலின் படி அதை 3,6,5 ஆகியவற்றால் பெருக்க கிடைப்பது "90X" ஆகும்.
அதை பாதியாக்கினால் கிடைப்பது "45X" ஆகும்
அதை மீண்டும் மூன்றால் பெருக்க கிடைப்பது "135X" ஆகும்
ஒரு பூசனியில் உள்ள கீற்றுகளின் எண்ணிகையை X=6 ஆறு எனக்கொண்டால் (135 * 6 = 810) 135 ஐ ஆறால் பெருக்க வேண்டும் கிடைப்பது 810 ஆகும் எனவே பூசனியில் உள்ள விதைகளின் எண்ணிக்கை 810 ஆகும்
அடுத்த முறை பூசனி வாங்கும் போது சரிபாருங்கள்.
உப்பில்லாப் பண்டம்தான் உடல் ஆரோக்கியத்தைத் தரும்
"உப்பு கொஞ்சம் குறைச்சலா இருக்கு. இன்னும் கொஞ்சம் போடுங்க!" என்று அனைவருமே கூறுவார்கள். உப்பு சேர்த்ததும் சப்புக் கொட்டிச் சாப்பிடுவார்கள்!
காலங்காலமாய் மனிதர்களின் நாக்கில் கம்பீரமாய் அமர்ந்துவிட்ட உப்புதான்... இப்போது, அதே மனிதர்களின் ஆரோக்கியத்திற்கு எமனாகவும் மாறியிருக்கிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
அமெரிக்கா, ஜப்பான், சிங்கப்பூர் உள்ளிட்ட வளர்ந்த நாடுகள், தற்போது மக்களிடம் உப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. உலக மருத்துவ பத்திரிகைகள் பலவும் உப்புக்கு எதிரான எச்சரிக்கைக் கட்டுரைகளை எழுதத் தொடங்கியுள்ளன.
‘உலகம் முழுவதும் மாரடைப்பால் நிகழும் மரண எண்ணிக்கைக்கும், சிறுநீரகப்பழுது, ரத்த அழுத்தம், சர்க்கரை தொடர்பான நோய்கள் அதிகரித்து வருவதற்கும் முக்கியக் காரணம், உப்புத்தான்’ என்று மருத்துவர்கள் அடித்துச்சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள்.
‘‘இந்தியர்களிடம் உப்பு பற்றிய விழிப்புணர்வு இன்னமும் ஏற்படவேயில்லை’’ என்று வருத்தத்தோடு கூறும் பிரபல நெப்ரோலஜிஸ்ட் மருத்துவர் பி.ரவிச்சந்திரன், உப்பு பற்றிய விழிப்புணர்வு பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி வருகிறார். அவரைச் சந்தித்தோம். ‘மனித ஆரோக்கியத்திற்கு எதிராக உப்பு எவ்வாறு செயல்படுகிறது’ என்பதை விரிவாகவே விளக்கினார்.
‘‘ஆதிகால மனிதர்கள் கடல் உப்பைப் பயன்படுத்தத் தெரியாதவர்கள். ஏன், இன்னமும் விலங்குகளுக்குத் தெரியாதது, இந்த உப்பு. உலகத்திலேயே முதன் முதலில் எகிப்தியர்கள்தான் கடல் நீரிலிருந்து சோடியம் உப்பைப் பிரித்தெடுத்தார்கள். அவர்கள் மொழியில் (Natron) நேட்ரான் என்று பெயர் வைத்தார்கள். இறந்த உடல்களை பதப்படுத்துவதற்கு, அதாவது ‘மம்மி’க்களைப் பாடம் செய்ய உப்பைப் பயன்படுத்தினார்கள். ஆதிகாலத்தில் வேட்டையாடுதல், போர்செய்தல் என்று வாழ்ந்த மனிதர்களுக்கு சோடியம் உப்பின் அறிமுகம், ஒரு புதிய அனுபவத்தைத் தந்தது. அப்புறம், அது தேவையாகவும் மாறிவிட்டது.
உடல் உழைப்பைப் பிரதானமாகக் கொண்ட அன்றைய வாழ்க்கை முறையால், உடலிலிருந்து நிறைய வியர்வை வெளியேறியது. இதனால் ரத்தத்தில் இருந்த சோடியம் உப்பின் சமநிலை அடிக்கடிக் குறைந்தது. போர்க்களத்தில் உடல் சோர்ந்து விழுவார்கள், வீரர்கள். அந்தச் சமயங்களில் அவர்கள் கையில் உப்புக்கட்டிகள்தான் கொடுக்கப்பட்டன. உப்பை நாக்கில் வைத்த உடனேயே, அவர்கள் பழையபடி உற்சாகம் பெற்று எழுவார்கள். இதனால் அந்தக் காலங்களில் உப்பு, தங்கத்தைவிட உயர்ந்ததாகக் கருதப்பட்டது. இப்படி, பழங்காலத்தில் பிரமாண்டமான வரவேற்போடு மனித வாழ்க்கையில் நுழைந்த சோடியம் உப்புதான், இப்போது அதே மனித இனத்திற்கு விஷமாகவும் மாறியிருக்கிறது!’’ என்று நிறுத்தியவர், ‘எப்படி ஏற்பட்டது இந்த மாற்றம்? என்பதை சற்று விரிவாகவே கூற ஆரம்பித்தார்...
‘‘மனித உடலுக்கு மிக அடிப்படையாக, நான்கு வித உப்புகள் தேவை. அவை பொட்டாசியம், மெக்னீசியம், கால்சியம், சோடியம் ஆகும். இதில் பொட்டாசியத்தையோ, மெக்னீசியத்தையோ, கால்சியத்தையோ உப்பு வடிவில் பிரித்தெடுத்து உணவில் சேர்த்துக்கொள்ளாத நாம், சோடியம் உப்பை மட்டும் கடல் நீரிலிருந்து பிரித்துப் பயன்படுத்துகிறோம். சுவைக்காகவும், உணவுப் பொருள்களைப் பதப்படுத்தப் படுவதற்காகவும் அன்றாடச் சாப்பாட்டில் அதிகமாக சேர்க்கப் பழகினோம்.
விஞ்ஞான வளர்ச்சியால் நாளுக்குநாள் மனித வாழ்க்கையில் உடல் உழைப்பு வெகுவாகக் குறைந்து வருகிறது. எப்போதும் உட்கார்ந்த நிலையிலும், ஏ.சி. அறையிலும் வேலை என்பது ஒரு பிரிவினரின் வாழ்க்கையாக மாறியுள்ளது. ஒரு மனிதனின் ரத்தத்தில் மொத்தம் இருநூறு கிராம்தான் சோடியம் உப்பு இருக்க வேண்டும். அதற்குமேல் ரத்தத்தில் சேரும் உப்பு... வியர்வை, சிறுநீர் மற்றும் மலம் கழிப்பதின் மூலம் உடலில் இருந்து வெளியேறுகிறது. ஒரு லிட்டர் சிறுநீரில் இரண்டு கிராம் உப்பை வெளியேற்றுகிறது சிறுநீரகம்.
உதாரணமாக, பத்து கிராம் உப்பை வெளியேற்ற ஐந்து லிட்டர் சிறுநீர் கழிக்க வேண்டும். (இது தான் ‘உப்பைத்தின்றவன் தண்ணீர் குடிப்பான்’ என்ற பழமொழியின் அர்த்தம்)உடலில் குறைபாடு இருக்கும் பட்சத்தில் சிறுநீரகம், சோடியம் உப்பை வெளியேற்றுவதற்குப் பதிலாக, உடல் பலத்தைத் தரும் மெக்னீசியத்தையும், எலும்பு உறுதியைத்தரும் கால்சியத்தையும் வெளியேற்றப் பழகிவிடும். உடலில் தேவைக்கு அதிகமாக சோடியம் உப்பு தங்க ஆரம்பித்தால்... உடல் பருமனாகும். கால்சியம் வெளியேறுவதால் மூட்டுவலி, முதுகுவலி வரும். மெக்னீசியம் வெளியேறுவதால் அசதி வரும். முக்கியமாக, சிற்றின்ப உறவு தோல்வியடையும். சிலருக்கு உயர் ரத்த அழுத்தம் ஏற்படும். இதனால் முக்கிய நரம்புகளில் வெடிப்பு ஏற்பட்டு ரத்தக் கசிவும் உருவாகலாம். மாரடைப்பு, சிறுநீரகப் பழுது போன்ற உயிர் ஆபத்துகளையும் சந்திக்க நேரிடும். அதேபோல், சர்க்கரை வியாதிக்கும் பெண்களுக்கான மாதவிடாய் பிரச்னைகளுக்கும் அதிக உப்புதான் காரணமாக இருக்கிறது!’’ என்கிறார், அவர்.
கடல் உப்புக்கு மாற்றாக இந்திய ஆயுர்வேத மருத்துவத்தில் மலை உப்பைப் பயன்படுத்துகிறார்கள். இது மலைப்பிரதேசங்களில் பாறைவடிவில் கிடைக்கக் கூடியது. இதில் சோடியம் மிக மிகக் குறைவாகவும், சல்ஃபர், மெக்னீசியம், கால்சியம் தாதுக்கள் அதிகமாகவும் இருக்கும். இந்த உப்பை வட இந்தியாவில் பணக்காரர்கள்தான் பயன்படுத்துகிறார்கள். காரணம், அத்தனை விலை.
அமெரிக்காவில் தயாரிக்கப்படும் அனைத்து உணவுப் பொருள்கள் மற்றும் பால் இவற்றில் சேர்க்கப்படும் சோடியத்தின் அளவை, அதன் அட்டையில் அச்சிட வேண்டும் என்கிற சட்டம் கடுமையாக அமல்படுத்தப்படுகிறது. சோடியம் இல்லாத பொட்டாசியம் உப்புத்தூவிய உருளைக்கிழங்கு Chipsம், அங்கே விற்பனையில் இருக்கிறது. அதேபோல் கடலுக்குள் இருக்கும் பவளப்பாறைகளில் இருந்து கிடைக்கும் மெக்னீசியம், புரோட்டீன்ஸ் அடங்கிய கோரல் உப்பு (coralsalt) ஜப்பான், அமெரிக்காவில் பிரபலம்.
ஆனால், நம் நாட்டிலோ சில பாக்கெட் பால்களில் கூட 0.3 கிராம் வரை சோடியம் உப்பு சேர்க்கப்படுகிறது. பல வீடுகளில் பாக்கெட் பாலில் போடப்படும் டீ, காபி கூட மெல்லிய கரிப்புச்சுவையோடு இருப்பதற்கு இதுதான் காரணம். கடைகளில் விற்பனை செய்யப்படும் ஸ்வீட்ஸ், மற்றும் சாக்லேட்டுகளிலும் சோடியம் சேர்க்கப்படுகிறது. ஆனால், அதன் அளவை வெளிநாடுகளில் உள்ளதுபோல இங்கே நுகர்வோருக்குத் தெரிவிப்பதில்லை.
பிரபலமான குளிர்பானங்கள் அனைத்திலும் சோடியம் சல்பேட் சேருகிறது. கருவாடு, ஊறுகாய், அப்பளம் மற்றும் ஃபாஸ்ட்ஃபுட் வகைகளில் கொஞ்சம் அதிகமாக சோடியம் இருக்கிறது. இவற்றைப் பயன்படுத்தும் மனிதனின் உடலுக்குள் ஒவ்வொரு நாளும் பத்திலிருந்து முப்பது கிராம் வரை சோடியம் உப்பு தானாகவே நுழைந்து விடுகிறது, என்பதுதான் அதிர்ச்சிக்குரிய விஷயம்.
ஆனால், ‘பெரும் உடல் உழைப்பு இல்லாத இன்றைய மனிதனுக்கு அன்றாடத் தேவைக்காக வெறும் இரண்டு கிராம் உப்பே போதும்’ என்கிறார்கள் மருத்துவர்கள். ஆனால், அவன் சுவையாகச் சாப்பிடும் பொருள்களின் மூலம் இரண்டு கிராமைவிட அதிகமாகச் சேருகிறது. இப்படி உப்பின் அளவு கூடுவதினால், ஆண்மை பலம் மற்றும் கருத்தரிக்கும் வாய்ப்புகள்கூட குறைந்துவிடுகின்றனவாம்.
இதுதொடர்பாக, பதிலளிக்கும் டாக்டர் ரவிச்சந்திரன் ‘‘சோடியம் உயிர்த்தன்மையை அழிக்கக் கூடியது, மனித விந்தில் மெக்னீசியம், கால்சியம்தான் மிகுதியாக இருக்கிறது. உடலில் சோடியம் கூடும்போது... உயிர் அணுக்களை அது பாதிக்கும் என்பது உண்மையே. அனைத்துத் தாவர விதைகளிலும் மெக்னீசியம் அதிகமாக இருக்கிறது. முந்திரி, பாதாம், பிஸ்தா போன்ற தாவர விதைகளை அரைத்துத்தான் ஆண்மை லேகியம் செய்து விற்கிறார்கள். அதன் ரகசியம் மெக்னீசியம்தான். விதைகளில் அதிக சக்தி கொண்டது முருங்கையும், பூசணியும்! வெற்றிலை என்பது மெக்னீசியம். அதில் தடவப்படும் சுண்ணாம்பில் கால்சியம். அதனால்தான் தாம்பூலம் என்பது இல்லற வாழ்க்கையோடு தொடர்புபடுத்தப்பட்டது!’’ என்றார்.
அயோடின் கலந்த உப்பு பற்றிக் கருத்து தெரிவிக்கும் அவர், ‘‘அதிக உப்பு சேர்த்துக்கொண்டால், அதிக அயோடின் சத்துக் கிடைக்கும் என சிலர் தவறாகப் புரிந்து கொள்கிறார்கள். அயோடின் என்பது இரண்டு பக்கக் கத்தி போன்றது. அது குறைந்தாலும் பிரச்னை, கூடினாலும் பிரச்னை. சில விதமான கேன்சர், தைராய்டு பிரச்னைகளுக்குக் கூடுதல் அயோடினே காரணமாக உள்ளது என்பதை புரிந்து கொள்ளவேண்டும்.
அத்துடன், நமது உடலுக்குள் நுழையும் சோடியத்தின் அளவைக் கண்காணிக்கப் பழகிக்கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு நாக்கில் சுவை மொட்டுக்கள் நன்கு செயல்படும் என்பதால்.... சிறுவயது முதலேயே குறைந்த உப்புச் சுவையே அவர்களுக்குப் பழக்க வேண்டும். கூடியவரை பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்க்க வேண்டும் அல்லது அதன் சோடியத்தின் அளவைக் கவனித்து சேர்த்துக்கொள்ள வேண்டும். கசப்புச் சுவை உள்ள காய்கறிகளான பாகற்காய், கோவைக்காய், வாழைத்தண்டு, பச்சை நிறக் கீரைகள், மற்றும் மோர், இளநீர் போன்றவற்றைத் தொடர்ந்து உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் மெக்னீசியம், பொட்டாசியம் கால்சியம் போன்ற உப்புக்கள் நம் உடலில் இயற்கையாகவே சேர்ந்து விடும்.
அதோடு, அன்றாடம் சில உடற்பயிற்சிகளைச் செய்வதன் மூலம் நமது வியர்வைச் சுரப்பிகளுக்கும் கொஞ்சம் வேலை கொடுக்கவும் வேண்டும்!’’ என்கிறார்.
இது மட்டுமல்ல, பெரிய பெரிய கம்பெனிகளின் விளம்பரங்களைப் பார்த்து, அந்த உப்புகளை வாங்கிப் பயன்படுத்துவதைவிட, கடைகளில் கிடைக்கும் சாதாரண கல் உப்பை வாங்கிப் பயன்படுத்துவதும் நல்லது. காரணம், பாக்கெட் உப்புகளில் 99 சதவிகிதம் வரை சோடியம் இருக்கிறது. கல் உப்பில் 40 சதவிகிதம் வரைதான் சோடியம் இருக்கிறது என்றும் சொல்கிறார்கள்.
ஆகமொத்தத்தில் ‘உப்பில்லாப் பண்டம் குப்பையிலே’ என்பது பழமொழி. ‘உப்பில்லாப் பண்டம்தான் உடல் ஆரோக்கியத்தைத் தரும்’ என்பது புதுமொழியாக உருவாகி வருகிறது.
http://ta.indli.com/site/tamilpadaipugal.blogspot.com

Tuesday, 22 December 2015
மாங்கொட்டை

மாங்கனியின் வித்து மருத்துப் பண்புள்ளது அதன் மருத்துவப் பாவம் பற்றி தேரையார் பின்வருமாறு வெண்பா பாடியருளியுள்ளார்.
“பேசுமோ சீதப் பெருக்கும் மூலக்கடுப்பும்
கோரிக் கடுப்பும் வீசுமோ மூலமுறுவின்
சொதிப்பு மாசுவுடைய பூங் கொட்டையை
காணில்வாது”
1. “பேசுமோ சீதப் பெருக்கும்” : இது பெண்களுக்கு ஏற்படும் மாதாந்த உதிரப் போக்கு அதிகரித்து அதிதரித்து வெளியேறு வதால் உடல் பலமினந்து போவதை தடுக்க வல்லது மாங் கொட்டை.
2. “மூலக்கடுப்பும் கோரிக் கடுப்பும் வீசுமோ மூலமுறுவின் சொதிப்பு” : தற்காலத்தில் வேலைப் பழுக்களின் மத்தியில் தொடச்சியாக ஓர் இடத்தில் உட்காந்திருந்து வேலை செய்வதனால் மூலம் தொடர்சியான வெப்பமேற்றலுக்கு உட்பட்டு ஆசனவாயிலில் கொதிப்பும் வெப்பமும் கானப்படும். இதனால் இரத்தக்கசிவு எப்போதும் இருக்கும். இதனால் உண்டாகும் மூலக்கடுப்பு, சோரிக்கடுப்பு, மூலக்கொதிப்பு போன்ற மூலநோய்களுக்கு அருமருந்து மாங்கொட்டை. பொதுவாக தற்கால இருக்கைகள் எல்லாம் “ரெற்சின்” போடப்பட்ட கற்றிறேட்டம் இல்லாத இருக்கைகளே பயன்படுத்தப்படுகின்றது. அக்காலத்தில் பிரப்பம் பிரம்பால் பின்னப்பட்ட பின்னல் கதிரை இருக்கைகளே பயன்படுத்தப்பட்டது. இக்கதிரைகள் காற்றோட்டம் உள்ளதாக சுவாத்தியமான இருக்கைகளாக இருந்தது. தற்போது பின்னுவதற்கான பிரம்பு கூட“பிளாஸ்டிக்” பிரம்பாகி விட்டது. அதுவே இவை மூலநோய்க்கு காரணமாகி விட்டது. இன் நோய்க்கு அருமருந்து மாங்கொட்டை ஆகும்.
3. “மாசுவுடைய பூங் கொட்டையை காணில்வாது” : மா பூக்கின்ற போது அதன் தேனை அருந்த வரும் பூச்சிகள் பூவினுள் சில தங்கி விடும் இவை பின்னர் பெருத்து புழுவாக மாறி பூக்கொட்டையை அரிது வெளிவரும். அப்போது கொட்டை அரிக்கப்பட்டு பழுதடைந்து விடும். அவ் வகையான கொட்டைகளை நீக்கிப் பயன்படுத்து வேண்டும். எனக் குறிப்பிட்டுள்ளர் வெண்பாவில்
பயன்பாடுத்தும் முறைகள்:
1. புளிக் கொழம்பு : நன்றாக சுத்தம் செய்யப்பட்ட மாங்கொட்டையை பிளந்து கடினமான தோலை நீக்கி அதினுள் உள்ள பருப்பை எடுத்து சிறிது சிறிதாக நறுக்கி அதை புளிக் கொழப்பு செய்து சாப்பிடலாம்.
இன்னுமோர் முறையில் அதனுடன் தோல் நீக்கி ஏழுமுறை நன்றாகச் சுத்தம் செய்த சோற்றுக் கற்றாலை என்னும் குமரியின் சோற்றையும் சிறிது சிறிதாக நறுக்கிய மாங் கொட்டை பருப்புடன் சேர்த்து புளிக் கொழம்பு செய்து சாப்பிடலாம்.
2. சூரணம் : மாங்கொட்டையை பிளந்தெடுத்த பருப்பை வெயிலில் உலர்த்தி பொடி செய்து அதை சூரணமாக வைத்துக் கொண்டு காலை மாலை உணவருந்த அரைமணித்தியாலத்துக்கு முன் அரைத்தேக்கரண்டி அளவு தேனில் குளைத்து அல்லது சூரணத்தை மட்டும் தன்னீரில் அருந்தலாம். இவ்வாறு உட்கொள்ள கற்பப்பைணில் உருவாகும் உத்ரப்போக்கான “மெனோஐPறியா” குணமாகும். அத்துடன் ஆசனவாயில் உதிரப்போக்கும் குணமாகும்.
Subscribe to:
Posts (Atom)