Tuesday, 23 June 2015

பழமொழி

ப்படி இருந்த பழமொழி இப்படி ஆயிடுச்சே.
இது சரியா ?
"கல்லைக் கண்டால் நாயைக் காணோம்!
நாயைக் கண்டால் கல்லைக் காணோம்!!"
சரியானா பழமொழி :
"கல்லைக் கண்டால் நாயகனைக் காணோம்,
நாயகனைக் கண்டால் கல்லைக் காணோம்".
விளக்கம் :
இங்கு நாயகன் என்பது கடவுளை குறிக்கிறது.
கல்லால் செதுக்கப்பட்ட ஒரு கடவுள் சிலையை நீங்கள் பார்க்கிறீர்கள். அதை கல்லாகப் பார்க்கும் போது அங்கே கடவுளை பார்க்கமாட்டீர்கள். அதையே நீங்கள் கடவுளாக பார்க்கும்போது கல்லை பார்க்கமாட்டீர்கள்.
இதில் நாயகன் என்ற வார்த்தை மறுவியே நாய் என்றாகிவிட்டது.
கடவுளை நாயாக்கிய பெருமை தமிழர்களையே சேரும்.
__________________________________
பழமொழிகள்:
1. அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்வான் - தீர்ப்பு சொல்லும் போது அந்த இடத்தில அரசன் இல்லை ...தெய்வம் நின்று தண்டனை தருவதாக எண்ண வேண்டும் ..
2. கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை - கழு என்ற புல்லில் தான் அந்த காலத்தில் தூங்கும் பாய் செய்வார்களாம். அதன் வாசனை கற்பூரம்pola இருக்குமாம் ( கழு தைக்க தெரியுமாம் கற்பூர வாசனை )
3. பொம்பள சிரிச்சா போச்சு போகியலை விரிச்சா போச்சு -- பெண் வயதுக்கு வந்ததும் வெட்கப்பட்டு சிரித்தால் அவள் கல்யாணத்துக்கு தயார் என்றும் .. சுருண்டு இருக்கும் புகை இலை விறிஞ்சதும் விற்க தயாராகிவிடும் என்றும் அர்த்தம்
4. ஆடி காத்துல அம்மியும் நகரும் -ஆடி காற்றில் அம்மையும் நகரும் ( கோடை காலத்துல பரவும் அம்மை போன்ற நோய்கள் ஆடிஇன் இதமான காற்றில் அந்த ஊரில் இருந்து விலகும்.
__________________________________
மற்றும் சில பழமொழிகள்:
ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணத்த பண்ணு - தவறு.
ஆயிரம் பேரிடம் போய் சொல்லி ஒரு கல்யாணத்த பண்ணு - சரி.
படிச்சவன் பாட்டை கெடுத்தான், எழுதுனவன் ஏட்டை கெடுத்தான் - தவறு.
படிச்சவன் பாட்டை கொடுத்தான் , எழுதுனவன் ஏட்டை கொடுத்தான் - சரி.
ஆயிரம் பேரை கொன்றவன் அரை வைத்தியன். - தவறு.
ஆயிரம் வேரை (மூலிகை வேரை ) கொன்றவன் அரை வைத்தியன் - சரி.
நல்ல மாட்டுக்கு ஒரு சூடு - தவறு.
நல்ல மாட்டுக்கு ஒரு சுவடு - சரி.
(சந்தையில் மாட்டை வாங்கும்போது அது பதிக்கும் தடம் சுவடு... அழுத்தமான சுவட்டை பதிக்கும் மாடே அதிக பலம் வாய்ந்தது...ஒரு சுவட்டை பார்த்தாலே மாட்டின் பலம் புலனாகு்.)
அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் கொடை புடிப்பான் - தவறு.
அர்பணித்து வாழ்ந்து வந்தால் அர்த்த ராத்திரியிலும் கொடை கொடுப்பான். - சரி
நம் முன்னோர்கள் நம் நல்வாழ்வுக்காக சொல்லி வைத்ததை நாம் பிறரை குறை கூற உபயோகிக்கிறோம்.
மாறுவோம்...பிறரை மாற்றுவோம்...

No comments:

Post a Comment