Monday, 30 November 2015

குல தெய்வ வழிபாடு ஏன்? xy க்ரோமோசோம்கள்




நம் முன்னோர்கள் அதாவது நம்
தந்தை வழி பாட்டன் பாட்டிமார்கள்
வணங்கி வந்த தெய்வம் தான் நம்குல
தெய்வமாகும்.

இந்த தந்தை வழி பாட்டன்மார் வரிசையில்,
மிகப்பெரிய
ஒழுங்கு ஒன்று இருப்பதை கூர்ந்துகவனித்த
ால் உணரலாம். அதுதான்‘ கோத்திரம்’
என்னும் ஒரு ரிஷியின் வழிவழிப் பாதை.
பிற கோத்திரத்தில் இருந்து பெண்கள்
வந்து இந்த வழிவழி பாதையில் நம்
தாத்தாக்களின் வாழ்க்கை துணையாக
கை பிடித்திருப்பார்கள். எக்காரணம்
கொண்டும் ஒரே கோத்திரத்தில் பெண்
சம்பந்தம் ஏற்பட்டிருக்காது. இதனால்,
ரிஷி பரம்பரையானது சங்கிலி கண்ணி போல
அறுடாமல், ஒரே சகோதரத்துவத்தோடு வந்த
வண்ணம் இருக்கும்.

இதன்படி பார்த்தால், குலதெய்வ
சன்னிதியில் சென்று நாம் நிற்கும் போது,
நம் பரம்பரை வரிசையில் போய் நிற்கிறோம்.
இந்த வரிசை தொடர்பை வேறு எங்காவது,
எந்த விதத்திலாவது உருவாக்க முடியுமா?
அது மட்டுமல்ல. ஒரு மனிதனின்
பிறப்புக்கு பின்னே இப்படியொரு பரம்பரை வரிசை இருப்பதை நினைக்க
கூட தெரியாமல், அதிகபட்சம் இரு பாட்டன்
பாட்டி பேருக்கு மேல் தெரியாமல்
அல்லவா நம் வாழ்க்கைப்போக்கு உள்ளது?



எந்த ஒரு வம்சத்திலுமே 13
வம்சாவளியினருக்கு மேல் அவர்கள்
தொடர்ந்து வணங்கும் குல தெய்வம் இருக்க
முடியாது என்பது தெய்வக்கணக்கு.
ஏதாவது ஒரு கட்டத்தில் வழி வழியாக
வந்தவர்களின் வம்சத்தினருக்கு
குழந்தை பேறு இல்லாமலோ, அகால
மரணங்களினாலோ, ஆண் வம்ச
விருத்தி அடையாமலோ அல்லது ஏதாவது காரணத்தினால்
வம்சம் அழிந்து விடும்.

ஆகவே ஒரு வம்சத்தின் குலதெய்வம்
என்பது 13 வம்சாவளிகளுக்கு
மட்டுமே தொடர்ந்து கொண்டு இருக்கும்.
விஞ்ஞான ரீதியிலேயே இதற்கான
பதிலைக் காண்போமா.....?
விஞ்ஞான முறையில் யோசித்தால்
ஒரு குழந்தை ஆணா,
பெண்ணா என்பதை முடிவு செய்வது ஆணே.

ஒவ்வொரு குழந்தைக்கும் 23+23
க்ரொமொசோம்கள் உள்ளன
என்பதை அறிவோம். இது தாய் மூலம் 23
தந்தை மூலம் 23 என்பதையும் அறிவோம்.
இதிலே பிறக்கப் போகும் குழந்தை ஆணா,
பெண்ணா என்பதைத் தந்தையின்
க்ரொமொசொமே முடிவு செய்கிறது. தாயிடம்
xx க்ரோமோசோம்கள் மட்டுமே இருக்கின்றன.
தந்தைக்கோ, xy என இருவிதமான மாறுபட்ட
க்ரோமோசோம்கள் உள்ளன. ஆணின் y யுடன்
பெண்ணின் x சேர்ந்தால் ஆண்
குழந்தையும் இருவரின் x+x சேர்ந்தால்
பெண் குழந்தையும்
பிறக்கின்றது என்பதை விஞ்ஞானம்
அறுதியிட்டுக் கூறி உள்ளது.

ஒரே கோத்திரத்தில் திருமணம் செய்யக்
கூடாது என்பதன் காரணமும்
இதை ஒட்டியே. ஒரே கோத்திரத்தில் பிறந்த
பெண்ணோ, ஆணோ ஒருவரை ஒருவர்
அறியாதவர்களாகவே இருந்தாலும்
அவர்கள் சகோதர, சகோதரியாகவே கருதப்
படுகிறார்கள் என்பதை நம் சனாதன தர்மம்
திட்டவட்டமாய்க் கூறும். ஏனெனில் பெண்
குழந்தையை உருவாக்கும் x க்ரோமோசோம்
இருவரிடமும் இருக்கையில் ஆண்
குழந்தையை உருவாக்கும் y க்ரோமோசோம்
மட்டும் ஆணிடம் தான் உள்ளது.

பெண்ணிற்கு y க்ரோமோசோம்கள்
தந்தை வழி வருவதில்லை. ஆனால்
அதே ஆண் குழந்தைக்குத் தந்தையிடம்
இருந்து y க்ரோமோசோம்கள் வருகின்றன.
ஏனெனில் அவன் மூலம் தான் வம்சம்
மீண்டும் வளரப் போகின்றது வழி வழியாக.
வழிவழியாக என்பதில்
இருந்தே புரிந்திருக்க வேண்டுமே,
முப்பாட்டனார், பாட்டனார், மகன், பேரன்,
கொள்ளுப் பேரன், எள்ளுப் பேரன் எனத்
தொடர்ந்து இது ஒவ்வொருவரிடமும்
விதைக்கப்பட்டுத் தொடர்ந்து காப்பாற்றப்
பட்டு வருகின்றது. இதன் முக்கியத்துவம்
குறித்து அறிந்தே நம் முன்னோர்கள் ஆண்
குழந்தைகளுக்கு முக்கியத்துவம்
அளித்திருக்கின்றனர்.

இதே முப்பாட்டி, பாட்டி, மகள், பேத்தி,
கொள்ளுப்பேத்தி, எள்ளுப்பேத்தி என x
க்ரோமோசோம்கள் வழி வழியாக
வருவதில்லை. தன் தாயிடம் இருந்தும்,
தந்தையிடம் இருந்தும் x க்ரோமோசோம்கள்
மகளுக்குக் கிடைக்கின்றது. ஆனால்
இயற்கையின் மாபெரும் அதிசயமாக y
க்ரோமோசோம்கள் பெண்களுக்குக்
கடத்தப்படுவதில்
லை என்பதோடு தந்தையிடம் இருந்து மகன்
பெறுவதும் அவன் பரம்பரையின் y
க்ரோமோசொம்கள் மட்டுமே.
ஒரு ஆணால் மட்டுமே இந்த y
க்ரோமோசோம்களைத் தன் மகனுக்கு அளிக்க
முடிகிறது.

பெண்ணிற்கோ எனில் ஆணின் y
க்ரோமோசோம்கள் கிடைப்பதில்லை. ஆணின் y
க்ரோமோசோம்கள் ரொம்பவே பலவீனமான
ஒன்று. மேலும் தொடர்ந்து காலம் காலமாக
இந்த y க்ரோமோசோம்கள் அவரவர்
பரம்பரை ஆண் மக்களுக்குச்
சென்று கொண்டிருப்பதால் இன்னமும்
பலவீனம் ஆகிக் கொண்டிருக்கிறதாம். 13
தலைமுறைக்கு மேல்
அது வலுவிழந்து பயனற்று போய்விடும்.
அதனால் ஆண் வாரிசு ஏற்பட
வாய்ப்பு இல்லை. மேலும்
ஏற்கெனவே பலவீனமான y க்ரோமோசோம்கள்
மேலும் பலவீனம் அடைய
கூடாது என்பதாலும், பரம்பரை நோய்கள்
தொடர கூடாது என்பதாலுமே சொந்த ரத்த
உறவுகளுக்கிடையே திருமணம்
தவிர்க்கப்படுகிறது.

http://vedesh123.blogspot.in/2014/12/blog-post_84.html
http://srikarkuvelayyanar.blogspot.in/2015/05/blog-post.html
http://maghavilvam.blogspot.in/2015/07/blog-post_17.html

பாம்புப்பு பால் ஊற்றுவது ஏன்..??

பாம்புப்பு பால் ஊற்றுவது ஏன் தெரியுமா..??


பாம்பிற்கு பால் ஊற்றுவதன்,முட்டை வைப்பதன் காரணம் என்ன ? உண்மையும்,விஞ்ஞான ரீதியாக ஒத்துக்கொண்ட விடயமும் என்னவென்றால் முட்டையையும் பாலையும் பாம்பு குடிக்காது.பின்னர் எதற்கு புற்றுக்குள் பால் ஊற்றுகிறார்கள்?

ஆதி காலத்தில் மனிதனுக்கு பெரிய பிரச்சனையாக இருந்தது பாம்புகள். காரணம் அடர்ந்த காடுகள்,மனித நடமாட்டம் மிக மிக குறைவு.மனிதனை விட பாம்புகள் அதிகம் காணப்பட்டது .

ஒரு உயிரினத்தை கொல்லும் உரிமை இந்து சமயத்தை பின்பற்றும் மக்களுக்கு இல்லை.அப்போது அவர்கள் அனைத்தையும் மதித்தார்கள்.ஆகவே அதனை கொல்லாமல் அதன் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த முயன்றனர்.

பாம்புகள் இனப்பெருக்கம் மேற்கொள்வது மிகவும் வித்தியாசம். பெண் பாம்பு தான் உடலில் இருந்து ஒரு வித வாசனை திரவத்தை(பரோமோன்ஸ்) அனுப்பும் . அதனை நுகர்ந்து ஆண் பாம்பு பெண் பாம்பை தேடி வரும்.
பெண் பாம்பில் இருந்து வரும் வாசனையை கட்டுப்படுத்தும் வேலையை பால் முட்டையிலிருந்து வரும் வாசனை தடுக்கிறது .ஆகவே அவற்றால் இனப்பெருக்கம் செய்ய முடியாது.

இதன் முழுமையான காரணம் சொன்னால் நிச்சயம் ஒருவரும் பின்பற்ற மாட்டார்கள். அதனாலேயே பயமுறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.


http://www.penmai.com/forums/blogs/sriramajayam/a-1775/

வெற்றிலை போடுவது ஏன்?


பழம்தமிழர் மரபாகட்டும் இந்திய பண்பாடாக இருக்கட்டும் அவை எல்லாமே காரண காரியத்தோடு உருவாக்க பட்டது தான் முடி வெட்டுவதில் இருந்து. மன்னர்கள் முடிசூடுவது வரை கடைப்டிக்கபடும் சடங்குகளில் பல்வேறு வாழ்க்கை தத்துவங்கள் அடங்கி உள்ளன வாழ்க்கையை நெறிபடுத்தும் தத்துவ முறைகள் மட்டுமல்லாது உடலை வளப்படுத்தும் நல்ல காரியங்கள் கூட அதில் அடங்கி இருக்கும்.


தாம்பூலம் தரிப்பதில் கூட இப்படி ஒரு நல்ல விஷயம் அடங்கி இருக்கிறது இது வெற்றிலை போடும் நிறைய பேருக்கு தெரியுமா என்பது நமக்கு தெரியாது பொதுவாக வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு ஆகியவற்றை சரியான விகிதத்தில் கலந்து சுவைக்கும் போது அந்த சுவை உடலையும் மூளையையும் சுறுசுறுப்படைய செய்கிறது அதே நேரம் இதயத்தையும் வலுப்படுத்துகிறது.


மனித உடலுக்கு நோய் ஏன் வருகிறது என்பதற்கான காரணத்தை ஆயுர்வேதம் சொல்லும் போது உடம்பில் உள்ள வாதம் பித்தம் சிலேத்துமம் போன்றவைகள் சரியான விகிதத்தில் இல்லாமல் கூடும் போதோ குறையும் போதோ நோய் வருகிறது. என்று சொல்கிறார்கள் இது முற்றிலும் சரியான காரணமாகும் இந்த மூன்று சத்துக்களும் சரியான கோணத்தில் உடம்பில் அமைந்துவிட்டால் நோய் வராது என்பதை விட நோயை எதிர்த்து நிற்கும் ஆற்றல் உடம்பிற்கு வருகிறது இந்த மூன்று நிலைகளையும் சரியானபடி வைக்க தாம்பூலம் உதவி செய்கிறது.


பாக்கில் இருந்து கிடைக்கும் துவர்ப்பு பித்தத்தை கண்டிக்க கூடியது சுண்ணாம்பில் உள்ள காரம் வாதத்தை போக்கவல்லது வெற்றிலையில் உள்ள உரைப்பு கபத்தை நீக்கி விடும். இப்படி பார்த்தால் தாம்பூலம் போடுதல் என்ற ஒரே பழக்கத்தில் உடம்பில் உள்ள மூன்று தோஷங்களையும் முறைபடுத்தும் நிலை அமைந்து விடுகிறது. இதுமட்டுமல்லாது தாம்பூலத்தோடு சேர்க்கும் ஏலம், கிராம்பு, ஜாதிபத்திரி போன்றவைகள் வாயில் உள்ள கிருமிகளை மட்டுபடுத்துகிறது. ஜீரண சக்தியை அதிகரிக்கவும் செய்கிறது.


ஆக மொத்தம் தாம்பூலம் தரிப்பதில் இத்தனை நல்ல விஷயங்கள் அடங்கி உள்ளன அதனால் தான் நமது விருந்துகளில் வெற்றிலைக்கு முக்கிய பங்கு கொடுக்கபடுகிறது. தாம்பூலம் போடுவது எந்த இடத்தில் கெட்ட பழக்கமாக மாறுகிறது என்றால் வெற்றிலை பாக்கு சுண்ணாம்போடு புகையிலையும் சேரும் போது தீய பழக்கமாக மாறி விடுகிறது. நமது முன்னோர்களின் தாம்பூலத்தில் புகையிலை கிடையாது. புகையிலை என்பது இடையில் சேர்க்க பட்ட தீய பழக்கமாகும்.


இப்போது வயதானவர்களுக்கு இருக்க கூடிய அபாயங்களில் மிக முக்கியமானது எலும்பு முறிவு ஆகும் சிறிதளவு முறிவு ஏற்பட்டு விட்டாலும் முதுமையின் காரணமாக பெரிய பிரச்சனைகளை ஏற்படுத்தி விடுகிறது. பல நேரங்களில் சாதாரண எலும்பு முறிவே மரணத்தை பரிசாக தந்து விடுகிறது. ஆனால் பத்து இருபது வருடங்களுக்கு முன்பு முதியவர்களுக்கு எலும்பு முறிவு என்பது அவ்வளவு சீக்கிரம் ஏற்படாது இதற்கு காரணம் அவர்களிடமிருந்த தாம்பூலம் தரிக்கும் பழக்கமே ஒரு குறிப்பிட்ட அளவு சுண்ணாம்பு சத்து உடம்பிற்கு நேராக கிடைக்கும் போது எலும்புகள் வலுப்பட்டு விடுகிறது.


தாம்பூலம் போடுவதற்கென்று தனிப்பட்ட நெறிமுறையே நமது முன்னோர்களால் வகுக்க பட்டிருக்கிறது. காலையில் சிற்றுண்டிக்கு பிறகு போடும் தாம்பூலத்தில் பாக்கு அதிகமாக இருக்க வேண்டும். காரணாம் மதிய நேரம் வந்து வெப்பம் அதிகமாகும் போது உடம்பில் பித்தம் ஏறாமல் அது பாதுகாக்கும். அதே போல மதிய உணவிற்கு பிறகு சுண்ணாம்பு சத்து அதிகம் எடுத்துகொள்ள வேண்டும் அது உணவில் உள்ள வாதத்தை அதாவது வாயுவை கட்டுபடுத்தும். இரவில் வெற்றிலையை அதிகமாக எடுத்துகொண்டால் நெஞ்சில் கபம் தங்காது இந்த முறையில் தான தாம்பூலம் தரிக்க வேண்டும் என்பது நமது முன்னோர்களின் கட்டளை இதை மீறும் போது தான் சிக்கல் வருகிறது.

Sunday, 29 November 2015

ஆனைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கு ஒரு காலம் வரும்


ஆனைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கு ஒரு காலம் வரும்.
இது ஒரு பழமொழி என்பது நம்மில் பலருக்கும் தெரியும்.


ஆனால் இது ஒரு மருத்துவக் குறிப்பு. இதனின் ௨ட்பொருள் ஆனையைப் பிரித்தால் ஆ + நெய். 
அதாவது ' ஆ ' என்பதற்கு பசு என்று பொருள் ௨ண்டு. அதாவது பசுவின் நெய் என்று பொருள் கொள்ள வேண்டும். 

பசு நெய்யை நாற்பது வயது வரை தாராளமாக ௨ணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். 


நாற்பது வயதுக்குமேல் பசுவின் நெய்யை படிபடியாக குறைத்துக் கொள்ள வேண்டும். நெய்யை குறைக்காமல் சாப்பிட்டு வந்தால் கொழுப்பு சத்து ௨டலில் சேர்ந்து மாரடைப்பு வர வாய்ப்பு அதிகம் உள்ளது.


பூனைக்கு என்பதை பூ + நெய் என்று பிரித்துப் பார்க்கும் போது, பூவில் இருந்து எடுக்கக்கூடிய தேனுக்கும் ஒரு காலம் வரும். அதாவது நாற்பது வயதுக்குமேல் நெய்யை சுருக்கி தேனை ௯டுதலாக சாப்பிட வேண்டும் என்பதன் அர்த்தமாகும். தேன் எளிதில் ஜீரணமாகும் ௨ணவு மற்றும் மருத்துவ குணம் நிறைந்ததாகும்.


பழமொழியின் பொருள் நாற்பது வயது வரை பசும் நெய்யையும், நாற்பது வயதுக்குமேல் தேனையும் சாப்பிட்டு வந்தால் ஆரோக்கியமாக இருக்கலாம். ஆயுளும் வளரும்.

Wednesday, 25 November 2015

இளம் சாதனை தமிழர்கள்


  • காற்று இல்லாமலே மின்சாரம் தயாரிப்பு: கிராமத்து இளைஞரின் அசத்தல் கண்டுபிடிப்பு
சேலம் மாவட்டம், ஜலகண்டாபுரத்தை சேர்ந்த விசைத்தறி தொழிலாளி விஸ்வநாதன், 38. இவர், பத்தாம் வகுப்பு வரை படித்துள்ளார். காற்றாலையை, காற்று இல்லாமல் இயக்க முடியும் என்பதை, இவர், சமீபத்தில் கண்டுபிடித்துள்ளார். தான் கண்டுபிடித்த தொழில் நுட்பத்தை, சென்னை கிண்டியில், மத்திய அரசுக்கு சொந்தமான காப்புரிமை நிறுவனத்தில் பதிவு செய்து, காற்றாலை செயல்படுவது குறித்து விளக்கமளித்துள்ளார். இதற்காக, இவர் காப்புரிமை பெற்றுள்ளார்.காற்று இருந்தால் தான், காற்றாலை இயங்கும். காற்று இல்லாமலே தன்னால் காற்றாலையை இயக்க முடியும் என, பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்த கிராமத்து விசைத்தறி தொழிலாளி, நம்மிடம் பெருமையுடன் கூறினார்.

என்னுடைய தொழில்நுட்பப்படி, காற்றாலையில் நான்கு இறக்கைகள் பொருத்த வேண்டும். மேலும், கீழும் உள்ள இரண்டு இறக்கையின் நடுவில், ஹீலியம் வாயுவை நிரப்ப வேண்டும். காற்றாலையின் இரு பக்கமும் உள்ள இரண்டு இறக்கைகளின் அளவு ஒரே சீராக இருக்கும்படி வைத்துக் கொள்ள வேண்டும்.ஹீலியம் வாயு நிரப்பப்பட்டுள்ள ஒரு இறக்கையில் இருந்து, கீழுள்ள இறக்கைக்கு வாயு செலுத்தப்படும் போது, எடை தாங்காமல், கீழுள்ள இறக்கை மேல் நோக்கி தள்ளப்படும். இதனால், இறக்கைகள் ஒன்றன் பின் ஒன்றாக சுழலத்தொடங்கும். ஹீலியம் வாயு, தானியங்கி சென்சார் மூலம், இரண்டு இறக்கைகளிலும் மாறி மாறி செலுத்தப்படுவதால், இறக்கைகள் தொடர்ந்து சுழன்று கொண்டே இருக்கும். இதனால் காற்று இல்லாமலும், மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும்.ஹீலியம் வாயு ஆபத்து இல்லாதது. நான் கண்டுபிடித்த தொழில் நுட்பத்தை, சென்னை, கிண்டியில் உள்ள மத்திய அரசின் காப்புரிமை நிறுவனத்தில், வரை படங்களின் மூலமும், எழுதியும் காண்பித்தேன். என் கண்டுபிடிப்புக்கு, மத்திய அரசு காப்புரிமை கொடுத்துள்ளது.ஓராண்டுக்குள், நான் அவர்களுக்கு செய்முறை பயிற்சி அளித்து காட்டவேண்டும். நான் விசைத்தறி தொழிலாளியாக இருப்பதால், போதிய பணம் என்னிடம் இல்லை. காற்றாலை அதிபர்கள் என்னை நாடினால், காற்றாலையை காற்று இல்லாமல் இயக்கும் முறையை விளக்கிக் காட்டுவேன்.இவ்வாறு அவர் கூறினார்.

  • தவுட்ல (Rice Bran) இருந்து எரிவாயு (gas) கண்டுபிடிச்ச கடலூரை சேர்ந்த நாகராஜன்:

இவர் பெயர் நாகராஜன், கடலூரை சேர்ந்த இவர் சிதம்பரதுல MSC., Software Engineering final year படிக்கறாரு, இவருடைய கண்டுபிடிப்பு ஒரு மகத்தான வெற்றிய தந்துருக்கு. 

தவுட்ல இருந்து எரிவாயு (gas) கண்டுபிடிச்சிருக்காரு, இரண்டு பக்கம் அடைக்கப் பட்ட தகர டப்பாவில் தவிடு போட்டு மூடி அத சூடு படுத்தினா, காஸ் உருவாகி அந்த டப்பால செட் பன்ன சின்ன குழாய் மூலமா வெலியெற்ற படுது, அதை தீக்குச்சியால் கொளுத்தியபோது நீல நிரத்துல எரிந்தது. இந்த எரிவாயுவை சிலிண்டர்ல அடைத்து அடுப்பெரிக்க பயன்படுத்த முடியும்னு நாகராஜன் தெரிவித்தாரு. ஒரு முக்கியமான தகவல் இந்த புதிய எரிவாயுவ கண்டுப்பிடிச்ச நாகராஜன் ஒரு மாற்றுத்திறனாலி (ஊனம்முற்றவர்). 


  • பெட்ரோல் தேவைப்படாத சூரிய சக்தியால் இயங்கும் 'எக்கோ ஃப்ரி கேப்’

உலகச் சந்தையில் இந்திய மூளைக்கு மதிப்பு அதிகம் என்பதை நிரூபித்து இருக்கிறார் திருப்பூரைச் சேர்ந்த சிவராஜ். எம்.பி.ஏ. பட்டதாரியான இவருக்கு ஆட்டோமொபைல் துறையில் ஆர்வம் அதிகம். தற்போது இவர் கண்டுபிடித்துள்ள, பெட்ரோல் தேவைப்படாத சூரிய சக்தியால் இயங்கும் 'எக்கோ ஃப்ரி கேப்’தான் திருப்பூரின் ஹைலைட். பார்க்க மூன்று சக்கர ரிக்க்ஷாபோல இருந்தாலும்
கிட்டத்தட்ட காரின் ரிச் லுக்கோடு இருக்கிறது இந்த ரிக் ஷா. புவி வெப்பமயமாதல் என்கிற அசுரப் பிடியில் சிக்கி இருக்கும் பூமிக்கு இவர் கண்டுபிடித்து இருக்கும் வாகனம் உண்மையில் ஒரு வரப்பிரசாதம். 'இந்தியா புக்ஸ் ஆஃப் ரெக்கார்ட்ஸ்’ இவருடைய கண்டுபிடிப்பை அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பிரிவின் கீழ் அங்கீகரித்து இருப்பது இன்னும் ஒரு சிறப்பு.
  • TN Student wins British MBA Scholarship
தி ஹிந்து நாளிதழில் வெளி வந்து உள்ள செய்தி.தமிழகத்தை சேர்ந்த குன்னூர் மாணவி ஸ்ருதி இங்கிலாந்தில் நடைப்பெற்ற பேச்சுப் போட்டியில் ஆசிய அளவில் முதல் இடம்பிடித்து பிரிட்டிஷ் ஸ்காலர்சிப் பெற தேர்வாகியுள்ளார்.அவரது ஆங்கிலப் புலமையே அவரை தேர்வு செய்யக் காரணம் என நடுவர்கள் கூறியுள்ளனர்.

  • 12 வயது நிரம்பிய ஷர்வன் மற்றும் 10 வயது நிரம்பிய சன்ஜய் ஆகிய இந்த இருவரும் சொந்த முயற்சியில் புதிய அப்ளிகேகேஷன்களை உருவாக்கியுள்ளனர் 
Chennai Brothers Great Dream to Launch Go Sheet Tablet

இவர்கள் உருவாக்கிய அப்ளிக்கேஷன்கள் கிட்டத்தட்ட 10 ஆயிரம் பேரால் டவுன்லோட் செய்யப்பட்டுள்ளது. இந்த சிறிய வயதிலேயே அப்ளிக்கேஷன் டெவலப்பர்கள் என்ற பெருமையையும் தட்டி சென்றிருக்கிறார்கள்.
இவர்கள் ‘கோ டைமென்ஷன்’ என்ற  நிறுவனத்தை நடத்தி வருகின்றனர்.  தொழில்நுட்பம் சம்மந்தமான விஷயங்களில் இன்றைய குழந்தைகள் எவ்வளவு ஆர்வமாக இருக்கின்றனர் என்பதற்கு, ஷர்வன் மற்றும் சன்ஜய் சகோதரர்கள் பெரிய உதாரணம் என்று கூறலாம்.
  • நாசா நடத்திய போட்டியில் புற ஊதாக்கதிர்கள் பற்றி கட்டுரை சமர்ப்பித்து நெதர்லாந்து சென்று முதல் பரிசை தட்டிக்கொண்டு வந்துள்ளனர் நம் தமிழக மாணவிகளான துர்காவும், திவ்யாவும்.
  • Eco - Power generated when we climbs the steps
  • காற்றிலிருந்து செல்போன் சார்ஜ் செய்யும் கருவி - Wind Operated Mobile Phone Charger


பரமக்குடியை சேர்ந்த பொன்னையாபுரத்தைச்சேர்ந்த பிலவேந்திரன் மகன் பீட்டர்ஜான் காற்றில் எலக்ட்ரிகல் பணி செய்து வரும் இவருக்கு புது கண்டிபிடிப்புகளை தயார் செய்வதில் தனி ஆர்வம். தற்போது அவர் காற்றிலிருந்த மின்சாரம் உருவாக்கி அதன்மூலம் செல்போன் சார்ஜ் செய்யும் கருவியை கண்டுபிடித்துள்ளார்.

இந்த செல்போன் சார்ஜர் கருவியை பயணத்தின்போது ஜன்னல் ஓரம் வைத்தால் போதும். ஜன்னல் வழியாக வரும் காற்று, செல்போன் சார்ஜரில் உள்ள விசிறியை சுற்றும். அந்த விசிறி மின்சாரம் உற்பத்தி செய்யும் டைனமோவை சுற்றும். டைனமோ சுற்றுவதால் ஏசி மின்சாரம் உற்பத்தியாகிறது. செல்போனை டிசி மின்சாரம் மூலமே சார்ஜ் செய்யமுடியும். இதையடுத்து கிடைக்கும் ஏசி மின்சாரத்தை டிசி மின்சாரமாக மாற்ற சிறிய டையோடு பயன்படுத்தப்பட்டுள்ளது.

காற்றின் வேகம் அதிகரிக்கும்போது இதனுடன் இணைத்துள்ள செல்போன் சார்ஜ் ஆகிறது. இதற்கு தயார்செய்ய அதிகபட்சமாக ரூ.350 வரை செலவாகிறது. 


list of materials required:
  1. சைக்கிள் டைனமோ(6 வோல்ட்)- 6V Cycle Dynamo
  2.  தகடால் ஆன விசிறி - Fan wing
  3.  டையோடு(4007) - Diode 1N4007 (AC to DC Converter)
  4.  வயர் - Wire, 
  5. சிறிய பெட்டி - Small Box
ஆகிய பொருட்களை கொண்டு இதை தயாரிக்கலாம். பஸ், ஆட்டோ, கார், பைக் கோன்ற வாகனங்களில் நெடுந்துரம் பயணம் செய்யும் பயணிகளுக்கு இது ஒரு வரப்பிரசாதமாக அமையும் என அவர் கூறினார்.
  • Solar operated UnManned Vehicle controlled by s/w
  • Vehicle runs upto 180 km per 1 unit charging:

Amphibian Car Concept
Engineering students of PRIST University in Thanjayur have designed two types of light weight, eco-friendly and low-cost cars, including an amphibian one capable of travelling on road and floating on water. While one type of car runs on petrol and LPG, the other one is an electric car operated using a battery tapping solar energy, capable of traveling on road and water.
Amphibian Car Concept 
Amphibian Car Concept

Both the cars have been fabricated using steel, Aluminium alloys, plastics and other locally available material and cost below Rs 35,000, researchers at Hi-Tech Project Industries, Tarangambadi said.
The electric car was designed by Rajendra Kumar, Nitesh Kumar, Sanjay Kumar, Abhishek Raj, Roopak Kumar, Sanjay Kumar Yadav and Chandrakanth. The car was capable of running on road as well as on water with a slight modification and could carry two persons, researchers said.
When it runs on water, it will act more like a boat. The car can run at a top speed of 30 kmph on road and at 15 kmph on water and is totally eco-friendly, they said.
The 110-CC petrol/LPG car weighing just 135-kg was designed by Alok Kumar, Amith Kumar, Ananth Kumar and Ajay Kumar. The car runs at a top speed of 50 kmph and is very fuel efficient at 65 km per litre of petrol,they claimed. When running on LPG, it gives a mileage of 110 km per kg.
Gear system and suspension mechanism in both the vehicles, had been meticulously designed, said Jayaraj, Murali and Balasundaram, researchers at Hi-Tech Project Industries.
District Collector T Munusamy visited Tarangambadi today and witnessed a demonstration of the cars.


  • 25-kg single-seater 'Nano Bike' that give mileage of 97kmpl of petrol 
The students of PRIST University, Thanjavur, Tamil Nadu, have designed a 25-kg single-seater 'nano' motorcycle that could give a mileage of 97 km per litre of petrol.

 
The prototype is a lightweight, 20cc motorbike built for one. The students claimed the vehicle can touch a maximum speed of 45 kmph and carry one person.  
They have fabricated the bike using steel, aluminium alloy and plastic. The main frame is made of steel while the wheels were made of aluminium alloy. The petrol tank is made of Plastic. To reduce noise, belt drive has been used instead of the traditional chain drive mechanism, the students said. 


 
Its petite size (137cm x 65cm; L x H) makes parking in crowded locations a hassle-free experience. The students claimed that commercial production of the motorcycle was viable and would cost only about Rs 8,000 per unit. 


  • First electric car with wind and solar energy developed by PRIST University students. Easy to use, No Maintainance, 0 Cost, Non Polluted Car




  • தென்னை மரம் ஏற நவீன கருவி: கோவை இளைஞருக்கு அங்கீகாரம்
 

தென்னை மரம் ஏற, நவீன கருவி கண்டுபிடித்த, கோவை நரசிம்மநாயக்கன்பாளையத்தை சேர்ந்த   வெங்கட் என்ற ரங்கநாதன்  இளைஞருக்கு, தனது படைப்பை டில்லி ஜனாதிபதி மாளிகையில் நடந்த கண்காட்சியில், ஜனாதிபதி முன் பார்வைக்கு வைக்கும், வாய்ப்பு கிடைத்தது. இக்கருவியால், மரங்களுக்கு காயம் ஏற்பட வாய்ப்பு இல்லை. மேலும், மரத்தின் சுற்றளவை பொறுத்து, 15 அங்குலம் முதல் 50 அங்குலம் வரை, கருவியை அகலப்படுத்த முடியும்.


இக்கருவிக்கு, பெங்களூரூ விவசாய பல்கலை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இக்கருவியின் உதவியால் தற்போது, இந்தியா மட்டுமல்லாமல், வெளிநாடுகளில் தென்னை, பனை மரங்களில் காய்களை பறிக்கும் பணி, நடந்து வருகிறது.
இக்கருவியை கொண்டு, சில்வர் ஓக், தேக்கு போன்ற மரங்களில் அமர்ந்தவாறு, கிளைகளை வெட்டலாம். இக்கருவி 11 கி.கி., எடை கொண்டது. 100 கி.கி., வரையுள்ள எடையை தாங்கக் கூடியது. ஏழு ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

வெங்கட் கூறியதாவது:

குஜராத் மாநிலம், ஆமதாபாத் நகரில் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையின் கீழ் தேசிய கண்டுபிடிப்பு ஆணையம் செயல்பட்டு வருகிறது. இது, நாடு முழுவதும் அடிப்படை கண்டுபிடிப்பாளர்களை கண்டறிந்து, ஊக்குவித்து வருகிறது. இவ்வமைப்பு, சமீபத்தில் நாடு முழுவதும் உள்ள 39 ஆயிரம் கண்டுபிடிப்பாளர்களில் விவசாயம், தொழில்நுட்பம் உள்ளிட்ட ஏழு பிரிவுகளின் கீழ், 45 கண்டுபிடிப்பாளர்களை தேர்வு செய்தது. அவர்களின் கண்டுபிடிப்புகள் தொடர்பான கண்காட்சியை, டில்லி ஜனாதிபதி மாளிகை வளாகத்தில் நடத்தியது. இதில், ஆசிய கண்டத்தில் உள்ள, முக்கிய அறிவியல் கண்டுபிடிப்பாளர்கள் கலந்து கொண்டனர். இதை, ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் பார்வையிட்டார். இதில், எனது தென்னை மரம் ஏறும் கருவியான "டிரீ வாக்கர்' க்கு 28வது இடம் கிடைத்தது. இதை, இந்திய அரசு எனக்கு வழங்கிய மிகப்பெரிய அங்கீகாரமாக கருதுகிறேன். எனது கண்டுபிடிப்புக்கு சான்றிதழ், 10 ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் காப்புரிமை (பேட்டர்ன் ரைட்ஸ்) ஆகியவற்றை இந்திய அரசு வழங்கியது

  • Symbol of Indian currency invented by a Tamilnadu student
Tamilian from Kallakurichi designed symbol for Indian currency, D. Udaya Kumar who has studied at the School of Architecture, Anna University, Chennai and finished his Master's at IIT, Bombay.



Currency Symbol for Indian Rupee

Mr. Udaya Kumar invented the symbol for Indian currency admitted that, he had referred many regional language transcripts and the Devanagari script.

Now that, the Indian currency symbol has a blend of Devanagari "Ra" and the Roman "R", it joins the elite club of the US Dollar, the European Euro, the British Pound Sterling and the Japanese Yen.
The two horizontal lines and the band between represent the Indian Flag.

Ref : http://online-raj.blogspot.in/2012/05/blog-post.html

கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்

மன்னராட்சி காலத்தில் ஊரில் கோயில் கோபுரத்தை விட உயரமாக எந்தக் கட்டிடமும் இருக்கக் கூடாது என்று ஒரு எழுதாத சட்டம் இருந்ததாம். என்ன காரணம்? தேடிப் பார்ப்போம் வாருங்கள்.

கோயில்களையும் உயரமான கோபுரங்களையும் அதன் மேல் இருக்கும் கலசங்களையும் பார்த்திருப்பீர்கள். அவற்றுக்கு பின்னால் இருக்கும் ஆன்மிகம் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால், அதற்குப் பின்னால் எவ்வளவு பெ
ரிய அறிவியல் ஒளிந்திருக்கிறது என இப்போது தான் தெரிந்தது. கோபுரத்தின் உச்சியில் தங்கம், வெள்ளி, செப்பு அல்லது ஐம்பொன்னால் செய்யப்பட்ட கலசங்கள் இருக்கும். இக்கலசங்களிலும் அதில் கொட்டப்படும் தானியங்களும், உலோகங்களும் மின்காந்த அலைகளை ஈர்க்கும் சக்தியினை (earth) கலசங்களுக்கு கொடுக்கின்றன. (நெல், கம்பு, கேழ்வரகு, திணை, வரகு, சோளம், மக்காசோளம், சாமை, எள்)ஆகியவற்றை கொட்டினார்கள். குறிப்பாக வரகு தானியத்தை அதிகமாக கொட்டினார்கள். காரணத்தை தேடிப்போனால் ஆச்சரியமாக இருக்கிறது, "வரகு" மின்னலை தாங்கும் அதீத ஆற்றலை பெற்றுள்ளது என இப்போதைய அறிவியல் கூறுகிறது. அப்போது எந்த கல்லூரியில் படித்தார்கள் என தெரியவில்லை!!.

இவ்வளவு தானா... இல்லை, பனிரெண்டு வருடங்களுக்கு ஒருமுறை குடமுழுக்கு விழா என்ற பெயரில் "கலசங்களில் இருக்கும் பழைய தானியகள் நீக்கப்பட்டு புதிய தானியங்கள் நிரப்பபடுகிறது", அதை இன்றைக்கு சம்பரதாயமாக மட்டுமே கடைபிடிக்கிறார்கள். காரணத்தை தேடினால், அந்த தானியங்களுக்கு பனிரெண்டு வருடங்கள் தான் சக்தி இருக்கிறது. அதன் பின்பு அது செயல் இழந்து விடுகிறது!! இதை எப்படி ஆராய்ந்தார்கள்!!!. அவ்வளவு தானா அதுவும் இல்லை, இன்றைக்கு பெய்வதை போன்று மூன்று நாட்களா மழை பெய்தது அன்று? தொடர்ந்து மூன்று மாதங்கள் பெய்தது, ஒருவேளை தானியங்கள் அனைத்தும் நீரில் மூழ்கி அழிந்து போனால், மீண்டும் எதை வைத்து பயிர் செய்வது? இவ்வளவு உயரமான கோபுரத்தை நீர் சூழ வாய்ப்பே இல்லை, இதையே மீண்டும் எடுத்து விதைக்கலாமே!!!

ஒரு இடத்தில் எது மிக உயரமான இடத்தில் அமைந்த இடி தாங்கியோ அது தான் முதலில் "எர்த்" ஆகும். மேலும், அது எத்தனை பேரைக் காப்பாற்றும் என்பது அதன் உயரத்தைப் பொறுத்தது. அடிப்படையில் கலசங்கள் இடிதாங்கிகள். உதாரணமாக கோபுரத்தின் உயரம் ஐம்பது மீட்டர் என்றால் நூறு மீட்டர் விட்டம் அடைக்கும் பரப்பில் எத்தனை பேர் இருந்தாலும் அவர்கள் இடி தாக்காமல் 
 காக்கப்படுவார்கள். அதாவது சுமார் 7500 சதுர மீட்டர் பரப்பில் இருக்கும் மனிதர்கள் காப்பாற்றப்படுவார்கள் !!!!. சில கோயில்களுக்கு நான்கு வாயில்கள் உள்ளன, அது நாலாபுறமும் 7500 சதுர மீட்டர் பரப்பளவை காத்துக்கொண்டு நிற்கிறது!!! இது ஒரு தோராயமான கணக்கு தான், இதை விட உயரமான கோபுரங்கள், இதை விட அதிகமான பணிகளை சத்தமில்லாமல் செய்து வருகின்றது!! பிரம்மிப்பு !!!


அதெப்படி என்று கேட்கிறவர்கள் படத்தைப் பார்க்கவும். இதை எல்லாம் பார்க்க போனால் "கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்" என்ற பழமொழி தான் நினைவுக்கு வருகின்றது.

சும்மாவா சொன்னாக பெரியவங்க !!!
 

அஷ்டமி, நவமி என்றால் என்ன?

ஒரு மாதத்திற்கு usually ஒரு அமாவாசை, ஒரு பவுர்ணமி வரும். அந்த இரு நிகழ்ச்சிகளும் பூமி மற்றும் சந்திரனின் சுழற்சியால் ஏற்படுவதை நீங்கள் அறிவீர்கள். நாட்களைச் சுட்டிக்காட்ட அமாவாசையிலிருந்து அல்லது பவுர்ணமியிலிருந்து எத்தனையாவது நாள் என்று குறிப்பிட்டுக் காட்டவே பிரதமை முதல் சதுர்த்தசி வரை 14 நாட்களுக்கும் பெயரிட்டிருக்கிறார்கள். பெயர் தமிழில் வைத்திருந்தால் விளங்கும். சமஸ்கிருதம் ஆதிக்கத்தில் இருந்தபோது தமிழ் வருடங்களின் பெயரை கூட பொருள் தெரியாத வடமொழியில் அல்லவா வைத்து விட்டார்கள்? நாமும் அதை மாற்ற மனமின்றி வைத்துக் கொண்டு திண்டாடுகிறோம். அதே போல் தான் நாட்களின் பெயர்களும் பின்வருமாறு வடமொழியில் உள்ளன என்று விளக்கினேன்.

1. பவுர்ணமி, அமாவசைக்கு அடுத்த நாள் பிரதமை பிரதமர் என்றால் முதல்வர் என்று பொருள். அதுபோல் பிரதமை என்றால் முதல் நாள் (1st day after fullMoon or Nomoon day)

2. துவிதை என்றால் இரண்டாம் நாள். தோ என்றால் இரண்டு. துவிச் சகர வண்டி என்று சைக்கிளைக் கூறுவது தங்களுக்கு தெரியும்.

3. திரிதியை என்றால் மூன்றாம் நாள் திரி என்றால் மூன்று அல்லவா? 

4. சதுர்த்தி என்றால் நான்காம் நாள் சதுரம் நான்கு பக்கங்கள் கொண் டது.

5. பஞ்சமி என்றால் அய்ந்தாம் நாள் பாஞ்ச் என்றால் அய்ந்து எனப் பொருள்.

6. சஷ்டி என்றால் ஆறாம் நாள்

7. சப்தமி என்றால் ஏழாம் நாள். சப்த ஸ்வரங்கள் என ஏழு ஸ்வரங்களைக் கூறுவதில்லையா?

8. அஷ்டமி என்றால் எட்டாம் நாள். அஷ்டவக்கிரம் என்று எட்டு கோணல்களைக் கூறுவதையும் அஷ்ட லட்சுமி என்றெல்லாம் கூறக் கேட்டிருக்கிறோம்.

9. நவமி என்றால் ஒன்பதாம் நாள். நவ என்றால் ஒன்பது என்றும் நவ கிரகங்கள் என்பதும் தங்களுக்குத் தெரியும். 

10. தசமி என்றால் பத்தாம் நாள். தஸ் என்றால் பத்து அல்லவா? தாரம் என்ற கடவுளின் அவதாரங்களைக் கூறக் கேட்டிருக்கிறோம்.

11. ஏகாதசி என்றால் பதினொன்றாம் நாள். ஏக் என்றால் ஒன்று தஸ் என்றால் பத்து இரண்டின் கூட்டுத் தொகை பதினொன்று. 

12. துவாதசி என்றால் பன்னிரண்டாம் நாள். தோ/துவி என்றால் இரண்டு தஸ் என்றால் பத்து எனவே இதன் கூட்டுத்தொகை பன்னிரண்டு ஆகும்.

13. திரியோதசி என்றால் பதிமூன்றாம் நாள். திரி என்றால் மூன்று + தஸ் என்றால் பத்து ஆகப் பதிமூன்று. 

14. சதுர்த்தசி என்றால் பதினான்காம் நாள். சதுர் (சதுரம்) என்றால் நான்கு அத்தோடு தஸ் என்ற பத்து சேர்த்தால் பதினான்கு என ஆகும்.

சதுர்த்தசிக்கும் அடுத்தது பவுர்ணமி அல்லது அமாவாசை ஆகி விடும். இப்படி நாட்களைக் சுட்டிக் காட்ட வைத்த பெயர்களில் என்ன வேறுபாடு இருக்கிறது? அமாவாசை அல்லது பவுர்ணமிக்குப் பிறகு வரும் எட்டாம் நாளும் ஒன்பதாம் நாளும் கெட்டவை என்பதற்கு ஏதேனும் அறிவியல் பூர்வமான விளக்கம் இருந்தால் கூறுங்கள்.  


அட்சய திரிதியையில் தங்கம் வாங்க அறியாத மக்கள் தங்கக் கடைக்கு ஓடுவதும் அறியாமையே???

க்ஷயம் என்றால் தேய்வு (-க்ஷயரோகம் = எலும்புருக்கு நோய் அக்ஷயம் என்றால் வளர்ச்சி அதாவது வளர்பிறையில் அமாவாசையிலிருந்து மூன்றாம் நாள் திரிதியை என்று ஏற்கெனவே விளக்கிக் கொண்டோம். அதாவது வளர்பிறையில் மூன்றாம் நாள் இதில் என்ன சிறப்பு இருக்க முடியும்? இது தங்க வியாபாரிகள் சேர்ந்து செய்த விற்பனை உத்தியே ஆகும்.

இந்திய அளவில் உள்ள பஞ்சாங்கங்களின்படி ஒரு மாதத்திற்கு எவ்வளவு கெட்ட நேரம் வருகிறது??

1. வாரத்தில் செவ்வாய்,சனி நல்ல காரியம் துவங்கக்கூடாது - (10 நாட்கள்).
2. மாதத்தின் அஷ்டமி,நவமி நன்மைக்கு உகந்தது அல்ல - (4 நாட்கள்).
3. பாட்டிமுகம் நாளில் நல்லது செய்வது நல்லதில்லை - (2 நாட்கள்).
4. ஒரு மாதத்தில் வரும் ராகு காலம், எமகண்டம்,குளிகை இவற்றின் கூட்டுத்தொகை (3 முக்கால்) 
5. தவிர கௌரி பஞ்சாங்கத்தின் படி நன்மை செய்ய தகாத நாட்கள் - 2 நாட்கள்.

ஆக மொத்தத்தில் ஒரு மாதத்தில் 21 முக்கால் நாட்கள் நாம் நல்லது செய்ய பயந்தால் எப்படி உருப்பட...எப்படி முன்னேற...